தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும் சென்னையில் புத்தகக் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு 45-வது முறையாக நடைபெறவிருக்கும் இந்த கண்காட்சி 2022 ஜனவரி மாதம் 6-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார். இதில், 800 அரங்குகளுக்கு மேல் செயல்பட உள்ளன.
சென்னை, நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும் இக்கண்காட்சியில் 12 லட்சம் பார்வையாளர்கள் கலந்துகொள்வார்கள் என்று ஏற்பாட்டாளார்கள் எதிர்பார்க்கின்றனர்.