மொத்தப் பக்கக்காட்சிகள்

தினத்தந்தி நிறுவனர் சி.பா. ஆதித்தனார் daily thanthi

தினத்தந்தி நிறுவனர் சி.பா. ஆதித்தனார். 

1925ம் ஆண்டில் திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் பி.ஏ - இயற்பியல் (அப்போது பிஎஸ்சி இல்லை). கல்வியைத் தொடங்கி அதே கல்லூரியில் எம்.ஏ பட்டமும் பெற்றார். பின்னர் எஃப்.எல் (சட்டம்) பயில சென்னை வந்தார். 1928 ம் ஆண்டு "பாரிஸ்டர்" படிப்பிற்காக இலண்டன் சென்றார்.

1933 ல் சிங்கப்பூர் சென்ற ஆதித்தனார் ஆறு ஆண்டுகள் வழக்கறிஞராக செயலாற்றினார். சிங்கப்பூரின் மிகப் பெரிய வழக்கறிஞர் எனும் பெயர் பெற்றார்.

சிங்கப்பூரில் இருந்தே ஒரு தமிழ் நாளிதழ் தொடங்க முயற்சித்தார். இயலவில்லை. தமிழ் முரசு இதழ் தொடங்க உதவி புரிந்தார்.



1942 ல் நாம் தமிழர் இயக்கத்தைத் தொடங்கினார். இந்திய விடுதலைப் போராட்டம் நடைபெற்றதால், நாம் தமிழர் இயக்க செயல்பாட்டை அப்போது நிறுத்தி வைத்தார்.  1957 ல் சாத்தான்குளம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்தியா விடுதலை பெற்றும் தமிழர்கள் தங்கள் உரிமையைப் பெறவில்லை என்று கருதிய ஆதித்தனார் நாம் தமிழர் இயக்க செயல்பாடுகளை 1957 முதல் மீண்டும் தொடங்கினார்.

1958 - ஜூலை 6 ம் தேதி மன்னார்குடியில் சுதந்திரத் தமிழ்நாடு போராட்டத் திட்ட மாநாடு, நாம் தமிழர் இயக்கம் சார்பில், பாரதிதாசன் தலைமையில் நடத்தப்பட்டது.

இதில் பேசிய, ஈவெரா பெரியார்,  "சுதந்திரத் தமிழ்நாடு என்னும் பாதையில் நான் ஆதித்தனாரோடு சேர்ந்தே பயணிக்கிறேன். தமிழ்நாட்டுக்கு விடுதலை வேண்டும் என்னும் கிளர்ச்சியில் ஆதித்தனாருடைய ஊக்கமும், ஆர்வமும் நம்மையெல்லாம் பின்னுக்குத் தள்ளும்படி செய்துவிட்டது என்பது உண்மையாகும்" என்றார்.

தனித் தமிழ்நாடு கோருபவர்களை இந்திய அரசு கைது செய்து சிறைகளில் அடுத்தடுத்து அடைத்த காரணத்தால் நாம் தமிழர் இயக்கத்தைத் தொடர்ந்து நடத்த இயலாத நிலை ஏற்பட்டது. 1967 சட்டமன்றத் தேர்தலில், திருவைகுண்டம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆதித்தனார் அண்ணா முதல்மைச்சராக இருந்த சட்டப் பேரவைத் தலைவர் ஆனார்.

23/1/1968 - ல் இந்தித் திணிப்பு எதிர்ப்புத் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக ஆதித்தனார் அளித்திருந்த நேர்காணலின் ஒரு பகுதி.

கேள்வி - திராவிடர்கள் யார்?

ஆதித்தனார் - திராவிடர்கள் என்போர் தெலுங்கர்கள். தமிழர் அல்ல. ஆந்திரம், கலிங்கம், தெலுங்கானம் ஆகிய மூன்று தெலுங்கு நாடுகளில் வாழ்ந்த திரி - வடுகர்களே திராவிடர்கள்.

கே - திராவிடர் என்ற சொல்லைத் தமிழர்களுக்குப் பயன்படுத்துவது பொருந்துமா?

