மொத்தப் பக்கக்காட்சிகள்

மழை, குளிர் கால நோய்களுக்கு கைகண்ட மருந்து கற்பூரவல்லி

இயற்கை அளித்த கொடைகள்- தினம் ஒரு தகவல்.

.கற்பூரவல்லி
 
        Indian borage

கட்டுரையாசிரியர்: அரவிந்தன்



தொடர் மழை,குளிர் ஒருபுறம் என்றால் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசு மறுபுறம். இயற்கை ஒருபுறம் உலகில் சமநிலை நிலவ நன்மைகளையும்,தீமைகளையும் கலந்தே நமக்களித்தாலும்,அதற்கான தீர்வையும் நமக்கு அளித்துள்ளது என்பதை நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும்.

வானிலை மாற்றத்தால் ஏற்படும் சளி,காய்ச்சல் ஆகியவற்றை தீர்க்கவும்,கொசு போன்ற நோய் பரப்பும் பூச்சிகளை கட்டுப்படுத்தவும் இயற்கைபல அரிய மூலிகைகளை நமக்களித்துள்ளது.

மருத்துவ மூலிகைச் செடி

கற்பூரவல்லி அல்லது கற்பூரவள்ளி (Coleus aromaticus) என்பது இயற்கை நமக்களித்த ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும்.இதன் அறிவியல் பெயர் Coleus amboinicus ஆகும்.

இதன் இலைகள் மென்மையாக இருக்கும், இதன் சாறு பச்சையாக மெல்லும்போது கற்பூர சுவை கொண்டதாக இருக்கும். கற்பூரவல்லியை பச்சையாக சாப்பிடலாம்.
தென்னிந்திய குடும்பங்கள் பாரம்பரிய மருத்துவமாக புகழ்பெற்ற கற்பூரவல்லியுன் தொடர்புடையதாக இருப்பர். குழந்தைக்கு மார்பு சளி இருமல் மற்றும் காய்ச்சல் வரும்போது இதனை பயன்படுத்துவர்.

டெங்கு நோயை பரப்பும் ஏடிஸ் கொசுக்களை விரட்ட

வெப்பமண்டல நாடுகளில் டெங்கு நோயை பரப்பும் ஏடிஸ் கொசுக்களை விரட்ட கற்பூரவல்லியை வீடுகளை சுற்றி தொட்டிகளில் வளர்க்கலாம். இவற்றை நுனித்தண்டுகள் மூலம் இனப்பெருக்கம் எளிதாக செய்யலாம்.இவை அடர்ந்து நன்கு வளர ஓரளவு சூரிய ஒளி தேவை.

கற்பூரவல்லி இலைகளை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும். இதனால் உடலைத் தாக்கும் பல்வேறு நோய்களின் எண்ணிக்கை குறையும்.

100 கிராம் கற்பூரவள்ளியில் 4.3 கிராம் கொழுப்பு, 25 மிகி சோடியம், 1,260 மிகி பொட்டாசியம், 69 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 9 கிராம் புரோட்டீன் உள்ளது. மேலும் வைட்டமின் ஏ (34%), கால்சியம்(159%), வைட்டமின் சி (3%), இரும்புச்சத்து (204%), வைட்டமின் பி6 (50%) மற்றும் மக்னீசியம் (67%) உள்ளது.

முதுமைத் தோற்றத்தை தடுக்கும்..!

சமீபத்திய ஆய்வில் ஒரு கிராம் கற்பூரவல்லியில் ஆப்பிளை விட 42 மடங்கு அதிக அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி போன்றவை உள்ளன.இதனால் கற்பூரவள்ளி ப்ரீ ராடிக்கல்களின் தாக்கத்தில் இருந்து நல்ல பாதுகாப்பை வழங்கி, முதுமைத் தோற்றத்தை தடுப்பதோடு, பல்வேறு சரும நோய்களையும் எதிர்க்கும்.

கற்பூரவல்லியில் பலரும் அதிகம் எடுக்கத் தவிர்க்கும் அத்தியாவசியமான வைட்டமின் கே ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. வைட்டமின் கே சத்தானது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் தமனிகளில் கால்சியம் நுழைவதைத் தடுக்கும். இது எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவும் மற்றும் சரியான இரத்த உறைதலை ஊக்குவிக்கும்.

நார்ச்சத்து

கற்பூரவல்லி இலைகளில் நார்ச்சத்து ஏராளமான அளவில் உள்ளதால், இந்த இலைகளை தினமும் உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.

கற்பூரவல்லி இலைகளில் உள்ள தைமோல் மற்றும் கார்வாக்ரோல் என்னும் உட்பொருட்கள் செரிமான சக்தியை அதிகரிக்கும். இதில் உள்ள தைமோல் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-செப்டிக் செயல்களைச் செய்கின்றன.

காய்ச்சல், சளி மற்றும் அடிவயிற்று வலி போன்றவற்றால் அவஸ்தைப்படுபவர்கள், கற்பூரவள்ளி இலையை பச்சையாக வாயில் போட்டு மென்று உட்கொள்வது நல்லது. இதனால் அதில் உள்ள தைமோல் மற்றும் கார்வாக்ரோல் உடனடி நிவாரணம் அளிக்கும்.

ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் நற்பதமான கற்பூரவள்ளி இலையை சாப்பிடுவது நல்லது. ஏனெனில் இதில் பொட்டாசியம் வளமான அளவில் உள்ளது. இது ரத்த அழுத்தத்தைக் குறைத்து, இதயத் துடிப்பைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவும்.

பெரியவர்களில் நாசி எரிச்சல் மற்றும் தொண்டை புண் குறைக்க பயன்படுகிறது.ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சிக்கு சிகிச்சையளிக்கவும் கற்பூரவள்ளி கலவை பயன்படுத்தப்படுகிறது.

கற்பூரவள்ளி இலையை சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து காலை வேளையில் அருந்தி வந்தால் மூக்கில் நீர்வடிதல், சளி, இருமல், தொண்டைக் கட்டு, தொண்டைக் கம்மல் குணமடையும்.
 
சைனஸ், தலைபாரம் நீங்க கற்பூரவள்ளிச் சாறு 200 மி.லி, சம அளவு நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி இறக்கித் தலையில் தேய்த்து வந்தால் சைனஸ், தலைபாரம், மூக்கில் நீர் கொட்டுதல் போன்றவை குணமாகும்.

சளி மற்றும் இருமல் தொல்லையிலிருந்து விடுபட

கற்பூரவள்ளி இலை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகுந்த பலனளிக்கக் கூடியது.   இம்மழைக்காலங்களில்காலநிலை மாறுதல்களால் ஏற்படும்  சளி மற்றும் இருமல் தொல்லையிலிருந்து விடுபட,கற்பூரவள்ளி இலை தேநீரில் தேன் கலந்து அருந்தலாம். 

மற்றும் மாலை வேளைகளில் இலைகளை பஜ்ஜி மாவில் தோய்த்து
சூடான பஜ்ஜி செய்து சாப்பிடலாம்.எப்படி சாப்பிட்டால் என்ன! நோய் குணமாகினால் சரிதான்.

                        
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

அனைத்து நிதித் தேவைகளுக்கும் ஏற்ற மியூச்சுவல் ஃபண்டுகள் Mutual Fund

நாணயம் விகடன் & மிரே அஸெட் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து `இலக்கு அடிப்படையிலான மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு' என்ற நிகழ்ச்சியை வேலூரில...