மொத்தப் பக்கக்காட்சிகள்

இந்தியாவின் முதல் இ.எஸ்.ஜி புதிய பங்கு வெளியிடும் ஃபேப்இந்தியாவின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன தெரியுமா?

 

இந்தியாவின் முதல் இ.எஸ்.ஜி ஐ.பி.ஓ (ESG IPO) –  ஃபேப்இந்தியா லிமிடெட் (Fab india Limited - “Fabindia” or the “Company”) வெளியிட திட்டமிட்டுள்ளது.  ESG  என்பது Environmental, Social, and Governance (சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் நிர்வாகம்) என்பதன் சுருக்கம் ஆகும்.

இ.எஸ்.ஜி புதிய பங்கு வெளியிட ஃபேப் இந்தியா லிமிடெட் நிறுவனம், புதிய பங்குகள் வெளியிட DRHP - Draft Red Herring Prospectus) விண்ணப்பத்தை இந்தியப் பங்குச் சந்தையை நெறிப்படுத்தும் செபி அமைப்பிடம் சமர்பித்துள்ளது. 

இந்தப் புதிய பங்கு வெளியீடு மூலம் 500 கோடி ரூபாய் திரட்டப்படுகிறது. இது தவிர பங்குச் சந்தையில் ஆஃபர் பார் சேல் (offer for sale) என்கிற முறையில் ஏற்கனவே பங்கு முதலீட்டாளர்களாக இருப்பவர்களின் 25,050,543  பங்குகள் (Equity Shares) விற்பனை செய்யப்பட இருக்கிறது.


 


·   சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் நிர்வாக அளவீடுகள் போன்றவற்றில்  முழு உத்தியை செலுத்தும் பகுதிகளை அடையாளம் காண ஃபேப்இந்தியா ஒரு விரிவான பொருள் மதிப்பீட்டை (comprehensive materiality assessment) நடத்தியது. அதன் சுற்றுச்சூழல் செயல்திறனை  மேம்படுத்த, ஃபேப்இந்தியா தனது வணிகத்தை நேரடியாகப் பாதிக்கும் பகுதிகளில்  கூடுதல் கவனம் செலுத்தி செயல்படுகிறதுஅதன் கடைகள், அலுவலகங்கள் மற்றும் கிடங்குகளில் உள்ள  எரிசக்தி நுகர்வு, அதன்  உற்பத்தி பொருள்களை சிப்பம் (Pack) செய்யப் பயன்படுத்தப்படும் பொருட்களின் அளவு மற்றும் அதன் செயல்பாடுகளில் முதன்மையாக நிராகரிக்கப்பட்ட பேக்கேஜிங் பொருட்களை உருவாக்கும் கழிவுகள் போன்ற ஜி.ஆர்.ஐ (GRI) தொடர்பான குறிகாட்டிகளை மதிப்பிடுவது இதில் அடங்கும்.

 

·   நிறுவனத்தின்  தொலை நோக்கம் அனைத்து பங்குதாரர்களுக்கும் பகிரப்பட்ட மதிப்பை உருவாக்குவதில் அதன் அர்ப்பணிப்பை தெளிவாக பிரதிபலிக்கிறது. அடிப்படையில், அதன்  தொலை நோக்கம் இந்தியாவின் கைவினைஞர்களையும் அவர்களின் கைவினை வடிவங்களையும் மேம்படுத்துவதாகும். மேலும் சமூக, சுற்றுச்சூழல் மற்றும் நிர்வாகத் தாக்கங்களை அதன் வணிக இலக்குகளில் ஆழமாக ஒருங்கிணைக்க முயற்சிக்கிறது.

 

 

·   ஃபேப்இந்தியா நிறுவனம், 50,000-க்கும் மேற்பட்ட கைவினைஞர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி இருக்கிறது. அவர்களில் சுமார் 64% கைவினைஞர்கள் பெண்கள் ஆவார்கள்.  அவர்கள் தங்கள் சமூகத்தில் உள்ள மற்றவர்களுக்கும் உதவுகிறார்கள். 70% பேர் வீட்டிலிருந்து வேலை செய்கிறார்கள்.