ப - பொருந்தாது. 1875 ஆம் ஆண்டுக்கு முன்பு, 'திராவிடர்' என்ற சொல் தெலுங்கர்களை மட்டுமே குறித்து வந்தது. அந்த ஆண்டில் கால்டுவெல் என்ற வெள்ளைக்காரர் தான் எழுதிய புத்தகத்தில் அதுவரை ஆந்திரர்களை மட்டுமே குறிப்பிட்டு வந்த 'திராவிடர்' என்ற சொல்லைத் தமிழர்களைக் குறிப்பதற்கும் பயன்படுத்தப் போவதாகத் தெரிவித்து அதன்படியே பயன்படுத்தி எழுதினார். 

அவர் கையாண்டது தவறான கருத்து. ஏனென்றால் முன் காலத்தில் இருந்த மூன்று தெலுங்கு நாடுகளைத்தான் திரிவடுகம் என்றும் திராவிடம் என்றும் வடவர்கள் சொல்லி வந்தார்கள். 

திரிவடுக நாட்டிற்குத் தெற்கே வாழ்ந்து வந்த தமிழர்களுக்கு அந்தச் சொல் பொருந்தும் என்று கால்டுவெல் எழுதியது தவறான கண்ணோட்டம். 

அவரைப்பின் பற்றி தமிழர்கள் என்பதற்குப் பதிலாக திராவிடர் என்ற சொல்லைப் பயன்படுத்தியதும் தவறாகும்.

தமிழன் தன்னைத் திராவிடன் (அதாவது திரிவடுகன் அல்லது தெலுங்கன்) என்று சொல்வது இழிவாகும். திராவிடன் தமிழ்ச் சொல் அல்ல, வடவர்கள் தெலுங்கர்களுக்கு இட்ட பெயர் அது.

கே - கன்னடமும், களி தெலுங்கும், கவின் மலையாளமும், துளுவும் - தமிழிலிருந்து தோன்றியது என்று மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை கூறியிருக்கிறாரே?

ப - உலகிலேயே பழமையான மொழி தமிழ் மொழி. ஆகவே உலக மொழிகள் - இலத்தீன், கிரீக் போன்ற ஐரோப்பிய மொழிகள் உட்பட அனைத்தும் தமிழில் இருந்து தோன்றியவைதான். ஆங்கிலம், பிரெஞ்ச், இரஷ்ய மொழிகளில் தமிழ்ச் சொல்லை மூலமாகக் கொண்ட பல சொற்கள் இருக்கின்றன. அதற்காக ஆங்கிலம், பிரெஞ்ச் போன்ற மொழிகள் பேசும் மக்களும் தமிழர்களும் ஒரே இனத்தவர் ஆகிவிட முடியுமா?! அதுபோலவே ஆந்திரர், கன்னடியர், மலையாளி, வங்காளி, மராட்டியர் ஆகிய யாவரும் தமிழினத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறிவிட முடியாது.

கே - திராவிடம் என்று பழந்தமிழ் இலக்கியத்தில் இருக்கிறதா?

ப - எந்தத் தமிழ் இலக்கியத்திலும் திராவிடம் என்ற சொல் கிடையாது. அந்தச் சொல்லை முதன் முதலில் பயன்படுத்திய கால்டுவெல் என்ற வெள்ளைக்காரர் வடமொழியிலிருந்துதான் திராவிடம் என்ற சொல்லைக் கண்டுபிடித்ததாகக் கூறி இருக்கிறார்.

கே - பேராசிரியர் சுந்தரம்பிள்ளை 'திராவிட நல் திருநாடு' என்று குறிப்பிட்டிருக்கிறாரே?

ப - தெலுங்கர்களைக் குறிக்கும் திராவிடம் என்ற சொல்லைத்தான் நான் கையாண்டேன் என்று கால்டுவெல் என்னும் வெள்ளைக்காரர் எழுதியுள்ளர். சுந்தரம்பிள்ளை எழுதிய மனோன்மணீயம் இன்றைக்கு (ஏறத்தாழ) 70 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது.

