மொத்தப் பக்கக்காட்சிகள்

விசித்திரனில் கலங்கரை விளக்கம் டாக்டர் எல். கைலாசம்



விசித்திரனில் கலங்கரை விளக்கம்


டாக்டர் எல். கைலாசம்

அந்தக் காலத்தில் நீர்ப்பாயல் என்று அழைக்கப்பட்ட மகாபலிபுரத்துக் கலங்கரை விளக்கத்தில் ஆரம்பித்த எனது புத்தம் புதிய சரித்திரப் புதினம் விசித்திரன் அதே இடத்தில் முடிகிறது.

அந்தக் காலத்தில் கடலில் வரும் கலங்களுக்குக் கரை எங்கு என்பதை சொல்லாமல் சொல்வது கலங்கரை விளக்கம்தான்.

கல்கி தனது பொன்னியின் செல்வனின் கோடிக்கரைக் கலங்கரை விளக்கத்தை விவரிப்பதைப் படியுங்களேன்

"அதோ கலங்கரை விளக்கின் உச்சி மண்டபத்தில் தீ மூட்டியாகி விட்டது. தீ ஜுவாலை விட்டு எரிகிறது. இனி இரவெல்லாம் அந்த ஜோதி எரிந்து கொண்டிருக்கும்.

கடலில் செல்லும் மரக் கலங்களுக்கு அது 'அருகில் நெருங்க வேண்டாம்!' என்று எச்சரித்துக் கொண்டிருக்கும்.

கோடிக்கரை ஓரத்தில் கடலில் ஆழமே கிடையாது. கட்டு மரங்களும், சிறிய படகுகளும்தான் அந்தப் பகுதியில் கரை ஓரமாக அணுகி வரலாம்.

மரக்கலமும் நாவாயும் நெருங்கி வந்தால் தரைதட்டி மணலில் புதைந்து விடும்.

வேகமாகத் தரையில் மோதினால் கப்பல் பிளந்து உடைந்தும் போய்விடும். ஆதலின், கோடிக்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் கப்பல் ஓட்டிகளுக்கு மிகவும் அவசியமான உதவியைச் செய்து வந்தது"

எனது புதினத்தின் ஆரம்பத்தில் இளவரசர் மகேந்திரர், மகாபலிபுரத்துக் கடற்கரையிலிருக்கும் கலங்கரை விளக்கத்தில் நின்று நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்து கொண்டிருப்பார்.

அப்பொழுது மறையோர் குலத்துப் பெண் ஒருத்தி கையில் ஓலைகளுடன் ஓடி வருவதும், வெகுதூரத்தில் இலங்கை கலம் ஒன்று துறைமுகத்துக்குள் வராமல் தனியாக நிற்பதும், அதிலிருந்து மூவர் இறங்குவதையும் கவனிப்பார்.

மகாபலிபுரக் கலங்கரை விளக்கத்தில் மகேந்திரர் நின்றதை நான் இப்படி விவரித்துள்ளேன்.

"வெகுதூரத்தில் தெரிந்த நீர்ப்பாயல் கலங்கரை விளக்கம் கரையை நோக்கி வரும் மரக்கலங்களையும் துறைமுகத்திலிருந்து வெளி நாடுகளுக்குச் செல்லும் கலங்களையும். ஒளிகாட்டி, காப்பாற்றி வழிகாட்டிக் கொண்டிருந்தது.

அதன் உச்சியில் நந்திக்கொடி பறந்து கொண்டிருந்தது.

முன்னிரவு நேரத்திலும் கலங்களில் பொருட்களை ஏற்றுவதும், வெளிநாடுகளிலிருந்து வந்த கலங்களிலிருந்து பொருட்களை இறக்குவதும் விடாமல் நடந்து கொண்டிருந்த நீர்ப்பாயல் பட்டினத்தில், இருந்த கலங்கரை விளக்கத்தின் மேல் தீர்க்கமான வாலிபர் ஒருவர் விரைந்து ஏறிக்கொண்டிருந்தார். உயரமாக சற்று மெலிந்திருந்த அந்த வாலிபருக்கு இருபது வயதிருக்கும்.

