ரிலையன்ஸ் ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனம் மருத்துவ காப்பீட்டு சேவைகளை வழங்கும் ரிலையன்ஸ் ஹெல்த் சூப்பர் டாப்-அப் பாலிசியை (Reliance Health Super Top Up Policy) கொண்டுள்ளது.
இந்த பாலிசியில் 18 வயது முதல் 65 வயது நிரம்பியவர்கள் சேர முடியும்.
ரூ. 5 லட்சம் முதல் ரூ. 1.3 கோடி வரை டாப்அப் பாலிசி எடுத்துக்கொள்ளலாம்.
தனி நபர் பாலிசி அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கான ஃப்ளோட்டர் பாலிசி உடன் டாப் அப் பாலிசியை எடுக்க முடியும்.
மருத்துவச் செலவு தொடர்ந்து வேகமாக அதிகரித்து வரும் தற்போதைய நிலையில் குறைந்த பிரீமியத்தில் அதிக கவரேஜ் கிடைக்கும் டாப்அப் பாலிசியை அனைவரும் எடுத்துக் கொள்வது அவசியமாகும்.