மே - அண்ணாத்துரை (அண்ணா) கேட்கும் திராவிட நாட்டுக்கும் இப்போது இருக்கும் டெல்லி (இந்திய) ஆட்சிக்கும் என்ன வேறுபாடு?

ப - டெல்லி ஆட்சி 14 இனத்தவர்களின் கூட்டாட்சி. திராவிட நாடு என்பது நான்கு இனத்தவர்களின் கூட்டாட்சி.

இரண்டிலுமே தமிழ் மக்களின் நிலை சிறுபான்மைதான்.அதாவது அடிமைகள் நிலைதான்.

கே - ஈவெரா பெரியார், திராவிட நாடு வேண்டாம் என்று சொல்லிவிட்டதால் திராவிட நாடு அமைப்பதற்கான காரணங்கள் பொய்யாகிவிடுமா?

ப - பெரியாரே இதற்கு விளக்கம் சொல்லியிருக்கிறார். பெரியார் முன்பு கேட்ட திராவிட நாடு, தமிழர்கள் பெரும்பான்மையாகவும், மற்றவர்கள் சிறுபான்மையாகவும் இருப்பது.

அண்ணா(துரை) கேட்கும் திராவிட நாடு தமிழரல்லாதார் பெரும்பான்மையாகவும், தமிழர் சிறுபான்மையாகவும் இருப்பது. 

இவ்வாறு சிறுபான்மைத் தன்மை என்பது தமிழர்களை அடிமைத்தனம் ஆக்கிவிடும்.  

கே - தி.மு.கழகத்தினர் கேட்கிற திராவிட நாடு கிடைத்துவிட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்?

ப - திராவிடக் கூட்டாட்சியில் இருந்து "தமிழ்நாடு" விடுதலை அடைவதற்கான போராட்டம் நடத்துவோம்.

கே - தாங்கள் இறுதிவரை நாம் தமிழர் இயக்கத்தை நடத்துவீர்களா?

ப - நாம் தமிழர் இயக்கத்தை நான் நடத்துகிறேன் என்பது தவறு. நான் ஆதரிக்கிறேன் என்பதுதான் சரி.

என் காலமுள்ளவரை நான் ஆதரிப்பதோடு மட்டுமின்றி, என் காலத்துக்குப் பிறகும் வீரத் தமிழ் மக்கள் மனதில் நாம் தமிழர் இயக்கம் நிலைத்து நிற்கும்.

என்று ஆதித்தனார் தமது நேர்காணலில் அப்போதே தெளிவு படுத்தியுள்ளார்.

திராவிட நாடு கோரிக்கையை திமுக கைவிட்டது. இந்திய ஒன்றியத்தில் தனி நாடு கோரிக்கைகள் ஒடுக்கப்பட்டன. மாநில சுயாட்சி - மத்தியில் கூட்டாட்சி எனும் செயல்திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

ஆனால், ஒன்று மட்டும் தந்திரமாக நடைபெற்றது. அது, தமிழ்நாட்டுக்குள் "திராவிடக் கூட்டத்தின் ஆட்சி".

ஆதித்தனார் குறிப்பிட்டதைப் போலவே, 
இதில் இருந்து விடுபடவே தமிழர்கள் போராட வேண்டியுள்ளது.

படம் - நாம் தமிழர் முதல் மாநாட்டு மேடையில் ஆதித்தனார் உரையாற்றுகிறார். ஈவெரா பெரியார், நாம் தமிழர் செயலாளர்  வரதராஜன் ஆகியோர் அமர்ந்திருக்கின்றனர்.

பகிர்வு - வளர்மெய்யறிவான்
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மொரிஷியஸ் நாட்டிலிருந்து கிஃப்ட் சிட்டிக்கு  மாறிய அர்தா குளோபல் ஆபர்சூனிட்டிஸ் ஃபண்ட் Artha Global Opportunities Fund

மொரிஷியஸ் நாட்டிலிருந்து கிஃப்ட் சிட்டிக்கு   மாறிய அர்தா குளோபல் ஆபர்சூனிட்டிஸ் ஃபண்ட், நிதி நெருக்கடி நிறுவனங்களில் முதலீடு செய்ய ...