இந்தியாவின் ஒரே பொதுத் துறை ஆயுள் காப்பீடு நிறுவனமான எல்.ஐ.சி புதிய பங்கு வெளியீடு மூலம் சுமார் ரூ. 1 லட்சம் கோடி திரட்ட இருக்கிறது. இந்தப் புதிய பங்கு வெளியீட்டில் 10% பங்குகளை அதன் பாலிசிதாரர்களுக்கு ஒதுக்கப்படுகிறது.
அந்தப் பங்குகளை பெற எல்.ஐ.சியில் பாலிசி எடுத்திருப்பவர்கள் பாலிசி எண்ணுடன் பான் நம்பரை இணைக்க வேண்டும். இதனை எல்.ஐ.சி நிறுவனத்தின் இணையதளத்தில் செய்து கொள்ளலாம். அல்லது எல்.ஐ.சி கிளை அலுவலகம் அல்லது முகவர், வளர்ச்சியை அதிகாரி மூலம் பான் நம்பரை இணைத்துக் கொள்ளலாம்.
புதியப் பங்கு வெளியீட்டுக்கு விண்ணப்பிப்பதற்கு டீமேட் கணக்கு தேவை. பாலிசிதாரருக்கு டீமேட் இல்லை என்றால் அதனையும் ஆரம்பிக்க வேண்டும்.