எல்.ஐ.சி சந்தைப்படுத்துதல் குழு, தஞ்சாவூர்
எல்.ஐ.சி ஜீவன் சாந்தி பென்ஷன் (LIC Jeevan Shanthi Pension)
பென்ஷன் என்றால் என்ன?
பென்ஷன் அவசியம் தேவையா?
பென்ஷனின் பெருமைகள் என்ன?
இம் மூன்றையும் முழுமையாக உணர்ந்தால் வாழ்நாள் வசந்தமே..!
பென்ஷன் என்றால் என்ன?
வாழ்நாளில்,அடுத்தவர் உதவியை எதிர்பார்க்காமல்,அத்தியாவசிய தேவைகளுக்கு,நமக்கு நாமே செய்துகொள்ளும் முன்னேற்பாடே பென்ஷன்..!
தேவைகள் ஏற்படும்போது நாம் உடனே உபயோகிக்கிற வடிவில் அது இருந்தால் கூடுதல் மகிழ்ச்சி..!
அப்படி பார்த்தால் அது பணமாக, நமக்கு தேவை ஏற்படுகிறபோது எடுத்து செலவு செய்திடும் வகையில் இருந்தால் அளவில்லா மகிழ்ச்சி..!
பொன்னாகவோ,பொருளாகவோ, விளையும் பயிராகவோ, நிலமாகவோ,வீடாகவோ, இருக்கலாம். ஆனால் உடனடி பயன்தராது..
நாம் செய்கிற தொழில் மூலமோ, நாம் செய்திருக்கிற முதலீடு மூலமோ,வருகிற வருமானம் கூட அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களுக்கு உட்பட்டது.
சில நேரங்களில் உபரியாக இல்லாமல்,தொடரும் தேவைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுவிடும்..
எனவே எத்தகையவர்களானாலும் சராசரி மாதந்திர வருமானம் என்பது இன்றியமையாதது..!
அது நிலையானதாக இருக்க வேண்டும்...!
வாழ்நாளுக்கும் அது கிடைக்க வேண்டும்..!
எந்த மாற்றங்களாலும் அது மாறக்கூடாது..!
அதையே நாம் ஓய்வூதியம் - பென்ஷன் என்கிறோம்...!
*பென்ஷன் அவசியம் தேவையா..??*
(1) அத்தியாவசிய பொருட்கள் அதிகமாக கிடைப்பது குறைகிறது. அதனால் விலை உயர்ந்து கொண்டே போகிறது...
ஆடம்பர பொருட்களின் வரவு அதிகரித்துக்கொண்டே போகிறது. அதனால் விலை மலிவாகிக்கொண்டே வருகிறது.
(2) உறவுகளுக்குள் தூரம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. உதவி தேவைப்படும்போது உதவுவோர் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.
(3) குடும்பத்தினரின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதற்குள் வயது 60 வதை கடந்து விடுகிறது..
பாதி தேவைகளைக்கூட முடிப்பதற்குள் பணி ஓய்வு பெறுவோர் பலர் உள்ளனர்..
(3) தொழில் செய்வோர், தொழில் போட்டிகள் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்கள் காரணமாக,தொழிலை நிம்மதியாக செய்ய முடியவில்லை..
(4) விவசாயம் செய்வோர் பருவ நிலை மாற்றங்களாலும், இயந்திர பெருக்கத்தாலும்,எண்ணற்ற துயரங்களை சந்திக்க வேண்டியுள்ளது...
(5) படிப்புக்கேற்ற வேலையோ, தேவைக்கேற்ற வருமானமோ தேடி அலைய வேண்டியுள்ளது..
இத்தகைய சூழலில், கையில் இருக்கிற தொகையில் கொஞ்சம் எதிர்காலத் தேவைகளுக்காக பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்து கொள்வது மிக மிக நல்லது..
முடிந்தால் முதலீட்டை கூடுதலாக வைத்துக்கொள்வது மிகச்சிறந்தது..
பென்ஷனின் பெருமைகள்...!!
* மாதாந்திர வருவாய்...
* மாறாத வருவாய்..
* முதல் தேதி முதல் ஆளாய் உதவிடும்..
* முதலீடு பத்திரமாய் இருந்திடும்..
* அடுத்தவர் களவாட முடியாது..
* உறவுகள் உங்கள் உத்தரவின்றி உரிமை கோர முடியாது..
* பொருளாதார, நிதி மாற்றங்களினால் இது மாறாது..
* நமக்கும் பிறகு நமது வாழ்க்கை துணைக்கும் மாதாந்திர வருவாயை உத்திரவாதப்படுத்திக் கொள்ளலாம்..
* மொத்தத்தில் ஒருமுறை முதலீடு செய்து,வாழ்நாள் முழுக்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கலாம்..!
ஒரு நிமிடம் சிந்தித்து நல்ல முடிவெடுத்தால்...
வாழ்நாள் முழுக்க வசந்தமே..!
இதனால் பென்ஷனுக்கு பெருமையல்ல...
பென்ஷன் பெறும் நமக்கே பெருமை.!
* நல்ல முடிவெடுப்போம்..!!
* நலமாய் வளமாய் வாழ்வோம்...!!!