2022-2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்.
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் அடைந்ததை `அம்ரித் மஹோத்சவ்’ என தற்போது கொண்டாடி வருகிறோம் . அதேபோல இந்த 75-லிருந்து 100 ஆண்டுகள் வரையிலான காலத்தை, கடந்த ஆண்டு அம்ரித் கால் எனக் குறிப்பிட்டார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த 25 ஆண்டுகளில் இந்தியா அனைத்து துறைகளிலும் முன்னேறி, சுயசார்புத் தன்மையை அடையவேண்டுமென்பதுதான் இதன் இலக்கு.
இந்த 25 ஆண்டுகால இலக்குக்கு ஏற்பவே, 2022-23 பட்ஜெட் இருக்கும் எனவும், எதிர்கால வளர்ச்சியை மனதில் வைத்தே அரசின் கொள்கைகள் இருக்கும் என்பதையும் குறிப்பிட்டார்.
மற்றொரு முக்கியமான அம்சம், உள்கட்டமைப்பு திட்டங்களுக்குத் தேவைப்படும் மூலதனச் செலவினங்களை (Capital Expenditure - Capex) ரூ. 5.54 கோடியிலிருந்து 7.5 லட்சம் கோடிடாக (35.4%) உயர்த்தி இருப்பதாகும்.
இது ஏன் முக்கியம்?
ஒரு நாட்டின் பொருளாதாரம் (ஜி.டி.பி) மந்த நிலையிலிருந்து மீண்டு வர, மூலதனச் செலவுக்கு செலவிடும் தொகை அதிகரிக்க வேண்டும்.
புதிய சாலை, ரயில்வே திட்டங்கள், நாட்டின் பிற உள்கட்டமைப்பு திட்டங்கள் போன்றவை. இதனால், நாட்டில் வேலைவாய்ப்பு பெருகும்; வருங்காலத்தில் மத்திய மாநில் அரசுக்கும் இந்தக் கட்டமைப்புகளிலிருந்து வருமானம் வரும்.
உள்கட்டமைப்பு, தகவல் தொழில்நுட்பம், மின்சாரம் உள்ளிட்ட துறைகளும் வளரும். இறுதியாக பொருளாதாரமும் உயரும். மத்திய மாநில அரசுகளைப் போலவே தனியார் நிறுவனங்களும் தங்கள் மூலதனச் செலவுகளை அதிகப்படுத்தினால் நாட்டுக்கு இன்னும் நல்லது.
அந்த வகையில் 2022-23 ஆம் நிதியாண்டுக்கான மூலதனச் செலவை மத்திய அரசு 35% அதிகம் உயர்த்தியிருக்கிறது அரசு. குறிப்பாக கிராமங்களின் டிஜிட்டல் தொடர்பை மேம்படுத்தும் திட்டங்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக