பிட்காயின், எதீரியம் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சிகளிலிருந்து கிடைக்கும் மூலதன லாபத்திற்கு 2022-2 நிதியாண்டு முதல் 30% வரி விதிகப்படுகிறது.
மேலும், கிரிப்டோ கரன்ஸி வர்த்தகம் முஉலம் லாபம் போது அதை அரசாங்கம் அறிந்துகொள்ளும் விதமாக 1% டி.டி.எஸ் (TDS) பிடித்தம் செய்யப்படும். வருடத்துக்கு ரூ. 10,000க்கு மேல் இருந்தால், 1% வருமான வரிப் பிடித்தம் (TDS) – இது ஜூலை 1, 2022 முதல் அமலுக்கு வருகிறது.
அப்படியென்றால் கிரிப்டோ கரன்சிகளை இந்தியா அங்கீகரித்துவிட்டதா என்று அர்த்தமா>
`இல்லவே இல்லை’ என்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். கிரிப்டோ கரன்சிகளை எப்படி நெறிமுறைப்படுத்தலாம் என்பதுகுறித்து, சம்பந்தபட்ட துறையினரும் நிபுணர்களும் ஆலோசனை செய்து வருகிறார்கள். `அவர்கள் ஒரு முடிவுக்கு வந்த பின் தான் கிரிப்டோ குறித்த நிலைப்பாட்டை அறிவிக்கமுடியும்” என்று சொல்கிறார்
கிரிப்டோ கரன்ஸியில் யார் யார் வர்த்தகம் செய்கிறார்கள், எவ்வளவு பணம் புழங்குகிறது என்பதை அறியவும், பிற முதலீடுகளைப் போலவே அதன் லாபத்தையும் வருமானமாகக் கணக்கிட்டு வரி விதிப்பதும்தான் இந்த நடவடிக்கையின் நோக்கம்.
ராகேஷ் ஜூன் ஜூன் வாலா
‘கிரிப்டோ கரன்ஸி ஒருநாள் பொய்த்து போகும்; என முன்னணி பங்கு முதலீட்டாளர் ராகேஷ் ஜூன் ஜூன் வாலா கருத்து தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக