இந்திய மக்களின் மிகவும் நன்மதிப்பைப் பெற்ற பிராண்டுகள் பட்டியலில் நான்கு முறை முன்னணியில் இருந்த சாம்சங் மொபைல்-ஐ பின்னுக்கு
தள்ளி டெல் முதல் இடம் பிடித்தது : டி.ஆர்.ஏ ரிச்சர்ச்
19 இந்திய பிராண்ட்கள்,
9 அமெரிக்க பிராண்ட்கள், 8 கொரியன் பிராண்ட்கள் மற்றும் 7 சீன பிராண்ட்கள் உள்ளிட்ட
50 முக்கிய பிராண்ட்கள் பட்டியல்
சென்னை, ஜூலை 28 2021. டி.ஆர்.ஏ (TRA) – ன், ஏழாவது பதிப்பு,
மக்களின் நன்மதிப்பைப் பெற்ற பிராண்டுகள் (Most Desired Brands - MDB) 2021 –ம் ஆண்டு பட்டியலில் முதல் இடத்தை அமெரிக்காவின் ஆஸ்டின் நகரை சேர்ந்த
டெல் (Dell) பிராண்ட் பிடித்துள்ளது. இது கடந்த ஆண்டு ஆறாவது
இடத்திலிருந்தது. இந்த ஆண்டு ஐந்து இடங்கள் முன்னேறி முதல் இடத்திற்கு வந்துள்ளது.
நான்கு முறை முதல் இடத்திலிருந்த சாம்சங் மொபைல் போன்ஸ் (Samsung Mobile Phones) –ஐ பின்னுக்கு தள்ளி முதல் இடத்துக்கு வந்துள்ளது.
மிகவும்
நன்மதிப்பை பெற்ற இந்திய பிராண்ட்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை ஷியோமி (Xiaomi)
நிறுவனத்தை சேர்ந்த எம்.ஐ (Mi) பெற்றுள்ளது. இது 2020-ம் ஆண்டின் நிலையிலிருந்து
10 தரம் (rank) முன்னேறி இருக்கிறது.
மூன்றாவது இடத்தை வீட்டு உபயோக முன்னணி நுகர்வோர் பொருள்களில்
தொலைக்காட்சி பிரிவில் எல்.ஜி. டெலிவிஷன்ஸ் (LG Televisions) பிடித்திருக்கிறது. இது
கடந்த ஆண்டிலிருந்து 12 இடங்கள் முன்னெறி இருக்கிறது. இதற்கு அடுத்த மிக நெருக்கமாக
நான்காவது இடத்தில் சாம்சங்க் டெலிவிஷன்ஸ் (Samsung Televisions) இருக்கிறது. இந்தியாவின்
மிகவும் நன்மதிப்பை பெற்ற பிராண்ட்கள் 2021 பட்டியலில், ஆப்பிள் ஐபோன் (Apple
iPhone) மூன்று இடங்கள் இறங்கி ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.
இந்தியாவின் 16 நகரங்களை சேர்ந்த 2000 நுகர்வோர் செல்வாக்கு
செலுத்துபவர்களிடம் (consumer-influencers) நடந்த ஆராய்ச்சியின் மூலம் இந்தியாவில்
டாப் 1000 விரும்பப்படும் பிராண்ட்களின் பட்டியல் உருவாக்கப்பட்டிருக்கிறது. நுகர்வோர்
நுண்ணறிவு மற்றும் பிராண்ட் பகுப்பாய்வு நிறுவனம் டி.ஆர்.ஏ -இன் பிராண்ட் டிரஸ்ட் அறிக்கையையும்
(TRA’s Brand Trust Report) வெளியிடுகிறது, இதன் 11 வது பதிப்பு சமீபத்தில் டிசம்பர்
2020 இல் வெளியிடப்பட்டது.
