மொத்தப் பக்கக்காட்சிகள்

காசாகிராண்ட் 10,000 கோடி மதிப்பில் நிலங்களை வாங்க திட்டம்

 

தீவிர பிசினஸ் திட்டங்களை அறிவித்த காசாகிராண்ட்:
2022 ஆம் ஆண்டுக்குள் 10,000 கோடி மதிப்பில் நிலங்களை வாங்கவும் மற்றும் குடியிருப்புகளுக்கான ரியல் எஸ்டேட்டில் 5000 கோடி முதலீடு செய்யவும் திட்டம்
 

~2022 ஆம் ஆண்டுக்குள் பங்குகளை வெளியிடும் பொது நிறுவனமாக மாற இந்நிறுவனம் திட்டமிடுகிறது ~

சென்னை. 23 செப்டம்பர் 2021: தென்னிந்தியாவில் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான காசாகிராண்ட், பங்குகளை வெளியிடும் பொது நிறுவனமாக மாறவிருப்பதையும் மற்றும் பிற முக்கிய வளர்ச்சி திட்டங்களையும் இன்று அறிவித்திருக்கிறது.  சென்னையில் இன்று ஊடகத் துறையினரோடு பேசுகையில், காசாகிராண்ட் – ன் நிறுவனரும், நிர்வாக  இயக்குனருமான திரு. அருண் Mn, பெங்களுருவில் தனது செயல் இருப்பை வலுப்படுத்தவும் மற்றும் ரூபாய்.1500 கோடி என்ற தொடக்கநிலை முதலீட்டோடு ஐதராபாத் சந்தையில் நுழையவும் நிறுவனம் திட்டமிட்டு வருவதாக அறிவித்தார்.  



இந்த மாபெரும் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த ரூ.10,000 கோடி விற்றுமுதல் மதிப்பை சாத்தியமாகக் கொண்ட மொத்த நிலப்பரப்புகளை வாங்க இந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. கடந்த நிதியாண்டின்போது, இந்நிறுவனம் ஏற்கனவே 6000 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களை வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

காசாகிராண்ட் – ன் நிறுவனரும், நிர்வாக  இயக்குனருமான திரு. Mn. அருண், வெளியிட்ட அறிவிப்பின் முக்கிய அம்சங்கள்:

 

காசாகிராண்ட் – ன் நிறுவனரும்,
நிர்வாக
  இயக்குனருமான திரு. Mn. அருண்

·        கடந்த ஆண்டு அளவான ரூ.2300 கோடியுடன் ஒப்பிடுகையில், ரூ.3750 கோடி என்ற விற்பனை இலக்கை அடையவும், USA  மற்றும் DUBAI - யிலும் விற்பனை அலுவலகங்களை நிறுவவும் இந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.

·        குடியிருப்புகளுக்கான ரியல் எஸ்டேட் சந்தையில் மொத்தத்தில் 5000 கோடி முதலீடு செய்வது இந்நிறுவனத்தின் திட்டம்: சென்னையில் 3000 கோடி, பெங்களுருவில் 1250 கோடி மற்றும் பிற சந்தைகளில் 750 கோடி.

·        பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தில் தனது செயலிருப்பை இந்நிறுவனம் வலுப்படுத்தும்.  இந்த இரு சந்தைகளும் மொத்த வருவாயில் 35% பங்களிப்பை வழங்கும்.  சென்னையின் பங்களிப்பு 65% ஆக இருக்கும்.

·        இந்நிறுவனம், பெரும்பாலும், கட்டுபடியாகக்கூடிய மிதமான விலையில் மற்றும் இடைநிலை சொகுசு அபார்ட்மெண்ட், வில்லாக்களை உருவாக்கும்.  இக்குடியிருப்புகளின் சராசரி டிக்கெட் அளவு 85 இலட்சம் என்பதாக இருக்கும்.  எனினும், ரூ.25-45 இலட்சத்திற்கு இடைப்பட்ட விலைகளில் அதிகளவு கட்டுபடியாகக்கூடிய குடியிருப்புகளை உருவாக்குவது மீது சிறப்பு கவனம் செலுத்த இந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. 

·        2024 ஆம் ஆண்டுக்குள் 25 மில்லியன் சதுரஅடி பரப்பு சேர்க்கப்படும்.

