மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் சீரான முதலீட்டுத் திட்ட முறையான எஸ்.ஐ.பி மூலம் சிறு முதலீட்டாளர்கள் 2021 நவம்பர் மாதத்தில் ரூ.11,005 கோடி முதலீடு செய்திருக்கிறார்கள்.
இது இந்திய மியூச்சுவல் ஃபண்ட் வரலாற்றில் இதுவரையில் இல்லாத அளவுக்கு அதிக தொகையாகும்.
கடந்த 2020 ஆம் ஆண்டின் இதே மாதத்தில் எஸ்.ஐ.பி முறையில் மியூச்சுவல் ஃபண்டில் ரூ.7,302 கோடி முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.
2021 நவம்பர் மாத இறுதியில் மொத்தம் 4.78 கோடி எஸ்.ஐ.பி கணக்குகள் இருக்கின்றன. இது நடப்பு நிதி ஆண்டின் (2021-22) தொடக்கத்தில் 3.80 கோடியாக இருந்தது. 7 மாதங்களில் 98 லட்சம் புதிய எஸ்.ஐ.பி கணக்குகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.
எஸ்.ஐ.பி கணக்குகள் மூலமாக நிர்வகிக்கப்படும் தொகை ரூ.5,46,683 கோடியாக உள்ளது. இதில் நடப்பு நிதி ஆண்டின் முதல் 8 மாதங்களில் ரூ.77,978 கோடி முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. கடந்த நிதி ஆண்டில் (2020-21) ரூ.96,08 கோடி முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.
Jan 2020: 8532 கோடி ரூபாய்.
Feb 2020 : 8513 கோடி ரூபாய்.
Mar 2020 : 8641 கோடி ரூபாய்.
Apr 2020 : 8380 கோடி ரூபாய்.
May 2020 : 8123 கோடி ரூபாய்.
June 2020 : 7927 கோடி ரூபாய்.
July 2020 : 7830 கோடி ரூபாய்.
Aug 2020 : 7792 கோடி ரூபாய்.
Sept 2020 : 7788 கோடி ரூபாய்.
Oct 2020 : 7800 கோடி ரூபாய்.
Nov 2020 : 7302 கோடி ரூபாய்.
Dec 2020 : 8418 கோடி ரூபாய்.
Jan 2021 : 8023 கோடி ரூபாய்.
Feb 2021 : 7528 கோடி ரூபாய்.
Mar 2021 : 9182 கோடி ரூபாய்.
April 2021 : 8591 கோடி ரூபாய்.
May 2021 : 8819 கோடி ரூபாய்.
June 2021 : 9156 கோடி ரூபாய்.
July 2021 : 9609 கோடி ரூபாய்.
Aug 2021 : 9923 கோடி ரூபாய்.
Sept 2021 : 10,351 கோடி ரூபாய்.
Oct 2021 : 10,519 கோடி ரூபாய்.
Nov 2021 : 11,005 கோடி ரூபாய்