டி.ஆர்.ஏ ரிச்சர்ச் நிறுவனத்தின் முதன்மை
செயல் அதிகாரி என். சந்திரமவுலி (N. Chandramouli, CEO, TRA Research) பிராண்டுகள் அறிக்கையை வெளியிட்டு விவரிக்கும் போது,’’மடிக்கணினிகள் (லேப்டாப்) பிரிவில் உள்ள டெல் நிறுவனம்
இந்தியாவின் மிகவும் நன்மதிப்பு பிராண்டாக மாறுவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை
அடைந்துள்ளது. இந்த அறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ள 1000 பிராண்டுகளில், முதல் 50
நிறுவனங்களில் 18 இந்திய பிராண்டுகள், 9 அமெரிக்க பிராண்டுகள், 8 தென் கொரிய பிராண்டுகள்
மற்றும் 7 சீன பிராண்டுகளாகும். முதல் 50 பிராண்டுகளில் 29 பிரிவுகள் மாறுபட்ட நுகர்வோர்
தேர்வைக் காட்டுகின்றன. அதேநேரத்தில், மொபைல் போன்கள் 9 பிராண்ட்களுடன் மிகவும் நன்மதிப்பை
பெற்ற பிரிவாகும். மடிக்கணினிகள் மற்றும் தொலைக்காட்சிகள் தலா 4 பிராண்டுகளைக் கொண்டுள்ளன.”
என்றார்.
டி.ஆர்.ஏ ரிச்சர்ச் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி என். சந்திரமவுலி |
ஒப்போ (Oppo) முந்தைய ஆண்டை விட 27 இடங்கள்
முன்னேறி ஆறாவது இடத்தைப் பிடித்திருக்கிறது, எல்.ஜி ரெஃப்ரிஜிரேடர்ஸ் (LG
Refrigerators) ஏழாவது இடத்தில் உள்ளது. இது 2020-ம் ஆண்டிலிருந்து 22 இடங்கள் முன்னேறி
இருக்கிறது. தற்போதைய அறிக்கையில் சாம்சங் மொபைல் போன்ஸ் (Samsung Mobile phones) எம்.டி.பி
2020-ஐ விட 7 இடங்கள் குறைந்து எட்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது.
டிவி உள்ளடக்கம் வளர்ந்து வரும் நிலையிலும், சோனி என்டர்டெயின்மென்ட்
டெலிவிஷன் (Sony Entertainment Television), ஹிந்தி ஜி.இ.சி, இந்த ஆண்டு 5 தரவரிசை
குறைந்து ஒன்பதாவது இடத்தைப் பிடித்தது. மற்றும் விவோ (Vivo) 13 இடங்கள் முன்னேறி தற்போதைய
அறிக்கையில் பத்தாவது இடத்தைப் பிடித்திருக்கிறது.
“டி.ஆர்.ஏ-ன் மக்கள் நன்மதிப்பை பெற்ற பிராண்ட்களின் ஏழாவது பதிப்பு நினைவில் கொள்ளக் கூடிய பல விஷயங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. டாப்
1,000 பிராண்ட்களில், ஒரு குறிப்பிடத்தக்க பிராண்ட் எண்ணிக்கையைச் சேர்த்த சூப்பர்-பிரிவுகள்
(Super-Categories), பேனா, பென்சில் போன்ற ஸ்டேஷனரி பொருள்கள் 83%, ஆரோக்கிய பராமரிப்பு
42%, உற்பத்தி 40%, மற்றும் கேஜெட்கள் 21% பிராண்ட்கள் அதிகரித்துள்ளன. சூப்பர் பிரிவு
பிராண்ட் எண்ணிக்கையில் ஆடை 38% குறைந்துள்ளது, சில்லறை விற்பனை 33% மற்றும் வங்கி,
நிதிச் சேவை நிறுவனங்கள் பிராண்ட் (BFSI)
21% குறைந்துள்ளன. தொற்றுநோய் பரவல் காலத்தில் வங்கிகளை விட பேனாக்கள் மற்றும் பென்சில்கள்
ஏன் விரும்பத்தக்கவையாக மாறின என்று யூகிப்பது கடினம் அல்ல”, என்று சந்திரமவுலி மேலும் தெரிவித்தார்.