·        அடுத்த ஆண்டு பொதுச் சந்தையில் சமபங்குகளுக்கான ஐபிஓ – ஐ மேற்கொள்ள இந்நிறுவனம் திட்டமிட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.  இதற்கான மேலாளர்களாக மோதிலால் ஆஸ்வால் மற்றும் ஜேஎம் ஆகியவை கூட்டாக நியமனம் செய்யப்பட்டிருக்கின்றன.  சமீபத்தில் ரூ.1200 கோடி என்ற நிதி முதலீட்டை காசாகிராண்ட் பெற்றிருக்கிறது. 

·        அப்போலோ குளோபல் மற்றும் கேகேஆர் போன்ற சர்வதேச முதலீட்டாளர்களிடம் இருந்து இந்த நிதி வழங்கல் கிடைத்திருக்கிறது.

 

காசாகிராண்ட் குழும நிறுவனங்கள் மீதான நிகழ்நிலைத் தகவல்:

 

·        தற்போதைய அளவான 100 கோடியில் இருந்து 250-300 கோடி என்ற அளவிற்கு காசாகிராண்ட் பிராப்கேர்  வளர்ச்சியடையும்.

·        அடுத்த 3 ஆண்டுகளுக்குள் காசாகிராண்டின் Staylogy, இன்னும் கூடுதலாக 2000 படுக்கை வசதிகளை உருவாக்கவிருக்கிறது.

·        காசாகிராண்ட் ஸ்பேஸ்இன்டெல் என புதிய பெயர் சூட்டப்பட்டுள்ள காசாகிராண்டு பிஸ்பார்க், அடுத்த 3 ஆண்டுகளில் தொழிலகத் தேவைகளுக்கான சரக்கு கிடங்குகளில் 10-12 மில்லியன் சதுரஅடி பரப்பில் கட்டிடங்களை உருவாக்க திட்டமிட்டிருக்கிறது. 

·        5 மில்லியன் சதுரஅடி பரப்பளவில் வாடகை ஈட்டுகின்ற தகவல் தொழில்நுட்ப மற்றும் அலுவலக அமைவிடங்களை உருவாக்கி, சொந்தமாக வைத்திருப்பது மீது காசாகிராண்ட் பிஸ்பார்க் டிவிஷன் தொடர்ந்து கவனம் செலுத்தும்.

இப்பெருந்தொற்று காலத்தின்போது இந்நிறுவனத்தின் சாதனைகள் பற்றி பேசிய திரு. Mn. அருண், பொது முடக்கத்திற்குப் பிறகு தனது செயல்பாடுகளை மீண்டும் தொடங்கி அதன் விற்பனை இலக்குகளை எட்டுவதில் நிறுவனம் வெற்றியடைந்திருப்பதாக குறிப்பிட்டார்.

இந்த கலந்துரையாடலின்போது பெருந்தொற்று காலத்தில் அதன் பணியாளர்களைப் பாதுகாப்பதற்காக இந்நிறுவனம் எடுத்திருக்கும் நடவடிக்கைகளையும் அவர் முன்னிலைப்படுத்தினார்.

        அறிவிக்கப்பட்ட இரண்டு பொதுமுடக்க காலத்தின்போதும் அனைத்துப் பணியாளர்களுக்கும் முழு ஊதியம் வழங்கப்பட்டது. 

        நிர்ணயிக்கப்பட்ட விற்பனை இலக்குகளை எட்டுவதில் பணியாளர்களின் முயற்சிகளை அங்கீகரித்துப் பாராட்டும் விதமாக 900 பணியாளர்களை துபாய்க்கும் மற்றும் 900 பணியாளர்களை அபுதாபிக்கும் செல்வதற்கான சர்வதேச சுற்றுலா பயணத் திட்டங்களை நிறுவனம் வழங்கியது. 

        கோவிட் தொற்று காலத்தின்போது அனைத்துப் பணியாளர்களுக்கும் சிறப்பு அக்கறை நிறுவனத்தால் காட்டப்பட்டது. 

        பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை முதன்மை முன்னுரிமையாக கொண்டிருக்கும் இந்நிறுவனம், அனைத்து அலுவலகங்களிலும் உள்ள பணியாளர்கள் அனைவருக்கும் இலவசமாக கோவிட் தடுப்பூசி போடும் திட்டத்தை செயல்படுத்தியது.  பணியாளர்களின்  குடும்ப உறுப்பினர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டத்தை  விரிவாக்கம் செய்யும் நடவடிக்கையை இது அறிவித்தது.

