மொத்தப் பக்கக்காட்சிகள்

திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தை ரூ.34,250 கோடிக்கு பிரமல் குழுமம் வாங்கியது...!

 

 

பிரமல் நிறுவனம்,  திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ்  நிறுவனத்தை  (டி.ஹெச்.எஃப்.எல்) பணம் கொடுத்து கையகப்படுத்தி இணைப்பு..!

 

பரிவர்த்தனை சிறப்பம்சங்கள்

·        நிதிச் சேவைத் துறையில் வங்கித் திவால் சட்டம் என்கிற ஐபிசி (IBC- Insolvency and Bankruptcy Code) வழித்தடத்தில் முதல் வெற்றிகரமான தீர்வு மற்றும் மதிப்பு அடிப்படையில் மிகப்பெரிய தீர்வு இதுவாகும்.

·        கையகப்படுத்தல் முடிவடைவதற்கு  மொத்த ரூ.34,250 கோடி வழங்கப்படுகிறது.

·        கடன் வழங்கியவர்களில் 94 சதவிகிதத்தினர் பிரமல் நிறுவனத்தின் தீர்மானத்ற்கு ஆதரவாக வாக்களித்தனர்

·        இந்திய ரிசர்வ் வங்கி (RBI - Reserve Bank of India), இந்திய போட்டி ஆணையம் (CCI - Competition Commission of India) மற்றும் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் (NCLT - National Company Law Tribunal) ஆகியவற்றிலிருந்து ஒப்புதல்கள் பெறப்பட்டிருக்கின்றன.

·        பிரமல் கேப்பிட்டல் அண்ட் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் (PCHFL - Piramal Capital and Housing Finance Ltd. டி.ஹெச்.எஃப்.எல் (DHFL) உடன் இணைக்கப்படுகிறது. புதிய நிறுவனம் . பி.சி.ஹெச்.எஃப்.எல் (PCHFL) என பெயரிடப்படும்.

·        டிஹெச்எஃப்எல்-க்கு கடன் வழங்கிய பெரும்பாலானவர்கள் இந்தத் தீர்மான செயல்முறையை வெற்றிகரமாக முடிப்பது மூலம் கிட்டத்தட்ட 46% தொகையை  மீட்கின்றனர்

இந்தியாவின் முன்னணி வீட்டு வசதி நிதி நிறுவனங்களில் ஒன்றாக மாறுகிறது, வாங்கக் கூடிய விலையிலான வீடுகளுக்கு நிதி உதவி (affordable financing)  அளிப்பதில் கவனம் செலுத்துகிறது

·        பத்து லட்சத்துக்கும் (million) அதிகமான வாழ்நாள் வாடிக்கையாளர்கள் கிடைக்கிறார்கள்.

·         301 கிளைகள் மற்றும் 2,338 ஊழியர்களுடன் 24 மாநிலங்களில் செயல்படுதல்

·        இந்தியா முழுவதும் குறைவான நிதிச் சேவை பெற்றிருப்பவர்களுக்கு பல்வேறு நிதித் தேவைகளை நிவர்த்தி செய்ய தளம்

·        குறுகிய காலக் கடன்களில் சிறு கடன் மற்றும் மொத்தக் கடன் கிட்டத்தட்ட 50:50 ஆக உள்ளது.

·        கையகப்படுத்துதல்  நிறுவனத்தின் சிறு கடன் வணிகத்தை ~ 5 மடங்காக அதிகரிக்கும்

·        இந்தக் கையகப்படுத்தல் நிதித் திரட்டும் சராசரி செலவைக் குறைக்கிறது மற்றும்  நிதிச் சேவை வணிகத்தின் சொத்து  கடன் தகுதியை மேலும் மேம்படுத்துகிறது.

கையகப்படுத்தல் கடந்த இரண்டு ஆண்டுகளில், நிறுவனத்தின் நிதிச் சேவை வணிகத்தை மாற்றுவதற்கான ஒரு வணிக உத்திக்கு ஏற்ப உள்ளது

·        ரூ. 18,000 கோடி பங்கு மூலதனம் திரட்டப்பட்டது என்பது நிறுவனத்தின் ஐந்தொகை (balance sheet) -ஐ மிகவும் வலிமையாகி அதிக வாய்ப்புகளுக்கு வழி வகுத்துள்ளது.

