பேங்க் ஆஃப் இந்தியா
2021, ஜூன் 30 ஆம் தேதியுடன் முடிந்த காலாண்டுக்கான நிதி நிலை முடிவுகள்
முக்கிய அம்சங்கள் 2021-22 முதல் காலாண்டு
நிகர லாபம் ரூ..720 கோடி, Q4FY21 –ஐ விட 188% அதிகம்
செயல்பாட்டு லாபம் ரூ. .2,806 கோடி, Q4FY21 –ஐ விட 34% அதிகம்
வட்டி சாரா வருமானம், முந்தைய ஆண்டின் ஜூன் காலாண்டை விட 39% அதிகம்
நிகர வட்டி வரம்பு முந்தைய காலாண்டை விட 0.15% உயர்வு. நிகர வட்டி வருமானம் 7% உயர்வு
மொத்த வாராக் கடன் முந்தைய ஆண்டின் ஜூன் காலாண்டை விட 0.4% குறைவு
நிகர வாராக் கடன் முந்தைய ஆண்டின் ஜூன் காலாண்டை விட 0.23% குறைவு
வாராக் கடன் ஒதுக்கீட்டு
விகிதம் 86.17% ஆக உள்ளது.
கடந்த ஆண்டை விட 1.30% மேம்பட்டுள்ளது.
மொத்த மூலதன தன்னிறைவு விகிதம்
15.07% ஆக உள்ளது.
இது 2021 மார்ச் மற்றும் 2020 ஜூன் காலாண்டை விட அதிகமாகும்.
உற்பத்தி துறைக்கு அண்மையில் வழங்கப்பட்ட கடன், முந்தைய ஆண்டின் ஜூன்
காலாண்டை விட 11.02% அதிகரித்துள்ளது.
இது மொத்தக் கடனில் 51.36% பங்களிப்பை
கொண்டுள்ளது.
சில்லறை கடன், முந்தைய ஆண்டின் இதே காலாண்டை விட 10.57% அதிகரித்துள்ளது.
வேளாண் கடன் இதே காலக் கட்டத்தில் 11.08% உயர்ந்துள்ளது.
எம்.எஸ்.எம்.இ ( MSME) கடன், முந்தைய
ஆண்டின் ஜூன் காலாண்டை விட 11.45% அதிகரித்துள்ளது.
காசா டெபாசிட்கள், முந்தைய ஆண்டின்
ஜூன் காலாண்டை விட 13.80% அதிகரித்துள்ளது.
கடன் செலவு 2021-22 ஜூன் காலாண்டில், 2020-21 ஜூன் காலாண்டுடன் ஒப்பிடும்
போது 2.41% குறைந்துள்ளது.
புதிய வாராக் கடன் உருவாக்கம்,
2021-22 ஜூன் காலாண்டில், 2020-21 ஜூன் காலாண்டுடன் ஒப்பிடும் போது 0.96%
குறைந்துள்ளது.
லாபத்தின் தன்மை:
பேங்க் ஆஃப் இந்தியாவின் நிகர லாபம் (Net Profit) 2021-22 –ஆம் நிதி ஆண்டின் முதல் காலாண்டில் (ஜுன் காலாண்டு) ரூ. 720 கோடியாக உள்ளது. இது 2020-21 ஆம் நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ரூ. 844 கோடியாக இருந்தது. முந்தைய காலாண்டின் நிகர லாபமான ரூ. 250 கோடியிலிருந்து 188% அதிகரித்துள்ளது.
செயல்பாட்டு லாபம் (Operating
Profit) 2021-22 –ம் நிதி ஆண்டின் முதல்
காலாண்டில் ரூ. 2,806 கோடியாக உள்ளது. இது
2020-21 ஆம் நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ரூ. 2,845 கோடியாக இருந்தது. முந்தைய காலாண்டின் நிகர லாபமான ரூ.2,094 கோடியிலிருந்து 34% அதிகரித்துள்ளது.
நிகர வட்டி வருமானம் (Net
Interest Income -NII) 2021-22 –ஆம்
நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ரூ. 3,145 கோடியாக உள்ளது. இது 2020-21 ஆம் நிதி ஆண்டின்
முதல் காலாண்டில் ரூ. 3,481 கோடியாக இருந்தது. முந்தைய காலாண்டின் நிகர லாபமான
ரூ. 2,936 கோடியிலிருந்து 7% அதிகரித்துள்ளது.
வட்டி சாரா வருமானம் (Non-Interest
Income) 2021-22 –ஆம் நிதி ஆண்டின் முதல்
காலாண்டில் 39% அதிகரித்து ரூ. 2,377 கோடியாக உள்ளது. இது 2020-21 ஆம் நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ரூ. 1,707 கோடியாக இருந்தது. முந்தைய காலாண்டின் நிகர லாபமான ரூ. 2,053 கோடியிலிருந்து 16% அதிகரித்துள்ளது.
