இந்தியாவின் முதல் ஆல்பா வகை முதலீட்டுத் திட்டத்தை கோட்டக் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், கோட்டக் நிஃப்டி ஆல்பா 50 இ.டி.எஃப் (Kotak Nifty Alpha 50 ETF) என்கிற பெயரில் கொண்டு வந்துள்ளது.
குறிப்பிட்ட காலத்தில் அதாவது ஓராண்டு, மூன்றாண்டு, ஐந்தாண்டு, பத்தாண்டு காலத்தில் நிறுவனங்கள் அதன் குறியீட்டை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ வருமானம் கொடுத்திருக்கலாம். குறியீட்டு அளவை விட நிறுவனம் கொடுத்துள்ள வருமானமே ஆல்பா எனப்படும்
உதாரணத்திற்கு நிஃப்டி 50 குறியீடு கடந்த ஒரு வருட காலத்தில் 1% அதிகரித்திருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதில் இடம்பெற்றுள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை அந்தக் கால கட்டத்தில் 2% அதிகரித்திருந்தால் அந்த நிறுவனத்தின் ஆல்பா +1%. அதற்கு மாறாக ஹீரோ டாடா ஸ்டீல் நிறுவனப் பங்கு விலை 1% குறைந்திருந்தால் அதன் ஆல்பா அளவானது - 2% ஆகும்.
இந்த கோட்டக் நிஃப்டி ஆல்பா 50 இ.டி.எஃப் ஃபண்டில் திரட்டப்படும் நிதி அதிக ஆல்பா கொண்ட 50 நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த காலத்தில் அதிக வருமானம் கொடுத்துள்ளது என்பதற்காக வரும் காலத்தில் அதேபோல் வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது.
மேலும் இந்த ஃபண்டில் திரட்டப்படும் நிதி முழுக்க முழுக்க பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுவதால் அதிக ரிஸ்க் கொண்டது. அதேநேரத்தில் அதிக வருமானம் எதிர்பார்க்கலாம்