·        கணிசமாக குறைக்கப்பட்ட கடன் -  பங்கு மூலதன விகிதம் (debt-to-equity)  நிறுவனத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்கு ஒரு  புதிய வாய்ப்பை உருவாக்கி இருக்கிறது.



மும்பை,  இந்தியா | செப்டம்பர் 28, 2021:

பிரமல் என்டர்பிரைசஸ் லிமிடெட் (Piramal Enterprises Limited -‘PEL’, NSE: PEL, BSE: 500302),  பிரமல் நிறுவனம்,  திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் (டி.ஹெச்.எஃப்எல் - Dewan Housing Finance Corporation Ltd. - DHFL)) நிறுவனத்தை பணம் கொடுத்து கையகப்படுத்தி தனது நிறுவனத்துடன் இணைத்திருப்பதை அறிவித்துள்ளது. நிதிச் சேவைத் துறையில் வங்கித் திவால் சட்டம் என்கிற ஐபிசி (IBC- Insolvency and Bankruptcy Code) வழித்தடத்தில் முதல் வெற்றிகரமான தீர்வு மற்றும் மதிப்பு அடிப்படையில் மிகப்பெரிய தீர்வாக இந்தக் கையகப்படுத்தல் மற்றும் இணைப்பு இருக்கிறது.

இந்த இணைப்பு குறித்து பேசும் போது, பிரமல் குழுமத்தின் சேர்மன் அஜய் பிரமல் (Ajay Piramal, Chairman, Piramal Group) கூறும் போது, “ இந்த அற்புதமான கையகப்படுத்துதலை நிறைவு செய்வதற்காக செய்யப்பட்ட பரிவர்த்தனை கட்டணத்தை அறிவிப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இது நமது நாட்டின் நிதிச் சேவையை பெறாத மற்றும் குறைவாக பெறும் வாடிக்கையாளர்களின் நிதித் தேவைகளை நிறைவேற்ற ஒரு முன்னணி டிஜிட்டல் சார்ந்த, பல்வகைப்பட்ட நிதிச் சேவை நிறுவனமாக மாறுவதற்கான எங்கள் திட்டங்களை துரிதப்படுத்தி இருக்கிறது. எந்தவொரு மேம்பட்ட பொருளாதாரத்தின் முக்கியமான பண்பு ஒரு வலுவான வங்கித் திவால் சட்டம்  ஆகும். முக்கியமான வங்கித் திவால் சட்ட சீர்திருத்தங்கள் இது போன்ற சிக்கலான பிரச்னைகளை இன்னும் முழுமையாக மற்றும் சரியான நேரத்தில் தீர்க்க  உதவி செய்திருக்கிறது.” என்றார்.

பிரமல் குழுமத்தின் செயல் இயக்குநர் ஆனந்த் பிரமல் (Anand Piramal, Executive Director, Piramal Group) கூறும் போது,இந்த ஒருங்கிணைந்த நிறுவனம் என்பது  301 கிளைகள், 2,338 ஊழியர்கள் மற்றும் 10 லட்சத்துக்கும் அதிகமான வாழ்நாள் வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கும். வேகமாக வளர்ந்து வரும் வாங்கக் கூடிய வீட்டுவசதி பிரிவினருக்கு கடன் வழங்குவதில் நாங்கள்  முன்னணி நிறுவனமாக  இருப்போம்.  கடந்த இரண்டு ஆண்டுகளில் நாங்கள் எங்கள் அடுத்த தலைமுறை தொழில்நுட்பத் தளம், மேம்பட்ட பகுப்பாய்வுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு / இயந்திர வழிகற்றல் (artificial intelligence AI/ Machine Learning  ML) திறன்களை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளோம். இந்தக் கையகப்படுத்தல் என்பது  இந்தத் தொழில்நுட்பங்களை வாடிக்கையாளர்களின் மிகப் பெரிய தளத்தில் செயல்படுத்த அனுமதிக்கிறது.இணைக்கப்பட்ட புதிய நிறுவனம் இந்தியாவில் டிஜிட்டல் முதல் சிறு கடன்கள் சந்தையில் முன்னணியில் உள்ளது.”  என்றார்.