விகிதங்கள் (Ratios):
நிகர வட்டி வரம்பு (NIM -
Global) 2021-22 –ம் நிதி ஆண்டின் முதல்
காலாண்டில் 2.16% ஆக உள்ளது. இது 2020-21 ஆம் நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 2.48%
ஆக இருந்தது. முந்தைய காலாண்டின் 2.16%-லிருந்து 0.15% அதிகரித்துள்ளது.
நிகர வட்டி வரம்பு (NIM -
Domestic) 2021-22 –ஆம் நிதி ஆண்டின் முதல்
காலாண்டில் 2.35% ஆக உள்ளது. இது 2020-21
ஆம் நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 2.73% ஆக இருந்தது. முந்தைய காலாண்டின் 2.16% -லிருந்து
0.19% அதிகரித்துள்ளது.
செலவுக்கும் வருமானத்துக்குமான விகிதம் (Cost to
Income ratio - Global) 2021-22 –ம் நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 49.18% ஆக உள்ளது. இது 2020-21 ஆம் நிதி ஆண்டின் முதல்
காலாண்டில் 45.18% ஆக இருந்தது. முந்தைய காலாண்டின் 58.02% -லிருந்து 8.84% அதிகரித்துள்ளது.
கடன்கள் மூலமான வருமான வசூல் (Yield on
Advances - Global) 2021-22 –ஆம் நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 6.67% ஆக உள்ளது. இது 2020-21 ஆம் நிதி ஆண்டின் முதல்
காலாண்டில் 7.55% ஆக இருந்தது.
நிதித் திரட்டும் செலவு (Cost of
Deposits -Global) 2021-22 –ம்
நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 3.79% ஆக உள்ளது. இது 2020-21 ஆம் நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 4.32% ஆக இருந்தது. முந்தைய காலாண்டின் 3.90% - லிருந்து 0.11% அதிகரித்துள்ளது.
வணிகம் (Business):
சர்வதேச வணிகம், முந்தைய ஆண்டின் ஜூன் காலாண்டை
விட 2.71% அதிகரித்து ரூ. 10,38,083
கோடியாக உள்ளது.
வழங்கப்பட்ட சர்வதேச கடன்கள் (Global Advances) ரூ. 4,14,697 கோடியாக உள்ளது. வழங்கப்பட்ட உள்நாட்டு கடன்கள் (Domestic Advances), முந்தைய நிதி ஆண்டின் ஜூன் காலாண்டை விட 1.65% அதிகரித்து ரூ. 3,65,653 கோடியாக உள்ளது. திரட்டப்பட்ட சர்வதேச டெபாசிட்கள் (Global Deposits), முந்தைய நிதி ஆண்டின் ஜூன் காலாண்டை விட 4.73% அதிகரித்து ரூ. 6,23,385 கோடியாக உள்ளது. திரட்டப்பட்ட உள்நாட்டு டெபாசிட்கள் 6.71% அதிகரித்து ரூ. 5,52,303 கோடியாக உள்ளது.
உள்நாட்டு காசா (Domestic CASA), முந்தைய நிதி ஆண்டின் இதே ஜூன் காலாண்டை விட 13.80% அதிகரித்து ரூ. 2,35,980 கோடியாக உள்ளது. காசா 43.22% ஆக இருக்கிறது.
சொத்து தரம் (Asset Quality):
மொத்த வாராக் கடன் (GNPA) விகிதம் 2020 ஜூன் காலாண்டில் 13.91% ஆக இருந்தது. இது 2021 ஜூன் காலாண்டில் 13.51% ஆக மேம்பட்டுள்ளது.
நிகர வாராக் கடன் (Net NPA) விகிதம் 2020 ஜூன் காலாண்டில் 3.58% ஆக இருந்தது. இது 2021 ஜூன் காலாண்டில் 3.35% ஆக மேம்பட்டுள்ளது.
வாராக் கடன் ஒதுக்கீட்டு விகிதம் (Provision
Coverage Ratio -PCR) 2021 ஜூன் காலாண்டில் 86.17% உள்ளது. இது 2021 மார்ச் காலாண்டில் 86.24% ஆக இருந்தது. 2020 ஜூனில் 84.87% ஆக இருந்தது.
மூலதன தன்னிறைவு (Capital Adequacy):
வங்கியின் மொத்த மூலதன தன்னிறைவு விகிதம் (Capital
Adequacy Ratio-CRAR) 30.06.2021
நிலவரப்படி 15.07% ஆக உள்ளது. இது 2021 மார்ச் காலாண்டில் 14.93% ஆக இருந்தது.
CET-1 விகிதம், ஜூன் 2021-ல் 11.52% ஆக உள்ளது. இது 2021 மார்ச்சில் 11.51% ஆக இருந்தது.
முன்னுரிமை துறை &
அனைவருக்கும் நிதிச் சேவை (Priority
Sector & Financial Inclusion):
முன்னுரிமை துறைக்கு வழங்கப்பட்ட கடன்கள் (Priority
Sector advances), முந்தைய நிதி ஆண்டின்
ஜூன் காலாண்டு உடன் ஒப்பிடும் போது, 2021 ஜூன் காலாண்டில் 10.58% அதிகரித்து ரூ. 1,39,020 கோடியாக உள்ளது. சரிக்கட்டப்பட்ட நிகர வங்கிக் கடனில் (Adjusted Net Bank Credit – ANBC) இதன் பங்களிப்பு 39.65% ஆக உள்ளது.
ஏ.என்.பி.சி-ல்
சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட கடன்கள் 9.35% ஆக உள்ளது. இது நலிவுற்ற பிரிவினருக்கு வழங்கப்பட்ட கடனில் 12.10% ஆக உள்ளது. இவை சட்டப்படியான விகிதத்தை விட
அதிகமாகும்.
பிரதம மந்திரியின் தெரு வியாபாரிகளின் ஆத்மநிபார் நிதி (PMSVA Nidhi) திட்டத்தின் கீழ் 97.82% கடன் ஒப்புதல் அளிக்கப்பட்டு, 96.91% கடன் அளிக்கப்பட்டுள்ளது.
முக்கிய நிலை நிலை விவரங்கள் 2021-22 முதல் காலாண்டு
(ரூ. கோடி)
விவரங்கள் |
Q1FY21 |
Q4FY21 |
Q1FY22 |
YoY % |
QoQ % |
வட்டி வருமானம் |
10,234 |
9,327 |
9,321 |
-8.92 |
-0.06 |
வட்டி செலவுகள் |
6,753 |
6,391 |
6,177 |
-8.54 |
-3.35 |
நிகர வட்டி வருமானம் (என்.ஐ.ஐ) |
3,481 |
2,936 |
3,145 |
-9.67 |
7.11 |
வட்டி சாரா வருமானம்ம் |
1,707 |
2,053 |
2,377 |
39.22 |
15.76 |
செயல்பாட்டு வருமானம் (என்.ஐ.ஐ + இதர வருமானம்ம்) |
5,188 |
4,989 |
5,521 |
6.42 |
10.67 |
செயல்பாட்டு செலவுகள் |
2,344 |
2,895 |
2,715 |
15.84 |
-6.20 |
செயல்பாட்டு லாபம் |
2,845 |
2,094 |
2,806 |
-1.35 |
33.99 |
மொத்த ஒதுக்கீடுகள் |
2,001 |
1,844 |
2,086 |
4.26 |
13.12 |
- வாராக் கடன்களுக்கான ஒதுக்கீடுகள் |
767 |
3,089 |
873 |
13.91 |
-71.73 |
வரிக்கு முந்தைய லாபம் |
1,332 |
263 |
1,097 |
-17.66 |
316.63 |
நிகர லாபம் |
844 |
250 |
720 |
-14.65 |
187.77 |
என்.ஐ.எம் % (உள்நாடு) |
2.73 |
2.16 |
2.35 |
விவரங்கள் |
ஜூன்-20 |
மார்ச்-21 |
ஜூன் -21 |
YoY % |
QoQ % |
திரட்டப்பட்ட சர்வதேச டெபாசிட்கள் |
5,95,235 |
6,27,114 |
6,23,385 |
4.73 |
-0.59 |
உள்நாட்டு காசா |
2,07,370 |
2,24,669 |
2,35,980 |
13.80 |
5.03 |
திரட்டப்பட்ட உள்நாட்டு டெபாசிட்கள் |
5,17,577 |
5,51,135 |
5,52,303 |
6.71 |
0.21 |
வழங்கப்பட்ட சர்வதேச கடன்கள் |
4,15,440 |
4,10,436 |
4,14,697 |
-0.18 |
1.04 |
வழங்கப்பட்ட உள்நாட்டுகடன்கள் |
3,59,715 |
3,62,361 |
3,65,653 |
1.65 |
0.91 |
மொத்த வாராக் கடன் |
57,788 |
56,535 |
56,042 |
-3.02 |
-0.87 |
நிகர வாராக் கடன் |
13,275 |
12,262 |
12,424 |
-6.41 |
1.32 |
விவரங்கள் (விகிதங்கள் %) |
ஜூன்-20 |
மார்ச்-21 |
ஜூன்-21 |
YoY bps |
QoQ bps |
சொத்தின் தரம் |
|||||
மொத்த வாராக் கடன் |
13.91 |
13.77 |
13.51 |
-0.40 |
-0.26 |
நிகர வாராக் கடன் |
3.58 |
3.35 |
3.35 |
-0.23 |
0.00 |
வாராக் கடன் ஒதுக்கீட்டு விகிதம் (PCR) |
84.87 |
86.24 |
86.17 |
1.30 |
-0.07 |
மூலதன விகிதங்கள் |
|||||
டயர் - 1 (Tier-1) |
9.48 |
11.96 |
11.98 |
||
CET-1 |
9.46 |
11.51 |
11.52 |
||
CRAR |
12.76 |
14.93 |
15.07 |