அவரின் நேர்கொண்ட பார்வை பார்ப்பவர்களை ஈர்க்கும் சக்தியைக் கொண்டிருந்தது.

அவரின் கூர்மையான கண்களிலிருந்து எதுவும் தப்பிக்க முடியாது என்பதைப்பார்த்ததும் புரிந்தது. அந்த இளைஞரின் கண்களுக்குக்கீழிருந்த நாசிச் சற்று நீண்டிருந்தாலும் அதற்கும் கீழே தெரிந்த புதுமீசை அவரை மேலும் அழுகுறச் செய்தது. வாலிபரின் கேசம் அழகாக வெட்டப்பட்டு வங்கக்கடலிலிருந்து அடித்தக் காற்றில் அங்கும் இங்கும் பறந்து கொண்டிருந்தது. கலங்கரைவிளக்கத்தில் ஏறும் பொழுது பிடித்த அவரின் நீண்டகரங்களில், அவரின் நெஞ்சின் உறுதி தெரிந்தது. வாலிபரின் இரு கால்களும் மிகுந்த பலம் கொண்டவை என்பது, அவர் லாகவகமாகக் கலங்கரை விளக்கத்தில் ஏறியபோது புரிந்தது. ராஜகளை பொருந்த அந்த வாலிபர் பல்லவநாட்டுக்கே தெரிந்தவர்தான்.

பல்லவ அரசர் விஷ்ணுசிம்மனின் இளவல். பிற்காலத்தில் பல்லவநாட்டை காஞ்சியில் வேரூன்ற செய்த இளவரசர் மகேந்திரபல்லவர்."


என்னதான் நான் கல்கியைத் தொட முயற்சித்தாலும் என்னால் தொடமுடியவில்லை என்பது தான் உண்மை. கல்கி ஆதவன்,

நான் தரையில் அவரையே பார்த்துக்கொண்டிருக்கும் தாமரை மலர்.

தரையில் தவளும் தாமரை எப்படி ஆதவனைத் தொட முடியும்?.
கலங்கரை விளக்கத்தில் நின்ற மகேந்திரவர்மர் கலையாத காதல் நிலையாகவென்று அழியாதச் சிலைகள் செய்ய நினைத்தாரோ?

கலங்கரை விளக்கத்தில் அடித்தக் காற்றோடு வளரும் சொந்தம் காற்றோடு போகும் என்று எண்ணிணாரோ? அறியாதப் பெண்ணின் மனவாசல் தொட்டுத் திறவாமல் ஏன் சென்றார்? சரோஜாதேவியார் எம்.ஜி.ஆரை எண்ணி கேட்டது உங்கள் மனதினில் ஒலிக்கிறதா?

அதற்கெல்லாம் விடை விசித்திரனில் தான் இருக்கிறது.
  
இந்த வரலாற்று நாவலை வாங்க 

https://www.udumalai.com/vichithiran.htm



விசித்திரனைப் படித்துவிட்டுச் சொல்லுங்களேன் உங்களின் அன்பான அரிய கருத்தினை, வாசக எஜமானர்களே. 

Dr. L. KAILASAM, M.Sc, ML, MCA, AICWA, ACS, FIV, PhD

Lakshmi Illam, Amrit Kalash

C4-24, Block II, Fourth Floor,

New No 159, Strahans Road,

Pattalam, Chennai 600 012

 

Temporary Address

2033/4 Viswanath Puri, Suswahi, 

Vanranasi 221011

 

Cell No 09444088535/

09495650600

lkailasam@yahoo.co.in

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

குறைவான வருமான வரி..! ஃப்ராங்க்ளின் இந்தியா லாங் டியூரேஷன் ஃப்ண்ட் Franklin India Long Duration Fund

குறைவான வருமான வரி..! ஃப்ராங்க்ளின் இந்தியா லாங் டியூரேஷன் ஃப்ண்ட் (Franklin India Long Duration Fund)   ஃப்ராங்க்ளின் இந்தியா மிய...