பரிவர்த்தனை பற்றி  (About the transaction)


ஜனவரி 2021 இல்,  டி.ஹெச்.எஃப்.எல் நிறுவனத்துக்கு கடன் வழங்கியவர்களில் 94 சதவிகிதத்தினர் பிரமல் நிறுவனத்தின் இணைப்பு தீர்மானத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். இந்தப் பரிவர்த்தனையை நிறைவு செய்வதற்கு ஆர்.பி.ஐ, சி.சி.ஐ மற்றும் என்.சி.எல்.டி ஆகிய அமைப்புகளிலிருந்து  ஒப்புதல்களும் பெறப்பட்டன.

 

இந்தச் செயல்முறையின் ஒரு பகுதியாக, , பிரமல் கேப்பிட்டல் மற்றும் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் (PCHFL) டி.ஹெச்.எஃப்.எல் நிறுவனத்துடன் இணையும். இணைக்கப்பட்ட  நிறுவனம் பிரமல் எண்டர்பிரைசஸ் லிமிடெட் (Piramal Enterprises Limited.)  நிறுவனத்திற்கு 100% சொந்தமானது. டி.ஹெச்.எஃப்.எல் நிறுவனத்துக்கு கடன் வழங்கியவர்கள் (ஃபிக்ஸட் டெபாசிட் போட்டிருப்பவர்கள் உட்பட) டி.ஹெச்.எஃப்.எல் தீர்மானத்தின்படி  மொத்த தொகை  ரூ. 38,000 கோடி  கைமாறுகிறது. இந்தத் தொகை (i). ரூ. 34,250 கோடிகள் பி.சி.ஹெச்.எஃப்.எல் மூலம் பணம் மற்றும் பங்குகளாக மாற்ற முடியாத கடன் பத்திரங்கள் (Non-Convertible Debentures - NCD) மற்றும் (ii) ~ ரூ. 3,800 கோடி, இது டி.ஹெச்.எஃப்;எல் நிறுவனத்தில் இருக்கும் பண இருப்புத்தொகையிலிருந்து, கடன் வழங்குபவர்களின் உரிமை (தீர்மானத் திட்டத்தின்படி) ஆகும்.

 

டி.ஹெச்.எஃப்.எல் நிறுவனத்துக்கு ஃபிக்ஸட் டெபாசிட் போட்டிருப்பவர்களையும் சேர்த்து  70,000 பேர் கடன் வழங்கி இருந்தனர். அவர்களில் பெரும்பாலோர் இந்த தீர்க்கும் செயல்முறையை வெற்றிகரமாக முடிப்பதன் மூலம் நிலுவையில் உள்ள தொகையில் கிட்டத்தட்ட 46% திரும்பப் பெறுகின்றனர். கையகப்படுத்தல் நிறைவடையும் போது ரூ. 34,250 கோடி மதிப்புள்ள தொகை பிரமால் குழுமத்தால் செலுத்தப்படும். இதில், மொத்த பரிசீலனையில்,  ரொக்கம் ரூ. 14,700 கோடி, மற்றும்  ரூ. 19,550 கோடி (10 வருட என்.டி.சி -க்கள், ஆண்டுக்கு 6.75% வட்டி -. அரை ஆண்டு அடிப்படையில்) ஆகியவை அடங்கும்

பரிவர்த்தனை ஒருங்கிணைப்புகள் (Transaction Synergies)

இணைக்கப்பட்ட புதிய நிறுவனம், பிரமல் குழுமத்தின் நிதி வலிமை, முக்கிய மதிப்புகள் மற்றும் நிறுவன நம்பகத்தன்மையை டி.ஹெச்.எஃப்.எல் நிறுவனத்தின் விநியோக நெட்வொர்க், 301 கிளைகள் மற்றும் 2,338 ஊழியர்களுக்கு 24 மாநிலங்களில் ~ 10 லட்சம் வாழ்நாள் வாடிக்கையாளர்களை வழங்குகிறது - இது நாட்டின் முன்னணி வீட்டு நிதி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது .

செலவு செய்வதில் பட்ஜெட் பார்க்கும் இந்திய வாடிக்கையாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இதுவரைக்கும் நிதிச் சேவையை பெறாதவர்கள் மற்றும் குறைவான நிதிச் சேவை பெறும் 'பாரத்' சந்தையின் பல்வேறு நிதி தேவைகளை நிவர்த்தி செய்ய, வாங்கக் கூடிய விலை வீட்டுப் பிரிவில் (கிட்டத்தட்ட ரூ. 17 லட்சம் வீட்டுக் கடன்) இந்தியா முழுவதும் ஒரு தளத்தை உருவாக்குகிறது. பெருநகரங்களை ஓட்டி உள்ள நிறுவனங்கள் மற்றும் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் (Tier I, II and III cities) வீட்டுக் கடன் வழங்க உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில், பிரமல் எண்டர்பிரைசஸ் நிறுவனம் ரூ. 18,000 கோடி பங்கு மூலதனம் திரட்டுவதன் மூலம் இத்தகைய பெரிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள அதன் ஐந்தொகை(balance sheet) -ஐ வலுப்படுத்தியது.

இது நிகர கடன் – பங்கு மூலதன விகிதத்தை குறைத்து நீண்ட கால கடன்களை நோக்கி நகர்த்தியது, இதன் மூலம் இணைக்கப்பட்ட நிறுவனத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்கு சிறப்ப்பான வாய்ப்பை உருவாக்கி இருக்கிறது. இந்தக் கையகப்படுத்தல் என்பது  இந்தக் குழுமத்தின் நிதிச் சேவை வணிகத்தை மாற்றி அமைப்பதற்கான  வணிக உத்தியின் ஒரு முக்கிய நிலையாகும். இந்தப் பரிவர்த்தனை சிறு கடன் அளவை 5  மடங்காக வளர்ப்பது மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த கடன் வழங்குவதில் குறிப்பிடத்தக்க பன்முகத்தன்மைக்கு வழிவகுக்கும். இது கிட்டத்தட்ட 50:50 என்கிற சிறு கடன் : மொத்தக் கடன் கலவையை அடைய உதவுகிறது. நிறுவனம் புதிய மொபைல் செயலி உட்பட இயந்திர கற்றல் (எம்எல்) மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றால் இயக்கப்படும்ஃபைஜிட்டல்( “phygital”) கடன் வழங்கும் தளத்தைப் பயன்படுத்துகிறது. இவை தவிர, பரிவர்த்தனை சராசரி கடன் செலவை கிட்டத்தட்ட ~ 1.30% குறைக்க வழிவகுக்கும், மேலும் எங்கள் நிதிச் சேவை வணிகத்தின் சொத்து பொறுப்பு மேலாண்மை (ALM) வணிகத்தை மேலும் மேம்படுத்தும்.

இந்தப் பரிவர்த்தனை நிறுவனத்தின் நிதிச் சேவைகள் வணிகத்தில் பங்கு மூலதனப் டி பயன்பாட்டை கணிசமாக மேம்படுத்தும். நிதி சேவைகள் வணிகத்தின் நிகர கடன்: பங்கு மூலதனம் ஜூன் 2021 முதல் குறுகிய காலம் வரை   1.6x முதல் 3.5x க்கு அருகில் இருக்கும்.

விவரங்கள்

என்ன மாற்றங்கள்?

 

 

வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை

வாழ்நாள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 23,286 லிருந்து 43 மடங்கு அதிகரித்து 10 லட்சமாக உயர்கிறது.  

நிறுவனம் செயல்படும் மாநிலங்களின் எண்ணிக்கை

10 லிருந்து 2.4 மடங்கு உயர்ந்து 24 ஆக அதிகரிப்பு

நகரங்களின் எண்ணிக்கை

40 நகரங்களிலிருந்து 6 மடங்கு உயர்ந்து  236  ஆக உயர்வு

கிளைகள் எண்ணிகை

14 லிருந்து 22 மடங்கு உயர்ந்து 301

 

சிறி கடன் அளவு

 சிறு கடன்களின் அளவு 5 மடங்கு  உயர்கிறது.

கடன் பரவலாக்கம்

 

சிறு கடன்கள் மற்றும் மொத்தக் கடன்கள் விகிதம் குறூகிய காலத்தில் 50:50 ஆக இருக்கும்.