 

·   இந்த நிறுவனம் 2,200க்கும் மேற்பட்ட விவசாயிகளுடன் நேரடியாகவும், 10,300க்கும் மேற்பட்ட விவசாயிகளுடன் அசோசியேட்ஸ் (Associates) மூலமாகவும் நிலையான விவசாய நடைமுறைகளை உருவாக்கி உள்ளது. உலகளாவிய இயற்கை சான்றிதழைப் (Global Organic Certification) பெற்று தருவதில் விவசாயிகளுக்கு  உதவி செய்வது மூலம் நச்சுத்தன்மையற்ற விவசாய கலாச்சாரத்தை உருவாக்க ஃபேப்இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது.

·   ஃபேப்இந்தியா நிறுவனம்,  கைவினைஞர்களுக்கு மூலப்பொருட்களை வீட்டிற்கே வழங்குகிறது; மேலும்,  உற்பத்தி செய்து, விற்பனைக்கு தயாராக இருக்கும் பொருள்களை வீட்டிற்கு வந்து  எடுத்துச் செல்கிறது.

 

·   ஃபேப்இந்தியாவின் ஆடைகளில் தேங்காய் அல்லது கடற்பாசியிலிருந்து செய்யப்பட்ட பொத்தான்கள் வரை 95-98% இயற்கை பொருட்களாக உள்ளன  இதேபோல், மரச்சாமான்கள்   உற்பத்திக்கு திட மரம், சணல், கரும்பு, பருத்தி, கல், பளிங்கு, எம்.டி.எஃப் (MDF), பிளைபோர்டு உட்பட கிட்டத்தட்ட முற்றிலும் இயற்கையான பொருட்களைப் பயன்படுத்துகிறது, மேலும் அவ்வப்போது மறுசுழற்சி செய்யப்பட்ட PET நூலைப் பயன்படுத்துகிறது. சூரிய ஒளியில் உலர்த்துதல், கையால் இறக்குதல் மற்றும் கையால் நெசவு செய்தல் போன்ற பாரம்பரிய உற்பத்தி முறைகளுடன் முதன்மையாக வேலை செய்வதன் மூலம், ஃபேப் இந்தியா குறைந்த கார்பன் வகை உற்பத்திகளுக்கு முன்னுரிமை அளிக்கிறது.

 

·   புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட தனிநபர் பராமரிப்பு  பொருள்கள், ஃபேப்என்ஷியல்ஸ் (Fabessentials) ஆகும். இது, முதன்மையாக இயற்கையான பொருட்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டதாகும். இந்தப் பொருள்கள்,  நச்சுப் பொருட்கள் மற்றும் பாரபென்கள், பித்தலேட்டுகள், பாஸ்பேட்கள், ஃபார்மால்டிஹைட் மற்றும் செயற்கை வாசனை திரவியங்கள் (Parabens, Phthalates, Phosphates, Formaldehyde, and Synthetic fragrances) போன்ற நாளமில்லாச் சிதைவுகள் இல்லாமல் ஜி.எம்.ஓ (GMO)  மற்றும் சர்வதேச நறுமண சங்கத்தின் (International Fragrance Association -IFRA) தரநிலைகளின்படி தயாரிக்கப்பட்டுள்ளது.

 

·   நிறுவனம் அதன் தற்போதைய பங்கான 50 சதவிகிதத்திலிருந்து  இயற்கை மூலப்பொருட்களின்  (Organically Sourced Produce) சதவிகிதத்தை படிப்படியாக அதிகரித்து வருகிறது.

