எலெக்ட்ரிக் வாகனங்களின் பேட்டரி தீர்ந்துவிட்டால், அதற்கு பல மணி நேரங்கள் சார்ஜ் போட்டபிறகே மீண்டும் பயன்படுத்த முடியும். இந்த சிக்கலைத் தீர்க்க வந்ததுதான் பேட்டரி ஸ்வாப்பிங் Battery Swapping நடைமுறை.
இதன்படி, சார்ஜிங் ஸ்டேஷனில் சார்ஜ் தீர்ந்த பேட்டரியைக் கொடுத்துவிட்டு, புதிய பேட்டரியை மாட்டிக்கொண்டு நிற்காமல் பயணத்தை தொடரலாம். பயன்படுத்திய மின்சாரத்திற்கு மட்டும், பெட்ரோல் போலவே கட்டணம் செலுத்தவேண்டும்.இந்த நடைமுறை இன்னும் பரவலாகவில்லை. இந்நிலையில், விரைவில் இதற்கான விதிமுறைகளை வகுத்து, எலெக்ட்ரிக் நிறுவனங்கள் மற்றும் பேட்டரி தொழில்நுட்ப நிறுவனங்கள் இணைந்து செயல்பட மத்திய அரசு உதவி செய்யும் என பட்ஜெட் 2022-23 -ல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கவும் திட்டமிடப்பட உள்ளது.
நாட்டின் சூரிய சக்தி மின்சார உற்பத்தியில் புதிதாக 2,80,000 MW மின்சாரம் தயாரிப்பதற்கான உள்கட்டமைப்புகள் உருவாக்கப்படுகிறது.
இதற்காக உற்பத்தியுடன் தொடர்புடைய மானியம் (Production-linked incentive) திட்டத்தின்கீழ் 19,500 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக