மொத்தப் பக்கக்காட்சிகள்

எம்.எஃப்சென்ட்ரல் : மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய எளிய வசதி..! குறைந்த கட்டணம்..!

கேஃபின் டெக்னாலஜிஸ், கேம்ஸ் அறிமுகப்படுத்தும் எம்.எஃப்சென்ட்ரல் - இந்தியாவின் முதல் இடைநிலை முதலீட்டு மேலாண்மை தளம்

 

மும்பை, செப்டம்பர் 23, 2021:  கேஃபின் டெக்னாலஜிஸ் (KFin Technologies - KFintech) மற்றும் கேம்ஸ் (CAMS),  இன்று, மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு மேம்பட்ட சேவையை அளிக்கும் டிஜிட்டல் தீர்வான .எம்.எஃப்சென்ட்ரல் (MFCentral) –ஐ அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.  இந்த இணைய தளம், அனைத்து மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களையும் அதன் ஒற்றை சாளரக் காட்சி மூலம் முதலீட்டாளர் அனுபவத்தை மாற்றும் என  எதிர்பார்க்கப்படுகிறது.

எம்.எஃப்சென்ட்ரல் என்பது கேஃபின் டெக் மற்றும் கேம்ஸ் நிறுவனத்தின் கூட்டு முயற்சியாகும். கேஃபின் டெக் மற்றும் கேம்ஸ் நிறுவனங்கள், மியூச்சுவல் ஃபண்ட் ரிஜிஸ்தார் மற்றும் டிரான்ஸ்ஃபர் ஏஜென்ட்கள் (Mutual Fund Registrar & Transfer Agents) ஆவார்கள். அவர்கள் இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் கூட்டமைப்பான ஆம்ஃபி (AMFI) உடன் இணைந்து இந்தச் சேவையை அளிக்கின்றன. இந்திய மியூச்சுவல் ஃபண்ட் தொழில்துறையில் முதல்முறையாக, எம்.எஃப்சென்ட்ரல், முழுமையாக ஒரே கூரையின் கீழ் முதலீட்டாளளுக்கு டிஜிட்டல் அணுகல் (digital access) வசதியை  வழங்குகிறது.

 


மியூச்சுவல் ஃபண்ட் துறை பங்கேற்பாளர்களிடையே அனைத்து தானியங்கி மற்றும் டிஜிட்டல் முறையில் (automated and digitized manner) அனைத்து வகை பரிவர்த்தனைகளையும் வழங்கும் நோக்கத்தை இந்தத் தளம் கொண்டுள்ளது. இந்தத் தளம் அதன் சிறப்பு அம்சங்களாக நிலையான மற்றும் ஒரே சீரான நடைமுறைகள், இடை-செயல்பாடு (inter-operability) மற்றும் பெரிய அளவு மற்றும் வேகத்திற்கான ஆயத்த கட்டமைப்பு ஆகியவற்றை உருவாக்கி இருக்கிறது.


https://www.mfcentral.com/


கேம்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. அனுஜ் குமார், (Mr. Anuj Kumar, Managing Director, CAMS) கூறும் போது,முதலீட்டாளர் சமூகத்திற்கு  எம்.எஃப்சென்ட்ரல் தளத்தை கொண்டு வருவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இந்தத் தளம், மியூச்சுவல் ஃபண்ட் சேவைகளில் எளிமைப்படுத்தல் மற்றும்  முதலீட்டுக்கான நேரத்தை மிச்சப்படுத்துதல் ஆகியவற்றை மேற்கொள்வதோடு, பாதுகாப்பான  நடைமுறையையும் அணுகுகிறது. டிஜிட்டலின் சக்தியைப் பயன்படுத்தி, எம்.எஃப் சென்ட்ரல் அனைத்து  மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்ளிலும்  தடங்கல் இல்லாத சேவைகளுக்கு ஓர் ஒருங்கிணைந்த நுழைவாயிலை வழங்குகிறது”. என்றார்.  

ஒரே இடத்தில் முதலீட்டுக் கலவையை பார்க்கும் (single portfolio view) வசதியுடன் கூடுதலாக, இந்த இயங்குதளம் பிசிக்கல் மற்றும்  டிஜிட்டல் சேவைகளின் (physical and digital services) முழுமையான செயல்பாட்டை அளிக்கிறது. இது முதலீட்டாளர்களுக்கு உரிமை கோரப்படாத தொகைகள் மற்றும் வணிகம் சாராத பரிவர்த்தனைகளுக்கான (டிஜிட்டல் மற்றும் ஸ்கேன் அடிப்படையிலான) சேவை கோரிக்கைகளை நிறைவேற்றும் கூடுதல் வசதிகளை வழங்குகிறது. அதாவது நியமன மாற்றம், முகவரி புதுப்பிப்பு (nominee change and address update) போன்ற சேவைகளையும் அளிக்கிறது.

இந்தத் தளத்தை தொடங்கி வைத்து கேஃபின்டெக் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி திரு. ஶ்ரீகாந்த் நாதெள்ளா (Mr. Sreekanth Nadella, CEO, Kfintech) பேசும் போது, எம்.எஃப்.சென்ட்ரல் - இன் தொடக்கம் இந்திய  மியூச்சுவல் ஃபண்ட் துறையில் ஒரு மைல்கல் தருணமாகும். இந்தத் தளம் உருவாக்கப்பட்டிருப்பதில் நான்கு அடிப்படை நோக்கங்கள் உள்ளன. 1. முதலீட்டாளர்கள், இடைத்தரகர்கள் மற்றும் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனங்களுக்கு (AMC) இடையே எளிதாக வணிகம் செய்வதில்  மாற்றம்

2. மியூச்சுவல் ஃபண்ட் துறையில் எதிர்பார்க்கப்படும் அதிவேக வளர்ச்சியை ஈடுகட்ட  பாதுகாப்பான, மீள்தன்மை மற்றும் சிறப்பான செயலாக்க உள்கட்டமைப்பிற்கு அடித்தளம் அமைத்தல். 3. நெறிப்படுத்தும் அமைப்பு (Regulator), அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு பங்குதாரர்களுக்கு (ecosystem partners) சிறந்த பகுப்பாய்வுகளை வழங்க ஒரு  நல்ல தளத்தை உருவாக்குதல், 4. தொழில்துறையின் நடைமுறைகள் மற்றும் செலவுகளை குறைத்தல் போன்ற நோக்கங்களாகும்என்றார்.

இந்தத் தளம் மூன்று தனித்துவமான கால கட்டங்களில் செயல்பாட்டுக்கு வர உள்ளது, இவை அனைத்தும் இந்த 2021 காலண்டர் ஆண்டின் இறுதிக்குள் செயல்பாட்டுக்குள் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.  முதல் கட்டம், இன்று செயல்பாட்டுக்கு வருகிறது, வணிக ரீதியற்ற பரிவர்த்தனைகள் (முதலீட்டாளர்களின் சேவை கோரிக்கைகள்), முதலீட்டுக் கலவை பார்வை (financial portfolio view) மற்றும் ஒருங்கிணைந்த முதலீட்டு அறிக்கை மற்ற அம்சங்களுள் உள்ளடங்கும். அடுத்த இரண்டு கட்டங்களில்  மொபைல் தளம் (mobility platform), நிதி பரிவர்த்தனைகள் மற்றும் பல மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளுக்கான சுற்றுச்சூழல் பங்குதாரர்களுடன் ஒருங்கிணைப்பு ஆகியவை தொடங்கப்படும்.

எம்.எஃப்சென்ட்ரல் பற்றி (About MFCentral):

எம்.எஃப்சென்ட்ரல் (MFCentral) என்பது கேஃபின்டெக் & கேம்ஸ் (KFintech & CAMS) நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட ஒரு புதுமையான முதலீட்டாளர் சேவை மையமாகும். சிறந்த தரம் வாய்ந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, எம்.எஃப்சென்ட்ரல் ஆனது கேஃபின்டெக் & கேம்ஸ் ஆனது உள்கட்டமைப்பு மாற்றங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட் உள்ளது.  மேலும்,  சேவை கோரிக்கைகளின்  நிகழ்நேரத் தீர்வுக்கு (real-time resolution) உதவுகிறது.  முதலீட்டாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு எளிதாக வணிகம் செய்யும் விதமாக இந்தத் தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. எம்.எஃப்சென்ட்ரல் என்பது மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பாகும், இது ஏற்கனவே உள்ள தொழில் தளங்கள், பரிமாற்ற தளங்கள் மற்றும் சேனல் பங்குதாரர்களால் மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளை ஆதரிக்கும். இந்தத் தளம்  மியூச்சுவல் ஃபண்டில் சேரும் சேரும் முறையை தாண்டி, அனைத்து மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளரின் பரிவர்த்தனைகளை எளிதாக்குகிறது.

தற்போது, ​​கட்டம் 1 இல், எம்.எஃப்சென்ட்ரல் என்பது நிதி சாரா பரிவர்த்தனைகளை அனுமதிக்கிறது. 2 வது கட்டத்தில், எம்.எஃப்சென்ட்ரல் ஒரு மொபைல் செயலியை (mobile application) அளிக்கும்.  மற்றும் 3 வது கட்டத்தில், எம்.எஃப்சென்ட்ரல் ஆனது முதலீட்டாளர்களுக்கு வணிக பரிவர்த்தனைகள் மற்றும் முதலீடுகள், மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் உள்நுழைவு (login) ஆகியவற்றுடன் தொடர்புடைய சேவைகளை செய்ய உதவும்.

கேஃபின் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் பற்றி

 (About KFin Technologies Private Limited):

மியூச்சுவல் ஃபண்ட்கள், மாற்று முதலீடுகள், காப்பீடு மற்றும்  ஓய்வூதியம் ஆகிய சொத்து பிரிவுகளின் பரந்த அளவிலான நிதி தொழில்நுட்பத் தீர்வுகளை கேஃபின் வழங்குகிறது. இந்தியாவில் செயல்படும் 44 இந்திய மியூச்சுவல் ஃபண்ட் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனங்களில் களில் கேஃபின் 25 நிறுவனங்களுக்கு சேவை செய்கிறது. இதன் நிர்வகிக்கும் தொகை (AUM) US$148 பில்லியனுக்கும் மேல் உள்ளது. இந்தியாவில் கடைசியாக தொடங்கப்பட்ட 20 மியூச்சுவல் ஃபண்ட் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனங்களில் 15 நிறுவனங்களுக்கு இந்த நிறுவனம் பங்குதாரராக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் 550-க்கும் மேற்பட்ட பட்டியலிடப்பட்ட மற்றும் 3,700-க்கும் மேற்பட்ட பட்டியலிடப்படாத கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு, இந்தியாவில் எட்டு கோடி முதலீட்டுக் கணக்குகளுடன் (folios) கொண்டு முன்னணி நிறுவனப் பதிவாளராக (corporate registrar) சேவை செய்கிறது. இந்தியாவில் தேசிய ஓய்வூதிய அமைப்புக்கு (National Pension System - NPS) மத்திய பதிவு செய்யும் சேவைகளை (central record keeping services) வழங்கும் இரண்டு  நிறுவனங்களில் கேஃபின் ஒன்றாக உள்ளது.  கேஃபின் மாற்று முதலீடுகள் மற்றும் தனியார் செல்வ மேலாண்மை சேவையில் 300-க்கும் மேற்பட்ட மாற்று முதலீட்டு திட்டங்களுக்கு (AIF schemes) சேவை செய்யும் ஒரு முன்னணி  நிறுவனமாகும். சர்வதேச அளவில், மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் உட்பட ஆசியா முழுவதும் (இந்தியா தவிர்த்து) பல மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் மற்றும் ஓய்வூதிய மேலாண்மை நிறுவனங்களுக்கு கேஃபின் சேவை செய்கிறது.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதி வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான மையமாக இருக்கிறது. கேஃபின் நிறுவனத்தின் தனியுரிம பயன்பாடுகள் (proprietary applications), சிறப்பான தரவு தொழில்நுட்பங்கள் மற்றும் கலப்பின கிளவுட் சூழல் மூலம் 13 கோடி முதலீட்டு கணக்குகளுக்கு சேவை செய்வதோடு தினசரி 10 லட்சத்துக்கும் அதிகமான பரிவர்த்தனைகளை செயல்படுத்துகிறது.

கேஃபின் கடந்த இரண்டு வருடங்களாக (2020 மற்றும் 2021) Work CertifiedTM அமைப்பின் வேலை செய்வதற்கான சிறந்த நிறுவனம் என்கிற விருதை பெற்றுள்ளது. சிறந்த ஃபின்டெக் மற்றும் முன்னணி நிறுவனங்களுக்கான பல விருதுகளை வென்றுள்ளது.

கேம்ஸ் லிமிடெட் பற்றி

{About CAMS Limited - (www.camsonline.com) BSE: 543232; NSE: CAMS}

கேம்ஸ் (CAMS) என்பது தொழில்நுட்பம் சார்ந்த நிதி உள்கட்டமைப்பு மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் பிற நிதி நிறுவனங்களுக்கு சேவை வழங்கும் நிறுவனமாகும். இருபது ஆண்டுகளுக்கு மேலான அனுபவத்தை கொண்டிருக்கிறது. இந்த நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய பதிவாளர் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களின் பரிமாற்ற முகவர் (registrar and transfer agent), அதன் வாடிக்கையாளர்களால் நிர்வகிக்கப்படும் மேலாண்மை தொகை ("AAUM") இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையின் சராசரி சொத்துகளின் அடிப்படையில் ஏறத்தாழ 70%  சந்தைப் பங்களிப்பை கொண்டுள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்த நிறுவனம் அதன் சந்தைப் பங்களிப்பை நிர்வகிக்கப்படும் சொத்தின் அடிப்படையில் அதிகரித்துள்ளது. இது  மார்ச் 2015 இல் தோராயமாக 61% ஆக இருந்தது. இது ஜூன் 2021 இல் தோராயமாக 69.6% ஆக அதிகரித்துள்ளது.

அதன் மியூச்சுவல் ஃபண்ட் வாடிக்கை நிறுவனங்கள், நாட்டில் உள்ள முதல் ஐந்து மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் ஆகும் மற்றும் நாட்டிலுள்ள பதினைந்து மிகப்பெரிய  மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் பத்து  நிறுவனங்கள் (மார்ச் 2021 AAUM அடிப்படையில்)  இந்த நிறுவனத்தின் வாடிக்கை நிறுவனங்களாகும்.

சேவையின்  ஆரம்பம் முதல் இறுதி மதிப்புச் சங்கிலியை உருவாக்கும் முயற்சியுடன் இந்த , நிறுவனம் அதன் சேவைகளை வளர்த்துள்ளது. பரிவர்த்தனையை தொடங்கி வைப்பது, பரிவர்த்தனை செயல்படுத்தல், பணப்பட்டுவாடா மற்றும் தீர்வுகள் போன்றவற்றை உள்ளடக்கிய தொழில்நுட்ப அடிப்படையிலான சேவைகளின் விரிவான போர்ட்ஃபோலியோவை வழங்குகிறது. டிவிடெண்ட் செயலாக்கம், முதலீட்டாளர் இடைமுகம் (investor interface), ஆவண பதிவு, அறிக்கை உருவாக்கம், இடைத்தரகர் எம்பானல்மென்ட் மற்றும் தரகு கணக்கீடு மற்றும் புகார் தொடர்பான சேவைகள் ஆகியவற்றை அளித்து வருகிறது. இவை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு இந்திய அளவில் அமைந்துள்ள அலுவலகங்கள் மூலம் சேவை  வழங்கி வருகிறது.

மாற்று முதலீட்டு ஃபண்ட்கள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு முழுமையான சேவைகளை வழங்கி வருகிறது.

For Media Queries:

Huda Inamdar | huda.inamdar@adfactorspr.com | 98337 71566

Hanisha Vadlamani | hanisha.vadlamani@kfintech.com | 73308 16464

 

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மாத சம்பளக்காரர்கள் மற்றும் முதல் முறை முதலீட்டாளர்களுக்கு ஏற்ற . - பஜாஜ் ஃபின்சர்வ் ELSS வரி சேமிப்பு ஃபண்ட் .!

திரு .  எஸ் .  கார்த்திகேயன் ,  நிறுவனர் ,  https://winworthwealth.com/ மாத சம்பளக்காரர்கள் மற்றும் முதல் முறை முதலீட்டாளர்களுக்கு   ஏற்ற . ...