டி.ஆர்.ஏ-
இன் மிகவும் நன்மதிப்பை பெற்ற பிராண்டுகள் 2021 டி.ஆர்.ஏ- இன் தனியுரிம பிராண்ட் டிசையர் மேட்ரிக்ஸ் (TRA’s proprietary Brand Desire Matrix)
-ஐ அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படுகிறது. இது ஒரு பிராண்டின் 12 நடத்தைகளை ஆராய்ந்து நுகர்வோரின் மதிப்பை / விருப்பங்களை
வெளிப்படுத்துகிறது. கோவிட் தொடர்பான பிராண்டுகள் மிகவும் நன்மதிப்பு பெற்றட பட்டியலில்
ஆறு கோவிட் தடுப்பூசிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதில், கோவாக்சின் முன்னணி இடத்தை பிடித்திருக்கிறது. மேலும் ஆயுர்வேத
நோயெதிர்ப்பு துணை உணவுகளில் (Ayurvedic Immunity Supplement) நான்கு பிராண்டுகள் போட்டியிட்டன.
இதில், பதஞ்சலியின் இம்யூனோசார்ஜ்
(Patanjali’s Immunocharge) பட்டியலில் முன்னணியில் உள்ளது.
இந்த
டிஆர்ஏ- இன் மிகவும் நன்மதிப்பை பெற்ற பிராண்ட்கள் அறிக்கையில் மற்ற குறிப்பிடத்தக்க
பிரிவுகளில் முன்னணி பெற்ற நிறுவனங்களின் விவரங்கள் வருமாறு:
ஐ.சி.ஐ.சி.ஐ
பேங்க் (ICICI Bank) எட்டு தனியார் வங்கி பிராண்டுகளில் முன்னணியில் இருக்கிறது. எல்.ஜி மேலும் இரண்டு பிரிவுகளான சலவை இயந்திரங்கள்
மற்றும் குளிர்சாதன பெட்டி பிராண்ட்களில் முன்னணியில் உள்ளது. பி.எம்.டபிள்யூ அதன்
இரண்டு ஜெர்மன் போட்டியாளர்களை வீழ்த்தி நான்கு சக்கர வாகன (சொகுசு) பிரிவில் முன்னணியில்
இருக்கிறது. ஐபிஎல் அணி சி.எஸ்.கே, எம்.ஐ.
ஐ விட மதிப்பு மிக்க தாக உள்ளது.
கோத்ரேஜ்
இன்டீரியோ (Godrej Interio) ஃபர்னிச்சர் சில்லறை விற்பனை பிரிவில் 148 இடங்கள் முன்னேறி இருக்கிறது. தண்ணீர் சுத்திகரிப்பான்கள்
(Water Purifiers) தயாரிக்கும் நிறுவனங்களில் லிவ்பூர் (Livpure) 432 இடங்கள் முன்னேறி
முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. டயர் பிரிவில் சியட் (CEAT) 142 இடங்கள் முன்னேறி முதல் இடத்திற்கு உயர்த்திருக்கிறது.
செமிகண்டக்டர்கள் பிரிவில் முதல் முறையாக ஏ.எம்.டி முதல் இடத்துக்கு வந்திருக்கிறது. எஸ்.பி.ஐ மியூச்சுவல்
ஃபண்ட் (SBI Mutual Fund) 392 இடங்கள் ஏற்றம் கண்டு முதல் இடத்துக்கு வந்துள்ளது. குழாய்கள்
பிரிவில் அஸ்ட்ரல் (Astral) 649 இடங்கள் முன்னேறி முன்னிலை வகிக்கிறது, மசாலா பொருள்கள்
பட்டியலில் ஆச்சி (Aachi) முதலிடம் வகிக்கிறது. இன்வெர்ட்டர் பேட்டரிகள் பிரிவில் ஓகாயா
(Okaya) சிறந்தது. செராமிக்ஸ் பிரிவில் சோமனி (Somany) முதலிடம் பிடித்திருக்கிறது.
கண் பராமரிப்பு பொருள்கள் சில்லறை விற்பனையில்
ஹிமாலயா ஆப்டிகல்ஸ் (Himalaya Opticals) முதல் இடத்தில் உள்ளது.