        கோவிட் – 19 பாதிப்பினால் உயிரிழந்த பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பினை காசாகிராண்ட் வழங்கியிருக்கிறது; மேலும், பிற வாழ்வாதார உதவிகளையும் வழங்கியதன் மூலம் அவர்களுக்கு ஆதரவளித்திருக்கிறது. 

        இந்நிறுவனத்தின் தற்போது பணியாற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை -

        2000 – காசாகிராண்டில்

        5000 - பிராப்கேரில்

        6000 – தொழிலாளர்கள் - பணி அமைவிடங்களில்

        500  - குழுமத்தின் பிற நிறுவனங்களில்

பொறுப்புமிக்க ஒரு கார்ப்பரேட் குடிமகனாக, சமூகத்திற்கு பயனளிக்கும் பல சிஎஸ்ஆர் செயல்திட்டங்களை காசாகிராண்ட் ஆர்வத்தோடு செயல்படுத்தி வருகிறது. கீழ்க்கண்டவை அவற்றுள் உள்ளடங்கும்:

        வளர்ந்து வரும் இளம் அத்லெட்டிக் விளையாட்டு வீரர்களுக்கு நிதி ஆதரவை வழங்குகின்ற காசாகிராண்ட் அஸ்பையரிங் ஸ்டார்ஸ் செயல்திட்டம்

        2020 டோக்கியோ ஒலிம்பிக்ஸ் நிகழ்வில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து விளையாட்டு வீரர்களையும் கௌரவிக்கும் பாராட்டு விழாவை நடத்தியது.

        எந்த குழந்தையும் பசியோடு இல்லாததை உறுதி செய்வதற்கு காசாகிராண்ட் குழுமத்தின் செயல்திட்டம்

        பெருந்தொற்று காலத்தின்போது ஒட்டுமொத்த பணியாளர்களின் தேவைகளை அக்கறையுடன் கவனித்துக் கொண்டது.

 


காசா கிராண்டு குறித்து:

பேரார்வங்களை உருவாக்குவது மற்றும் அவற்றை பூர்த்திசெய்வது மீதான ஒரு வலுவான நம்பிக்கையினால் உந்தப்பட்டு 2004-ல் தொடங்கப்பட்ட காசா கிராண்டு, ஐஎஸ்ஓ சான்றிதழ் பெற்ற ஒரு முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமாகும். கடந்த 16 ஆண்டுகளில் சென்னை, பெங்களுரு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் 30 மில்லியன் சதுரஅடி பரப்பளவிற்கும்  அதிகமாக ப்ரீமியம் தரத்திலான குடியிருப்பு வளாகங்களை இந்நிறுவனம் உருவாக்கியிருக்கிறது.  110 - க்கும் அதிகமான  குடியிருப்பு வளாகங்களில் சிறந்த வசதிகளோடு வசித்துவரும் 21000 -க்கும் கூடுதலான மகிழ்ச்சியான குடும்பங்கள் இந்நிறுவனத்தின் அர்ப்பணிப்பு உணர்விற்கும் பொறுப்புறுதிக்கும் சாட்சியமாக திகழ்கின்றனர்.   எமது நம்பிக்கையை பிரதிபலிக்கின்ற உயர்தரத்திலான வாழ்விட அமைவிடங்களை உருவாக்குவது என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இந்நிறுவனத்தின் பயணம் 16-வது ஆண்டில் கால்பதித்திருக்கிறது.  ரூ.8000 கோடிக்கும் அதிகமான மதிப்பில் பல செயல்திட்டங்களை மேற்கொள்ளவிருக்கும் காசாகிராண்டு, நிலைத்து நீடிக்கும் மதிப்பீடுகள், நேர்மை மற்றும் தரம் ஆகிய உயரிய பண்பியல்புகளை கொண்டு இன்னும் சிறப்பான வளர்ச்சியை நோக்கி பயணிக்கிறது. 

 

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மொரிஷியஸ் நாட்டிலிருந்து கிஃப்ட் சிட்டிக்கு  மாறிய அர்தா குளோபல் ஆபர்சூனிட்டிஸ் ஃபண்ட் Artha Global Opportunities Fund

மொரிஷியஸ் நாட்டிலிருந்து கிஃப்ட் சிட்டிக்கு   மாறிய அர்தா குளோபல் ஆபர்சூனிட்டிஸ் ஃபண்ட், நிதி நெருக்கடி நிறுவனங்களில் முதலீடு செய்ய ...