ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், ரிஸ்க் குறைவான மாறுபடும் வட்டி விகிதங்களை கொண்ட கடன் பத்திரங்கள் மற்றும் பணச் சந்தை ஆவணங்களில் குறுகிய காலத்திற்கு முதலீடு செய்யும் இந்த ஆக்சிஸ் ஃபிளோட்டர் ஃபண்ட் (Axis Floater Fund) –ஐ கொண்டுள்ளது..
இந்த ஃபண்டில் குறைந்தபட்ச முதலீடு ரூ. 5,000 ஆகும்.
திரட்டப்படும் நிதியில் பெரும் பகுதி, இந்த ஃபண்டில் அதிக தரக்குறியீடு கொண்ட கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படுகிறது. அதனால், ரிஸ்க் குறைவாக இருக்கும்.
இந்தக் கடன் ஃபண்டில் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டை விட அதிக வருமானம் கிடைக்கும். மேலும், மூன்றாண்டு கழித்து பணத்தை எடுக்கும் போது பணவீக்க சரிக்கட்டலுக்கு பிறகு நீண்ட கால மூலதன ஆதாயத்துக்கு 20% வரிக் கட்டினால் போதும்.