பாரத ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ) இந்தியாவுக்கு பிரத்தியேகமாக டிஜிட்டல் கரன்சி வெளியிடப்படும் என மத்திய அரசு பட்ஜெட் 2022-23-ல் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். சென்ட்ரல் பேங்க் டிஜிட்டல் கரன்சி (CBDC) என்கிற கரன்சியை.ஐ நடப்பு நிதி ஆண்டுக்குள் ஆர்.பி வெளியிட உள்ளது.
கிரிப்டோகரன்சிக்கும், மத்திய அரசு வெளியிட இருக்கும் சென்ட்ரல் பேங்க் டிஜிட்டல் கரன்சிக்கும் என்ன வித்தியாசம், இந்த சி.பி.டி.சி வெளியீட்டால் ஏற்படப்போகும் நன்மைகள் என்ன, கிரிப்டோகரன்சியைப் போலவே, சி.பி.டி.சி-யும் வர்த்தகம் ஆகுமா, அதன் மதிப்பு தினமும் ஏற்ற இறக்கத்துக்கு உள்ளாகுமா என்பதற்கு ஜியோட்டஸ் கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்சின் நிறுவனர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி (சி.இ.ஓ) திரு. அர்ஜுன் விஜய் விளக்கி உள்ளார்.
“இந்திய அரசாங்கத்தால் வெளியிடப்படும் டிஜிட்டல் கரன்சிதான் சென்ட்ரல் பேங்க் டிஜிட்டல் கரன்சி. ஆர்.பி.ஐ இந்த கரன்சியை வெளியிடும். பிட்காயின், எரித்ரியம் போன்ற கிரிப்டோகரன்சியை யார் வெளியிடுகிறார்கள், யார் அதை நிர்வகிக்கிறார்கள் என்கிற விவரம் தெரியாது.
கிரிப்டோகரன்சிகள் அளிப்பு (சப்ளை), தேவைக்கு (டிமாண்ட்) ஏற்ப மதிப்பு மாறக்கூடியவை. ஆனால், ஆர்.பி.ஐ-ன் சி.பி.டி.சி-யானது கிரிப்டோகரன்சியைப் போல வர்த்தகம் ஆகாது. இது உண்மையான ரூபாய் நோட்டுகளுக்கான டிஜிட்டல் வடிவம் மட்டுமே. 1000 ரூபாய் நோட்டின் மதிப்பு எப்படி மாறாதோ அதேமாதிரி, இந்த சி.பி.டி.சி-யின் மதிப்பும் மாறாது. ஆர்.டி.ஜி.எஸ் போல, என்.இ.எஃப்.டி போல, சமீபத்தில் அறிமுகமாகி, தற்போது மக்களிடையே மிகப் பெரிய வெற்றியை அடைந்திருக்கும் யு.பி.ஐ தொழில்நுட்பம் போலத்தான் இந்த சி.பி.டி.சி-யும். பிட்காயின் வர்த்தகத்துக்கு பயன்படுத்தப்படும் பிளாக் செயின் தொழில்நுட்பத்தைக் கொண்டு இந்த டிஜிட்டல் கரன்சியை மத்திய அரசாங்கம் உருவாக்க இருக்கிறது.
ரூபாய் நோட்டுகளைக் கொண்டு தேவைகளை நிறை வேற்றிக்கொள்வது போல, இந்த டிஜிட்டல் கரன்சியைக் கொண்டும் நமது தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளலாம்” என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக