ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், நிஃப்டி கன்சப்ஷன் இன்டெக்ஸ் குறியீட்டில் முதலீடு செய்யும் ஆக்ஸிஸ் கன்சப்ஷன் இ.டி.எஃப் ஃபண்ட் (Axis Consumption ETF Fund) திட்டத்தை கொண்டுள்ளது.
நுகர்வோர் பொருட்கள் சந்தை தொடர்புடைய நிறுவனங்கள் வரும் காலத்தில் நல்ல வளர்ச்சி அடையும் என்பதை அடிப்படையாக கொண்டு இந்தத் திட்டம் செயல்படுகிறது. பாசிவ் வகை துறை சார்ந்த திட்டமாகும்.
குறைந்தபட்ச முதலீடு: ரூ. 5,000
எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யும் வசதி உள்ளது.
குரோத் மற்றும் டிவிடெண்ட் என 2 வகைகளில் வருமானம் கிடைக்கும்.
.யாருக்கு ஏற்றது?
முழுவதும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுவதால் ரிஸ்க் எடுக்கும் திறன் உடைய முதலீட்டாளர்கள் மட்டும் இந்தத் திட்டத்தில் சேர வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக