மொத்தப் பக்கக்காட்சிகள்

நீண்ட காலத்தில் மூலதன அதிகரிப்பை ஏற்படுத்தும் யூ.டி.ஐ ஃபோகஸ்ட் ஈக்விட்டி ஃபண்ட்

 யூ.டி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் யூ.டி.ஐ ஃபோகஸ்ட் ஈக்விட்டி ஃபண்ட்அறிமுகம்

யூ.டி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யும் மற்றும் எப்போது வேண்டுமானாலும் யூனிட்களை விற்று பணமாக்கும் ஓப்பன் எண்டெட் பங்குச் சந்தை சார்ந்த (Open-ended Equity Scheme) திட்டமான யூ.டி.ஐ ஃபோகஸ்ட் ஈக்விட்டி ஃபண்ட் (UTI Focused Equity Fund) திட்டத்தை  அறிமுகம் செய்துள்ளது. இது அனைத்து பங்குச் சந்தை மதிப்பு கொண்ட (Across Market Capitalization) நிறுவனப் பங்குகளில் அதிகபட்சம் 30 பங்குகளில் முதலீடு செய்யும் திட்டமாகும்.

இந்த ஃபண்டில் புதிய வெளியீடு (New Fund Offer - NFO) ஆகஸ்ட் 04, 2021 தொடங்குகிறது. ஆகஸ்ட் 18, 2021 அன்று நிறைவு பெறுகிறது.  இந்தப் புதிய வெளியீடு முடிந்து, புதிய முதலீடு மற்றும் விற்பனை (Subscription and Redemption) ஆகஸ்ட் 26,2021 அன்று தொடங்குகிறது.

இந்தத் திட்டத்தின் முதலீட்டு நோக்கம், நீண்ட காலத்தில் மூலதன அதிகரிப்பை ஏற்படுத்துவதாகும். அதற்காக, அனைத்து பங்குச் சந்தை மதிப்பு கொண்ட  நிறுவனப் பங்குகளில் அதிகபட்சம் 30 பங்குகள் மற்றும் ஈக்விட்டி சார்ந்த ஆவணங்களில் முதலீடு செய்யப்படுகிறது. அதேநேரத்தில், இந்தத் திட்டத்தில் மூலதன அதிகரிப்புக்கு எந்த ஓர் உத்தரவாதமோ அல்லது உறுதியோ கிடையாது.

இந்தத் திட்டத்தின் நிதி மேலாளராக (Fund Manager) திரு. சுதன்ஷு அஸ்தனா (Mr. Sudhanshu Asthana) உள்ளார்.

திரு. சுதன்ஷு அஸ்தனா கூறும் போது, “ ஃபோகஸ்ட் முதலீட்டின் மூலம் முதலீட்டுக் கலவை (Portfolio) அதிக ஆல்பா (Alpha) –ஐ உருவாக்குவதாக இருக்கும். இது இரு விதமாக செயல்படுகிறது. முதலில் அதிக எண்ணிக்கையிலான பங்குகளிலிருந்து எங்களின் ஸ்கோர் ஆல்பா முதலீட்டு தத்துவத்தின் படி, (Score Alpha Investment Philosophy) அதிக அனுபவம் கொண்ட நிதி மேலாண்மை குழு சரியான பங்குகளை தேர்வு செய்கிறது. இரண்டாவதாக, பங்கு முதலீட்டுக் கலவை, நல்ல வருமானத்தை கொடுக்கும் விதமாக கூடுதல் கவனத்துடன் வலிமையானதாக உருவாக்கப்படும்” என்றார்.

யூ.டி.ஐ ஃபோகஸ்ட் ஃஈக்விட்டி ஃபண்ட், அதிகபட்சம் சிறப்பான 30 நிறுவனப் பங்குகளை கொண்ட கூடுதல் கவனம் கொண்ட வலிமையான முதலீட்டுக் கலவையாக (Concentrated Portfolio) உருவாக்கப்படும். இந்த முக்கிய முதலீட்டுக்  கலவை (Core Portfolio), நீண்ட காலத்தில் நல்ல வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள நிறுவனப் பங்குகளை தேர்ந்தெடுத்து உருவாக்கப்படும். முதலீட்டு கலவையின் ஒரு பகுதி, பரிமாற்ற வாய்ப்புள்ள நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யப்படும். சுழற்சி முறையிலான வாய்ப்புகளை கொண்ட குறைவாக மதிப்பிடப்பட்டிருக்கும் பங்குகளிலும் முதலீடு செய்யப்படும்.” என்று மேலும் தெரிவித்தார்.


யூ.டி.ஐ ஃபோகஸ்ட் ஃஈக்விட்டி ஃபண்ட்-ல் கீழிலிருந்து மேல் அணுகுமுறையில் (Bottom-up Approach) முதலீட்டுக்கான பங்குகள் தேர்வு செய்யப்படும். இந்தப் பங்குகள் வளர்ச்சி மற்றும் மதிப்பு பங்குகளின் (Growth and Value stocks) கலவையாக இருக்கும். மேலும், இந்த ஃபண்டில் இடர்ப்பாட்டை குறைக்கும் நோக்கத்துடன் முதலீடு அனைத்து துறைகள் மற்றும் பரவலான பங்குச் சந்தை மதிப்பு கொண்ட நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யப்படும்.

யூ.டி.ஐ ஃபோகஸ்ட் ஃஈக்விட்டி ஃபண்ட்-ன் முக்கிய அம்சங்கள் (Salient features of UTI Focused Equity Fund)

  • தகுதியான முதலீட்டாளர்கள் (Eligible Investors)

இந்தத் திட்டத்தில் இந்தியக் குடிமக்கள், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் (NRIs), நிறுவனங்கள், வங்கிகள், தகுதி வாய்ந்த அறக்கட்டளைகள், நிதி அமைப்புகள், வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் உள்ளிட்டோர் முதலீடு செய்யலாம்.

  • புதிய ஃபண்ட் வெளியீட்டு விலை (New Fund Offer Price)

புதிய ஃபண்ட் வெளியீட்டு (NFO) காலத்தில் முகமதிப்பு (Face Value) அதாவது ஒரு யூனிட் ரூ. 10 என்கிற விலையில் விற்பனை செய்யப்படும்.

 

சொத்து ஒதுக்கீடு (Asset Allocation)

முதலீட்டு ஆவணங்கள் (Instruments)

தோராய சொத்து ஒதுக்கீடு -

(%  மொத்த சொத்தில்)

இடர்ப்பாடு (Risk Profile)

குறைந்தபட்சம் (%)

அதிகப்பட்சம் (%)

நிறுவனப் பங்குகள் மற்றும் பங்கு சார்ந்த திட்டங்கள் ( அதிகபட்சம் 30  பங்குகள்)

65

100

அதிகம்

கடன் மற்றும் நிதிச் சந்தை ஆவணங்கள் (including securitized debt*)

0

25

குறைவு முதல் நடுத்தரம்

ரெய்ட்கள் மற்றும் இன்விட்கள் (REITs & InvITs) மூலம் வெளிடப்பட்ட யூனிட்கள்

0

10

நடுத்தரம் முதல் அதிகம்

 

*Debt instruments shall be deemed to include securitised debts (excluding foreign securitised debt) and investment in securitised debts may be up to 50% of the Debt and Money instruments.

  • குறைந்தபட்ச முதலீடு (Minimum Application Amount)

குறைந்தபட்ச ஆரம்ப முதலீடு ரூ. 5,000/ மற்றும் ரூ.1-ன் மடங்குகள். உச்ச வரம்பு எதுவும் இல்லை. கூடுதல் முதலீடு (Additional Purchase) தொகை ரூ.   1,000/ மற்றும் ரூ. 1-ன் மடங்குகள். உச்ச வரம்பு எதுவும் இல்லை. .

  • திட்டங்கள் மற்றும் விருப்பங்கள் (Plans and Options)

இந்தத் திட்டத்தில் ரெகுலர் மற்றும் டைரக்ட் பிளான் (Regular and Direct Plan) மூலம் முதலீடு செய்ய முடியும்.

வளர்ச்சி மற்றும் வருமான விநியோகம் மற்றும் மூலதனத்தை எடுத்துக்கொள்ளும் விரும்பங்கள் (௸rowth and Payout of Income Distribution cum capital withdrawal options) உள்ளன.

 

சிறப்பு திட்டங்கள்/ வசதிகள் (Special Products / Facilities Offered)

 

·         சீரான முதலீட்டுத் திட்டம் (Systematic Investment Plan -SIP)

·         முதலீட்டை அதிகரிக்கும் வசதி (Step up facility)

·         அனைத்து நாள் எஸ்.ஐ.பி (Any Day SIP)

·         நுண் எஸ்.ஐ.பி (Micro SIP -Non PAN exempt folios)

·         முதலீட்டை நிறுத்தி வைக்கும் வசதி (Pause facility)

·         சீராக பணம் எடுக்கும் வசதி (Systematic Withdrawal Plan - SWP)

·         சீராக பணம் மாற்றும் முதலீட்டுத் திட்டம் (Systematic Transfer Investment Plan -STRIP) {முதலீடு செய்ய இருக்கும் திட்டம் மற்றும் ஆதாரத் திட்டம் (Destination Scheme and Source Scheme) }இடையே இந்த வசதி உண்டு

·         நெகிழ்சி சீராக பணம் மாற்றும் முதலீட்டுத் திட்டம் (Flexi Systematic Transfer Investment Plan (Flexi STRIP) (முதலீடு செய்ய இருக்கும் திட்டம் மற்றும் ஆதாரத் திட்டம்)

·         வருமான விநியோகம் மற்றும் மூலதனத்தை எடுத்துக்கொள்ளும் வசதி (Transfer of Income Distribution cum capital withdrawal plan)

 

  • கட்டண விவரம் (Load Structure)
  •  

·         நுழைவுக் கட்டணம் (Entry Load): இல்லை

(செபி விதிமுறைபடி அனுமதி இல்லை)

 

·         வெளியேறும் கட்டணம் (Exit Load)

முதலீட்டுக் காலம் (Period of Holding)

வெளியேறும் கட்டணம் ( % என்.ஏ.வி மதிப்பில்)

ஓராண்டுக்குள்

1%

ஓராண்டு மற்றும் அதற்கு மேல் 

இல்லை

 

  • பெஞ்ச்மார்க் இண்டெக்ஸ் (Benchmark Index)

நிஃப்டி 500 இண்டெக்ஸ் டி.ஆர்.ஐ (Nifty 500 Index -TRI)

திட்டத்தின் லேபிள் (Product Label):

யூ.டி.ஐ. ஈக்விட்டி ஃபண்ட்

(அனைத்து பங்குச் சந்தை மதிப்புகளில் அதிகப்பட்சம் 30 நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யும் ஓப்பன் எண்டெட் திட்டம்)

UTI Focused Equity Fund

 (An open ended equity scheme investing in maximum 30 stocks across market caps)

இந்தத் திட்டம் யாருக்கு ஏற்றது*:

  • நீண்ட கால மூலதன வளர்ச்சி
  • அனைத்து பங்குச் சந்தை மதிப்புகளில் அதிகப்பட்சம் 30 நிறுவனப் பங்குகள் மற்றும் பங்கு சார்ந்த திட்டங்களில் முதலீடு

 

*ஏதாவது சந்தேகம் இருந்தால் முதலீட்டாளர்கள், தங்களின் நிதி ஆலோசகர்களிடம் ஆலோசனை செய்து, அதன் பிறகு இந்தத் திட்டம் தங்களுக்கு ஏற்றதா என்பதை முடிவு செய்து அதன் பிறகு முதலீடு செய்யவும்.

யூ.டி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் பற்றி (About UTI Mutual Fund)

யூ.டி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் (UTI Mutual Fund) என்பது இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையை நெறிப்படுத்தும் செபி (SEBI) அமைப்பில் பதிவு செய்யப்பட்ட ஒரு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமாகும்.

மும்பை 

ஆகஸ்ட் 04, 2021

Registered Office: UTI Tower, ‘Gn’ Block, Bandra - Kurla Complex, Bandra (E), Mumbai - 400 051.Phone: 022-66786666. For more information please contact the nearest UTI Financial Centre or your AMFI/NISM certified Mutual Fund Distributor for a copy of Statement of Additional Information, Scheme Information Document and Key Information Memorandum cum Application Form

Mutual Fund Investments are subject to market risks, read all scheme related documents carefully

***

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

குறைவான வருமான வரி..! ஃப்ராங்க்ளின் இந்தியா லாங் டியூரேஷன் ஃப்ண்ட் Franklin India Long Duration Fund

குறைவான வருமான வரி..! ஃப்ராங்க்ளின் இந்தியா லாங் டியூரேஷன் ஃப்ண்ட் (Franklin India Long Duration Fund)   ஃப்ராங்க்ளின் இந்தியா மிய...