2020-21 நிதி ஆண்டு. 2021-22 மதிப்பீட்டு ஆண்டு:
வருமான வரிக் கணக்கு தாக்கல் கெடுதேதி நீட்டிப்பு..!
முடிந்த 2020-21 ஆம் நிதி ஆண்டுக்கான (2021-22 மதிப்பீட்டு ஆண்டு) வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான கெடு தேதி 2021 ஜூலை 31 ஆம் தேதி. இது கொரானா பாதிப்பால் 2021 செப்டம்பர் 30-க்கு நீட்டிக்கப்பட்டது.
இப்போது 2021 செப்டம்பர் 30-ம்தேதியிலிருந்து 2021 டிசம்பர் 31-க்கு நீட்டிக்கப்படுள்ளது.
இப்போது வருமான வரித்துறையின் புதிய இணையத்தளத்தில் நிலவும் சிக்கல் காரணமாக இந்த நீட்டிப்பு செய்யப்பட்டிருக்கிறது.
இந்தத் தகவலை மத்திய நிதி அமைச்சகம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.