மொத்தப் பக்கக்காட்சிகள்

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி ஐ.பி.ஓ தொடர்பான ஆவணங்களை செபியில் தாக்கல்!

 

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி ஐ.பி.ஓ தொடர்பான ஆவணங்களை செபியில் தாக்கல்!

 

தனியார் துறையைச் சேர்ந்த முன்னணி வங்கியான  தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி [Tamilnad Mercantile Bank], புதிய பங்கு வெளியீடு [Initial Public Issue] மூலம் நிதி திரட்ட முதலீட்டுச் சந்தை நெறிமுறை அமைப்பான  செபியிடம் ஆரம்பக்கட்ட ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது.

ரெட்  ஹெர்ரிங் ப்ராஸ்பெக்டஸ் (Red herring prospectus -DRHP)) படி,  இந்த  ஐ.பி.ஓ 15,827,495 புதிய பங்குகள் மற்றும் பங்குதாரர்கள் பங்குச் சந்தையில் விற்பனை செய்யும் [offer-for-sale]  12,505 பங்குகள் ஆகியவற்றை உள்ளடக்கியது,

விற்பனைக்கான பங்குகளில் [offer-for-sale], டி-பிரேம் பழனிவேல் மற்றும் பிரியா ராஜன் [D Prem Palanivel & Priya Rajan]  ஆகிய இருவருடைய பங்குகளில்  தலா 5,000  பங்குகள், பிரபாகர் மகாதியோ பாப்டேவின்  [Prabhakar Mahadeo Bobde] 1,000 பங்குகள், நரசிம்மன் கிருஷ்ணமூர்த்தியின் [Narasimhan Krishnamurthy] 505 பங்கு பங்குகள்,   மற்றும் எம்.மல்லிகா ராணி மற்றும் சுப்பிரமணியன் வெங்கடேஸ்வரன் ஐயர் [M Malliga Rani & Subramanian Venkiteshwaran Iyer]  ஆகிய இருவரின் பங்குகளில் தலா 500 பங்குகளும் அடங்கும்.



தூத்துக்குடியை மையமாகக் கொண்ட தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி, தனது எதிர்கால முதலீட்டு தேவைகளை எதிர்கொள்ளும் வகையில் டியர்-1 முதலீட்டை அதிகரிப்பதற்கு  புதிய பங்குகளின் விற்பனை மூலமான முதலீட்டை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி, ஏறக்குறைய 100 ஆண்டுகால பாரம்பரியமிக்க வரலாற்றைக் கொண்ட நாட்டின் மிகப் பழமையான தனியார் துறை வங்கிகளில் ஒன்றாக முன்னணி வகிக்கிறது. குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME), விவசாயிகள் மற்றும் சில்லறை வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் வங்கிச் சேவைகள் மற்றும் நிதிச்சேவைகளை வழங்கி வருகிறது.

ஜூன் 30, 2021 நிலவரப்படி, இவ்வங்கி 509 கிளைகளுடன் வலுவான செயல்பாடுகளைக் கொண்டுள்ளது.  வற்றில் 106 கிளைகள் கிராமப்புறங்களிலும், 247 வளர்ச்சிக் கண்டுவரும் நகர்ப்புறங்களிலும், 80 வளர்ச்சியடைந்த நகர்ப்புறங்களிலும், 76 பெருநகரங்களிலும் செயல்பட்டு வருகின்றன..

 ஜூன் 30, 2021 நிலவரப்படி, தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கிக்கு 4.93 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர்  இந்த வாடிக்கையாளர்களில் 70 சதவீதம் பேர் இவ்வங்கியுடன் ஐந்து வருடங்களுக்கும் மேலாக நெருங்கிய உறவுடன், தொடர்ந்து இவ்வங்கி சேவைகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர்.

ஆக்சிஸ் கேப்பிட்டல் லிமிடெட் [Axis Capital Limited], மோதிலால் ஆஸ்வால் இன்வெஸ்ட்மெண்ட்  அட்வைசர்ஸ் லிமிடெட் [Motilal Oswal Investment Advisors Limited] மற்றும் எஸ்.பி.ஐ கேப்பிட்டல் மார்க்கெட்ஸ் லிமிடெட் [SBI Capital Markets Limited] ஆகிய நிறுவனங்கள்   இந்தப் பங்கு விற்பனையின் மேலாளர்களாக செயல்பட உள்ளன.

இந்தப் பங்குகள் அனைத்தும் மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தை [BSE & NSE]-ல் பட்டியலிட முன்மொழியப்பட்டிருக்கின்றன.

 

 

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

குறைவான வருமான வரி..! ஃப்ராங்க்ளின் இந்தியா லாங் டியூரேஷன் ஃப்ண்ட் Franklin India Long Duration Fund

குறைவான வருமான வரி..! ஃப்ராங்க்ளின் இந்தியா லாங் டியூரேஷன் ஃப்ண்ட் (Franklin India Long Duration Fund)   ஃப்ராங்க்ளின் இந்தியா மிய...