 

 

எதிர்கால திட்டம் (Future Roadmap)

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியக் குடும்பத்தின் கடன் 12% ஆக உள்ளது. இது உலகின் கணிசமான நாடுகளின் பொருளாதாரங்களில் மிகக் குறைவானது. இது இந்தியாவில்[1] வீட்டு நிதி வணிகத்திற்கான பயன்படுத்தப்படாத சந்தை திறனைக் குறிக்கிறது.

வாங்கக் கூடிய மலிவு விலை வீடுகளுக்கு இந்திய அரசாங்கத்தின் முக்கியத்துவத்தால், 2 மற்றும் 3 ஆம் நிலை நகரங்கள் / நகரங்களில் கடன்  வாங்கி இருக்கும் வாடிக்கையாளர்களின் பங்களிப்பு கடந்த சில ஆண்டுகளில் [2]கணிசமாக அதிகரித்து வருகிறது.

இந்தக் கையகப்படுத்தல் இப்போது இந்தியா முழுவதும் உள்கட்டமைப்பை ஒரு பெரிய கிளை நெட்வொர்க் மற்றும் கணிசமான வாடிக்கையாளர் தளத்தை  இந்த நிறுவனத்துக்கு வழங்கும். இது தொழில்நுட்பம் சார்ந்த பல சிறு கடன் திட்டங்களை  வழங்கும் டிஜிட்டல் தளத்தை மேம்படுத்துகிறது.

புதுமையான திட்டங்கள், தனிப்பயனாக்கப்பட்ட சலுகை மற்றும் சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தின் மூலம் சிறு கடன் வழங்குவது கணிசமாக வளர மற்றும் பன்முகப்படுத்த நிறுவனத்திற்கு இது உதவுகிறது.

சிறு கடன் உதவியின் பங்களிப்பு குறுகிய காலத்தில் கிட்டத்தட்ட 50% மற்றும் நீண்ட காலத்தில்  67% ஆக மேம்படும். சிறு கடன் வணிக வளர்ச்சி நிதிச் சேவைகள் வணிகத்தில் மூலதன செயல்திறனை எளிதாக்கும். இந்த நிறுவனம், பயன்படுத்திய கார்கள் (used cars) மற்றும் இரு சக்கர வாகன கடன்கள், தொழிற்கல்வி மற்றும் ஆன்லைன் படிப்புகளுக்கான கல்வி கடன்கள்; கட்டுமான நிறுவனங்களின் நிதித் தேவையை பூர்த்தி செய்ய சிறிய பில்டர் கடன் உதவி; ஜாமீன் இல்லா வணிக கடன்கள்; தனிநபர் கடன்கள் மற்றும் பத்திரங்களுக்கு எதிரான கடன் (loan against securities) போன்ற சேவைகளை வழங்குகிறது.

பிரமல் நிறுவனத்தின்டிஜிட்டல் அட் தி கோர் ’(‘Digital at the Core’) தனியுரிம தொழில்நுட்பத் தளம், புதிய மொபைல் செயலி உட்பட, செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல், தடையற்ற வாடிக்கையாளர் சேவையை வழங்க விரிவாகப் பயன்படுத்தும். கூடுதலாக, அதன் தளத்தின் தொடர்ச்சியான புதுமையான கண்டுபிடிப்பு மற்றும்  மேம்பாட்டை பராமரிக்க, பிரமல் நிறுவனம் பெங்களூரூவில் உள்ள தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் தரவு பகுப்பாய்வு சிறப்பு மையத்தை (Centre of Excellence for Technology, Engineering and Data Analytics centre) சுமார் 10,000 சதுர அடி பரப்பளவில் அமைத்துள்ளது.

 

***


 

 



 

1 Source: IMF

[2]Source: RBI

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மொரிஷியஸ் நாட்டிலிருந்து கிஃப்ட் சிட்டிக்கு  மாறிய அர்தா குளோபல் ஆபர்சூனிட்டிஸ் ஃபண்ட் Artha Global Opportunities Fund

மொரிஷியஸ் நாட்டிலிருந்து கிஃப்ட் சிட்டிக்கு   மாறிய அர்தா குளோபல் ஆபர்சூனிட்டிஸ் ஃபண்ட், நிதி நெருக்கடி நிறுவனங்களில் முதலீடு செய்ய ...