·   கிராஃப்ட் கிளஸ்டர் டெவலப்மெண்ட் லைவ்லிஹுட் இம்பாக்ட் ப்ரோகிராம் (Craft Cluster Development Livelihood Impact Program (CDLIசி.டி.எல்.ஐ) என்பது  கடந்த 2016 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட்ட கைவினைஞர்களுக்கான திறன் மேம்பாடு மற்றும் வாழ்வாதாரத்தை உருவாக்குவதற்கான ஒரு தீவிர வடிவமாகும். சி.டி.எல்.ஐ முன்முயற்சியின் மூலம், நிறுவனம் புதிய கிளஸ்டர்களில் உள்ள கைவினைஞர்களுடன் இணைந்து வணிக நிறுவனங்களுக்கு சுதந்திரமான விற்பனையாளர்களாக செயல்படத் தேவையான திறன்களை மேம்படுத்துவதற்கும், அவர்களுக்கு வாழ்வாதாரரவாக அவர்களிடமிருந்து வாங்குவதற்கும் உதவுகிறது.


·   சுற்றுச்சூழல் நிலைத்தன்மை: (Environmental sustainability): ஃபேப்இந்தியா நிறுவனம்,  எரிசக்தி, மூலப் பொருட்கள், உமிழ்வுகள், தண்ணீர், கழிவுகள் மற்றும் ரசாயனங்கள் ஆகியவற்றைக் குறைத்து அதன் தாக்கத்தை நிர்வகிப்பதில் கவனம் செலுத்துகிறது. பல்வேறு இயற்கை இழைகளைப் (Natural Fibers) பயன்படுத்தி அதன் பொருள்களை உருவாக்குதல், பொருட்களில் உள்ள ரசாயனங்களின் பயன்பாட்டைக் குறைத்தல், அதன் எரிசக்த்தி மற்றும் பசுமை இல்ல வாயு உமிழ்வை நிர்வகித்தல் மற்றும் கழிவு உற்பத்தியைக் குறைத்தல் உட்பட, அதன் செயல்பாடுகளில் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையைத் தொடர்ந்து மேம்படுத்துவதற்கான வழிகளை இந்த நிறுவனம் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.

 

·   இந்த நிறுவனத்தின் தயாரிப்பு பொருள்களின் கலவையானது, பாரம்பரிய உற்பத்தி முறைகளைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட பொருள்களை உள்ளடக்கியது, இதில் கைத்தறி மற்றும் வீட்டில் இயங்கும் தறிகள் நெசவு, கை அடிப்படையிலான பிளாக் பிரிண்டிங் மற்றும் வெயிலில் உலர்த்தும் துணி சாயமிடும் செயல்முறைகள் ஆகியவை அடங்கும். இத்தகைய முறைகள் தொழில்துறை அல்லது இயந்திர முறைகளை விட சுற்றுச்சூழலுக்கு உகந்தவை

 

·   ஃபேப்இந்தியா நிறுவனம் தனது உற்பத்தி மதிப்புச் சங்கிலியிலிருந்து முற்றிலும் மறுபயன்பாடு செய்யப்பட்ட கழிவுகள் மற்றும் எஞ்சிய துணியிலிருந்து தயாரிக்கப்பட்ட உயர்சுழற்சி செய்யப்பட்ட தயாரிப்புகளின் புதிய வரிசையை உருவாக்கஷுன்யா - பூமியுடன் இணைக்கப்பட்டுள்ளது (‘Shunya – Connected to the Earth”) என்ற முன் முயற்சியைத் தொடங்கியது.

·   ஃபேப்இந்தியா  அதன் இ.எஸ்.ஜி நடைமுறைகளை உறுதிப்படுத்தவும் மேலும் மேம்படுத்தவும்  யர்னஸ்ட்



& யங்க் (
Ernst & Young)  என்கிற நிறுவனத்துடன்  இணைந்து செயல்படுகிறது


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மொரிஷியஸ் நாட்டிலிருந்து கிஃப்ட் சிட்டிக்கு  மாறிய அர்தா குளோபல் ஆபர்சூனிட்டிஸ் ஃபண்ட் Artha Global Opportunities Fund

மொரிஷியஸ் நாட்டிலிருந்து கிஃப்ட் சிட்டிக்கு   மாறிய அர்தா குளோபல் ஆபர்சூனிட்டிஸ் ஃபண்ட், நிதி நெருக்கடி நிறுவனங்களில் முதலீடு செய்ய ...