வருங்கால வைப்புநிதியில் கடந்த 4 ஆண்டுகளில் 5 கோடி புதிய சந்தாதாரர்கள் சேர்ந்திருக்கிறார்கள்.
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பில் (இ.பி.எப்.ஓ.) கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து கடந்த நவம்பர் மாதம்வரை சுமார் 4.88 கோடி புதிய சந்தாதாரர்கள் சேர்ந்துள்ளனர்.
இதே காலகட்டத்தில், தொழிலாளர் ஈட்டுறுதி காப்பீட்டு திட்டத்தில் (இ.எஸ்.ஐ.) 5 .93கோடி புதிய சந்தாதாரர்கள் சேர்ந்துள்ளார்கள்..
இந்தத் தகவல்களை தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. அமைப்புரீதியான தொழில் துறைகளில் வேலைவாய்ப்பு பெருகி இருப்பதை இந்த தகவல் உணர்த்துகிறது.