~~~
இணைப்பு
(Annexure): இந்தியாவின்
முதல் 50 மக்கள் நன்மதிப்பை பெற்ற பிராண்ட்கள் பட்டியல். முழுமையாக பார்க்க பார்வையிடவும்
www.trustadvisory.info
டி.ஆர்.ஏ-ன் மக்கள் நன் மதிப்பு பெற்ற பிராண்டுகள் 2021 பற்றி (About TRA’s Most Desired Brands 2021)
டி.ஆர்.ஏ-ன் மக்கள் நன் மதிப்பு பெற்ற பிராண்டுகள் 2021 (TRA’s Most Desired Brands 2021), பட்டியல் தொடர்ந்து ஏழாவது ஆண்டாக வெளியாகிறது. டி.ஆர்.ஏ ரிச்சர்ச் நிறுவனத்தால் ஆய்வு செய்யப்பட்டு அடையாளம் காணப்பட்ட தனியுரிம 12 பிரத்யேகபண்புகளை அடிப்படையாகக் கொண்ட முதன்மை ஆராய்ச்சி மூலம் பிராண்ட்கள் மதிப்பிடபடுகின்றன. இந்த ஆண்டின் ஆராய்ச்சி 16 நகரங்களை சேர்ந்த 2,000 நுகர்வோர்களிடையே நடத்தப்பட்டது மற்றும் கிட்டத்தட்ட 2.5 மில்லியன் தரவு புள்ளிகளையும் 3,000 தனித்துவமான பிராண்ட் குறிப்புகளையும் உருவாக்கியது. அவற்றில் சிறந்த 1,000 பிராண்டுகள் இந்த ஆண்டின் அறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ளன.MAB
டி.ஆர்.ஏ ரிச்சர்ச் பற்றி (About TRA Research)
டி.ஆர்.ஏ
ரிச்சர்ச் (TRA Research), என்பது காம்னிசியனி
குழும (Comniscient Group) நிறுவனம். இது நுகர்வோர்களின் வாங்கும் தன்மையைப் புரிந்துகொள்வதற்கும்
பகுப்பாய்வு செய்வதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பிராண்ட் உத்தி மற்றும் பிராண்ட் நுண்ணறிவு நிறுவனம் ஆகும். முன்னணி பிராண்ட் நிறுவனங்கள் எடுக்கும் வணிக முடிவுகளுக்கு
உதவுவதற்கும், ஒரு பிராண்டின் வாங்குவதற்கான ஆர்வத்தை மேம்படுத்துவது (‘keenness-to buy’) குறித்த
நுகர்வோர்களின் நுண்ணறிவுகளை வழங்குவதற்கும் டி.ஆர்.ஏ தொடர்ந்து நுகர்வோர் மற்றும்
பிற பங்குதாரர்களுடன் முதன்மையான ஒருங்கிணைந்த ஆராய்ச்சியை நடத்தி வருகிறது. தொடர்ந்து பல ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட 10,000 பிராண்டுகளின் வெளிப்படையாக தெரியாத 35 மில்லியன் தரவு புள்ளிகளிலிருந்து
நுகர்வோர் நுண்ணறிவு அறிக்கைகளை டி.ஆர்.ஏ வழங்குகிறது, மேலும் பிராண்டுகளுக்காக, பிரத்யேக
ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகிறது.
டி.ஆர்.ஏ, ‘ டி.ஆர்.ஏ-இன் ‘ பிராண்ட் டிரஸ்ட் ரிப்போர்ட்
(Brand Trust Report), டி.ஆர்.ஏ-’ஸ் மோஸ்ட்
டிசையர்ட் பிராண்ட்ஸ் (India's Most Desired Brands) மற்றும் டி.ஆர்.ஏ-’ஸ் மோஸ்ட் கன்ஸ்யூமர் ஃபோகஸ்ட்
பிராண்ட்ஸ் (India’s Most Consumer Focused Brands) ஆகியவற்றின் வெளியீட்டாளர் ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக