உலக தங்க கவுன்சில் (World Gold Council - WGC), தலைமை நிர்வாக அதிகாரி சோமசுந்தரம், `` 2021 ஆம் ஆண்ல் உலக அளவில் தங்கத்தின் தேவை 10% அதிகரித்து 4,021 டன்களாக உயர்ந்துள்ளது. இந்தியாவின் மொத்த தங்க தேவை 2021 ஆம் ஆண்டில் 797.3 டன்களாகனாக உயர்ந்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டில் 446.4 டன்னாக இருந்த தங்கத்தின் தேவை, 2021 ஆம் ஆண்டு 79 சதவிகிதம் அதிகரித்துள்ளது. எதிர்பார்த்ததைவிட 2021 நான்காவது காலாண்டில் (அக்டோபர், நவம்பர், டிசம்பர்) தேவை மக்களிடையே கணிசமாக அதிகரித்தது.இதை அடு, தங்கத்தின் மொத்த தேவை மற்ற மூன்று காலாண்டுகளைவிட இறுதி காலாண்டில் அதிகரித்தது. அதாவது, ஆண்டின் பாதியில் கோவிட் பாதிப்பு ஊரடங்கு கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது, கொரானா தடுப்பூசி போடுவதில் ஏற்பட்ட முன்னேற்றம் மற்றும் பொருளாதார வளர்ச்சி போன்றவை தங்க நுகர்வோரின் உணர்வை கணிசமாக மாற்றியுள்ளது
ஊரடங்கு மற்றும் தொழில் முடக்கத்தின் போது நிறுத்தி வைக்கப்பட்ட கல்யாணங்களுக்காக ஊரடங்கு தளர்வின்போது அதிகமாக தங்கத்தை வாங்கி இருக்கிறார்கள். நடப்பு 2022 மற்றும் வரும் ஆண்டுகளில் தங்கம் மிகவும் முக்கியமான முதலீட்டுப் பிரிவாக மாறலாம். டிஜிட்டல் காகித தங்க முதலீடும் அதிகரித்துள்ளது” என்றார்.
இந்தியா 2020 ஆம் ஆண்டில் 349.5 டன் தங்கத்தை இறக்குமதி செய்துள்ளது. இந்த நிலையில், இது 2021 ஆம் ஆண்டில் 924.6 டன்களாக உயர்ந்திருக்கிறது.