மொத்தப் பக்கக்காட்சிகள்

கெம்பிளாஸ்ட் சன்மார், புதிய பங்கு வெளியீடு ஆக. 10, 2021 ஆரம்பம்..!

 

கெம்பிளாஸ்ட் சன்மார் லிமிடெட், 

புதிய பங்கு வெளியீடு 

ஆகஸ்ட் 10, 2021  செவ்வாய் கிழமை ஆரம்பம்..!

* கெம்பிளாஸ்ட் சன்மார் லிமிடெட் நிறுவனத்தின் ரூ. 5 முக மதிப்பு கொண்ட, சம பங்கு ஒன்றின் பங்கு விலைப் பட்டை ரூ. 530  முதல் ரூ. 541 ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.  

* பங்கு வெளியீடு  செவ்வாய்  கிழமை  ஆகஸ்ட் 10, 2021 தொடங்கி, வியாழக் கிழமை ஆகஸ்ட் 12, 2021 வரை நடக்கிறது.

*
பங்கு வெளியீட்டு விலை, முக மதிப்பை போல் 106 முதல் 108.20 மடங்குகள் ஆகும்.



வியாழக் கிழமை,  ஆகஸ்ட் 05, 2021:  சிறப்பு  வகை ரசாயனங்கள் ஒட்டும் பிவிசி பிசின் மற்றும் மருந்து, வேளாண் - ரசாயனங்கள் உற்பத்தி மற்றும் சிறப்பு வகை ரசாயனத் துறைகளுக்கான மூலப் பொருட்கள் மற்றும் இடைநிலை பொருள்கள் உற்பத்தியில் கூடுதல்  கவனம் செலுத்தி வரும் இந்திய நிறுவனம், கெம்பிளாஸ்ட் சன்மார் லிமிடெட் (Chemplast Sanmar Limited -‘CSL’ or the ‘Company’) ஆகும். இந்த நிறுவனம், பொதுமக்களுக்கு புதிய பங்குகளை {(IPO - Initial Public Offering  - Equity Shares (“Offer”)}  ஆகஸ்ட் 10, 2021 முதல் வெளியிடுகிறது.

சம பங்கு ஒன்றின் பங்கு விலைப் பட்டை (Price Band) ரூ. 530  முதல் ரூ. 541 ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. குறைந்தபட்சம் 27 பங்குகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதன் பிறகு 27-ன் மடங்குகளில் விண்ணப்பிக்கலாம். ரூ. 5 முக மதிப்பு கொண்ட இந்த சம பங்கு (“Equity Shares”) வெளியீட்டில், கெம்பிளாஸ்ட் சன்மார் லிமிடெட் புதிய பங்கு வெளியீட்டின் மூலம்  மொத்தம் ரூ.38,500 மில்லியன் (the “Offer”) நிதி திரட்டுகிறது. இந்தப் பங்கு வெளியீட்டில் ரூ. 13,000   மில்லியன் இந்த நிறுவனத்தின்  புதிய பங்கு வெளியீடாக (the “Fresh Issue”)  உள்ளது. சன்மார் ஹோல்டிங்ஸ் லிமிடெட் (Sanmar Holdings Limited - “SHL” or the “Promoter Selling Shareholder”) - க்கு உரிமையான ரூ. 24,634.40  மில்லியன் மதிப்புள்ள சம பங்குகள் பங்குச் சந்தை மூலம் ஆஃபர் பார் சேல் என்கிற முறையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதேபோல், சன்மார் என்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெட் (Sanmar Engineering Services limited -“SESL” or the “Promoter Group Selling Shareholder”). - க்கு  உரிமையான ரூ. 865.60  மில்லியன் மதிப்புள்ள சம பங்குகள் ஆஃபர் பார் சேல் என்கிற முறையில் பங்குச் சந்தையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

கடந்த 1957 ஆம் ஆண்டின், பத்திரங்கள் ஒப்பந்தங்கள் (ஒழுங்குமுறை) விதிமுறைகள் (Securities Contracts (Regulation) 19(2)(b)-ன் படி செபி அமைப்பின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, திருத்தப்பட்ட விதிமுறை 31 (“SCRR”), செபி (Issue of Capital and Disclosure Requirements) விதிமுறைகள் 2018 படி (“SEBI ICDR Regulations”) இந்தப் புதிய பங்கு வெளியீடு நடக்கிறது.  செபி ஐ.சி.டி.ஆர் விதிமுறைகள், விதிமுறை 6(1)-ன் கீழ் ,ஏலமுறையில் (Book Building Process) பங்கு விற்பனை நடக்கிறது. நிகர பங்கு விற்பனையில்  75 சதவிகிதத்துக்கு மேற்படாமல் தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களுக்கு (Qualified Institutional Buyers - QIBs), (“QIB Portion”), நிறுவனம் மற்றும் பங்கு விற்பனையாளர்  ஒதுக்க வேண்டும். இதில், 60% விருப்பத்தின் அடிப்படையில் பெரிய முதலீட்டாளர்களுக்கு (Anchor Investors), (“Anchor Investor Portion”), செபி அமைப்பின் ஐ.சி.டி.ஆர் விதிமுறைகளின்படி ஒதுக்கீடு செய்யப்படுடும். இதில் மூன்றில் ஒரு பங்கு, பங்குகள் ஆங்கர் முதலீட்டாளர்கள் ஏலம் கேட்டுள்ள விலை அல்லது அதை விட அதிகமாக இருக்கும்பட்சத்தில்  அவை உள்நாட்டு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.

பங்குகள் கேட்டு குறைவாக விண்ணப்பம் செய்யப்பட்டிருக்கும்பட்சத்தில் அல்லது ஆங்கர் முதலீட்டாளர்களுக்கான பகுதி பங்குகள் ஒதுக்கப்படவில்லை என்றால் மீதமுள்ள பங்குகள் நிகர தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கான பகுதிக்கு ஒதுக்கப்படும். மேலும், நிகர கியூ.ஐ.பி (Net QIB)  ஒதுக்கீட்டில் 5% பங்குகள் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் ஒதுக்கப்படும். மீதமுள்ள கியூ.ஐ.பி ஒதுக்கீட்டில் உள்ள பங்குகள் விகிதாச்சார அடிப்படையில், செல்லத்தக்க ஏலங்கள் வெளியீட்டு விலையில் அல்லது அதற்கு மேலாக கேட்கப்பட்டிருக்கும்பட்சத்தில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் உள்ளிட்ட கியூ.ஐ.பி நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படும்.

அதேநேரத்தில், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின்  மொத்த தேவை கியூ.ஐ.பி பகுதியின் 5%-க்கும் குறைவாக இருந்தால், மியூச்சுவல் ஃபண்ட் பகுதியில் ஒதுக்கீடு செய்ய இருக்கும் பங்குகள் கியூ.ஐ.பிகளுக்கு விகிதாசார ஒதுக்கீட்டிற்காக மீதமுள்ள கியூ.ஐ.பி பகுதியில் சேர்க்கப்படும். கியூ.ஐ.பி-களுக்கு குறைந்தபட்சம் 75 சதவிகித பங்குகள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்றால், நிறுவனம் ஏலம் மூலம் பெறப்பட்ட தொகையை திரும்ப அளிக்கும்.  

மேலும், மொத்தப் பங்கு வெளியீட்டில் 15 சதவிகிதத்துக்கு குறையாமல் விகிதாச்சார அடிப்படையில் நிறுவனம் சாராத (Non-Institutional) முதலீட்டாளர்களுக்கும், 10 சதவிகிதத்துக்கு குறையாமல் விகிதாச்சார அடிப்படையில் சிறு தனிநபர் முதலீட்டாளர்களுக்கும் (Retail Individual Investors) செபி அமைப்பின் ஐ.சி.டி.ஆர் விதிமுறைகளின்படி பங்குகள் ஒதுக்கப்படும். பங்கு வெளியீட்டு விலை (Offer Price) அல்லது அதற்கு அதிகமான விலையில் கேட்கப்பட்டால் செபி அமைப்பின் விதிமுறைகள் படி இப்படி பங்குகள் ஒதுக்கீடு செய்யப்படும்.

அனைத்து தகுதியுள்ள முதலீட்டாளர்களும் (ஆங்கர் முதலீட்டாளர்கள் தவிர) அனைவரும் அஸ்பா  (ASBA - Applications Supported by Blocked Amount) முறையில் மற்றும் யூ.பி.ஐ ஐ.டி (ஆர்.ஐ.பிகளுக்கு) பங்குகளுக்கு  விண்ணப்பிக்க வேண்டும். இந்த முறையில் பங்குகள், ஒதுக்கீடு செய்யப்பட்டால் மட்டுமே முதலீட்டாளர் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்படும். அதேநேரத்தில், விண்ணப்பத்துக்கான தொகை வங்கி கணக்கில், சுய சான்றளிக்கப்பட்ட சிண்டிகேட் வங்கிகள் (Self Certified Syndicate Banks (“SCSBs”) அல்லது யூ.பி.ஐ சிஸ்டத்தில் முடக்கி  (Blocked) வைக்கப்பட்டிருக்கும். ஆங்கர் முதலீட்டாளர்கள் இந்த அஸ்பா முறையில் விண்ணப்பிக்க அனுமதி இல்லை.

புதிய பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதி கீழ்க்கண்ட தேவைக்கு பயன்படுத்தப்படுத்த இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

(i)  நிறுவனத்தால் வெளியிடப்பட்ட என்.சி.டிகள் (NCDs) முன்னதாக முழுமையாக மீட்கப்படும் (" என்.சி.டி மீட்பு" - “NCD Redemption”); மற்றும் (ii) பொது  நிறுவன  நோக்கங்கள்.

ஐ.சி.ஐ.சி.ஐ செக்யூரிட்டீஸ் லிமிடெட், ஆக்ஸிஸ் கேப்பி,டல் லிமிடெட், கிரெடிட் சூயிஸ் செக்யூரிட்டீஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட், ஐ.ஐ.எஃப்.எல் செக்யூரிட்டீஸ் லிமிடெட், அம்பிட் பிரைவேட் லிமிடெட், பி.ஓ.பி (BOB) கேப்பிட்டல் மார்க்கெட்ஸ் லிமிடெட் மற்றும் ஹெச்.டி.எஃப்.சி பேங்க் லிமிடெட் ஆகியவை இந்தப் பங்கு விற்பனைக்கு உலகளாவிய ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் முன்னணி மேலாளர்களாக (Book Running Lead Managers) செயல்படுகிறார்கள். இண்டஸ்இந்த் பேங்க் லிமிடெட் மற்றும் யெஸ் செக்யூரிட்டீஸ் (இந்தியா) லிமிடெட் ஆகியவை  இந்தப் பங்கு வெளியீட்டுக்கான  முன்னணி மேலாளர்களாக (Book Running Lead Managers) செயல்பட இருக்கிறார்கள்.

ரெட் ஹெர்ரிங்  ப்ராஸ்பெக்டஸ் (Red Herring Prospectus)  மூலம் விற்பனை செய்யப்படும் இந்தச் சம பங்குகள் பி.எஸ்.இ  மற்றும் என்.எஸ்.இ (BSE and NSE) ஆகிய  இரண்டு பங்குச் சந்தைகளிலும்  பட்டியலிட உத்தேசிக்கப்பட்டுள்ளன.

 

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund   மதுரை பெண்களே ஜெயி...