டாடா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப முதலீடு செய்யும் டாடா பிசினஸ் சைக்கிள் ஃபண்ட் (Tata Business Cycle Fund) என்கிற இந்தத திட்டத்தை கொண்டுள்ளது.
ஒவ்வொரு காலகட்டத்திற்கும் சில துறை சார்ந்த பங்குகள் நல்ல லாபம் கொடுக்கும். உதாரணத்திற்கு சென்ற ஆண்டு 2020 கொரோனா நோய்த்தொற்று காரணமாக பார்மா நிறுவனப் பங்குகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனப் பங்குகள் நல்ல ஏற்றம் கண்டன. இதுபோல நல்ல வாய்ப்புகளை கண்டறிந்து முதலீடு செய்வதை இந்த ஃபண்டின் முக்கிய நோக்கமாக டாடா மியூச்சுவல் ஃபண்ட் கொண்டிருக்கிறது.
இந்த ஃபண்டில் குரோத் ஆப்ஷன் மற்றும் டிவிடெண்ட் ஆப்ஷன் என்ற இரு வருமானம் கிடைக்கும்.
குறைந்தபட்ச முதலீடு: ரூ 5,000
மொத்த முதலீடு மற்றும் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யும் வசதி உள்ளது.
இந்த ஃபண்டில் முழுக்க முழுக்க பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுவதால் அதிக ரிஸ்க் எடுக்கும் திறன் கொண்டவர்கள் முதலீடு செய்யலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக