தேசிய கைத்தறி தினம்
தேசிய கைத்தறி தினம் ஆகஸ்டு 7 கடைப்பிடிக்கப்படுகிறது. கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கைத்தரம் உயர அனைவரும் கைத்தறி துணிகளை அணிய வேண்டும்.
ஸ்மிரிதி இரானி, 1905 ஆம் வருடம் ஆகஸ்ட் 7-ம் தேதி தொடங்கிய சுதேசி இயக்கத்தின் 110-வது ஆண்டான 2015-இல், ஒவ்வொரு வருடமும் 7 ஆகஸ்ட் அன்று தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்படும் என்று முதல் முறையாக அறிவித்தார்.
இந்திய வரலாற்றில் முக்கியத்துவம்
வாய்ந்த சுதேசி இயக்கம் 1905 ஆம் ஆண்டு ஆகஸ்டு 7-ந் தேதி தொடங்கப்பட்டது. உள்நாட்டுப் பொருட்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தை நினைவுகூரும் வகையிலும், கைத்தறி நெசவாளர்களை சிறப்பிக்கும் வகையிலும் 2015 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 7-ந் தேதி தேசிய கைத்தறி தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
நாட்டின் பொருளாதார செயல்பாட்டில் விவசாயத்திற்கு அடுத்து மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்பினை வழங்கும் தொழிலாக கைத்தறி தொழில் விளங்கி வருகிறது.
தமிழ்நாட்டின் கைத்தறி பிரிவு, ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்று சிறப்புமிக்கதும், நெசவாளர்களின் மிகச்சிறந்த கைத்திறனுக்கான பாரம்பரியத்தையும் கொண்டது. தமிழ்நாட்டில் தற்போது 1,136 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் கீழ் 2.50 லட்சம் கைத்தறிகள் இயங்கி வருகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக