ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் (Adithya Birla Sunlife Mutual Fund – ABSL MF ) நிறுவனம், ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் பிசினஸ் சைக்கிள் ஃபண்ட் (Adithya Birla Sunlife Business Cycle Fund) என்கிற ஃபண்டை அறிமுகம் செய்துள்ளது.
சில துறைகள், நிறுவனங்கள் சுழற்சி முறையில் சிறப்பாக செயல்படும். அதனை கண்டறிந்து ஏற்ற சுழற்சியில் முதலீடு செய்வது இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம்.
குறைந்தபட்ச முதலீடு: ரூ. 5,000
எஸ்.ஐ.பி முறை முதலீடு செய்யும் வசதி இருக்கிறது.
டிவிடெண்ட் மற்றும் குரோத் என்ற இரண்டு வகைகளில் ஏதாவது ஒரு முறையில் வருமானம் பெறலாம்.
முழுக்க பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுவதால் அதிக ரிஸ்க் எடுக்கும் திறன் கொண்ட முதலீட்டாளர்கள் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். முதலீட்டுக் காலம் குறைந்தது 3 முதல் 5 ஆண்டுகள் இருப்பது நல்லது.