மொத்தப் பக்கக்காட்சிகள்

ரோலெக்ஸ் ரிங்க்ஸ் லிமிடெட், புதிய பங்கு வெளியீடு ஆரம்பம்..!

ரோலெக்ஸ் ரிங்க்ஸ் லிமிடெட்,  புதிய பங்கு வெளியீடு ஜூலை 28, 2021 அன்று ஆரம்பம்..!

·         ரோலெக்ஸ் ரிங்க்ஸ் நிறுவனத்தின் ரூ. 10 முக மதிப்பு கொண்ட, சம பங்கு ஒன்றின் பங்கு விலைப் பட்டை ரூ. 880  முதல் ரூ. 900 ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.  

·         பங்கு வெளியீடு புதன் கிழமை ஜூலை  28, 2021 தொடங்கி வெள்ளிக் கிழமை ஜூலை 30, 2021 வரை நடக்கிறது.

·         குறைந்தபட்சம் ஒரு லாட் அதாவது 16 பங்குகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதன்  பிறகு 16-ன் மடங்குகளில் விண்ணப்பிக்கலாம்.

·         பங்கு வெளியீட்டு விலை, முக மதிப்பு ரூ.10 –ஐ போல் 88   முதல் 90 மடங்குகள் ஆகும்.




மும்பை,  ஜூலை 26, 2021: ரோலெக்ஸ் ரிங்க்ஸ் லிமிடெட் ( Rolex Rings Limited - the “Company”), என்பது நிறுவப்பட்ட உற்பத்தி திறன் அடிப்படையில் இந்தியாவின் முன்னணி 5 முன்னணி ஃபோர்ஜிங் (Forging) நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. (ஆதாரம் இக்ரா அறிக்கை). இந்த நிறுவனம், பொதுமக்களுக்கு புதிய பங்குகளை {(IPO - Initial Public Offering  - Equity Shares (“Offer”)}  ஜூலை 28, 2021 முதல் வெளியிடுகிறது.

சம பங்கு ஒன்றின் பங்கு விலைப் பட்டை (Price Band) ரூ. 880  முதல் ரூ. 900 ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. குறைந்தபட்சம் 16 பங்குகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதன்  பிறகு 16-ன் மடங்குகளில் விண்ணப்பிக்கலாம்

இந்தப் பங்கு வெளியீட்டில் புதிய பங்கு வெளியீட்டின் (the “Fresh Issue”) மதிப்பு ரூ.560 மில்லியன் ஆக உள்ளது. மற்றும் ரிவென்டல் பெல்க் (Rivendell PELLC) –க்கு உரிமையான (the “Selling Shareholder”) 7,500,000 சம பங்குகள் பங்குச் சந்தை மூலம் ஆஃபர் பார் சேல் என்கிற முறையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

கடந்த 1957 ஆம் ஆண்டின், பத்திரங்கள் ஒப்பந்தங்கள் (ஒழுங்குமுறை) விதிமுறைகள்  (Securities Contracts (Regulation)  19(2)(b)-ன் படி செபி அமைப்பின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, திருத்தப்பட்ட விதிமுறை 31 (“SCRR”),  செபி (Issue of Capital and Disclosure Requirements) விதிமுறைகள்  2018 படி (“SEBI ICDR Regulations”)  இந்தப் பங்கு வெளியீடு நடக்கிறது.  செபி .சி.டி.ஆர் விதிமுறைகள், விதிமுறை 6(1)-ன் கீழ் , ஏலமுறையில் (Book Building Process)  பங்கு விற்பனை நடக்கிறது. நிகர பங்கு விற்பனையில்  50 சதவிகிதத்துக்கு மேற்படாமல் தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களுக்கு (Qualified Institutional Buyers- QIBs), (“QIB Portion”),  நிறுவனம் மற்றும் பங்கு விற்பனையாளர்  ஒதுக்க வேண்டும். இதில், 60% விருப்பத்தின் அடிப்படையில் பெரிய முதலீட்டாளர்களுக்கு (Anchor Investors), (“Anchor Investor Portion”), செபியின் .சி.டி.ஆர் விதிமுறைகளின்படி ஒதுக்கப்படும். இதில் மூன்றில் ஒரு பங்கு, பங்குகள் ஆங்கர் முதலீட்டாளர்கள் ஏலம் கேட்டுள்ள விலை அல்லது அதை  விட அதிகமாக இருக்கும்பட்சத்தில்  அவை உள்நாட்டு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படும்

பங்குகள் கேட்டு குறைவாக விண்ணப்பம் செய்யப்பட்டிருக்கும்பட்சத்தில் அல்லது ஆங்கர் முதலீட்டாளர்களுக்கான பகுதி பங்குகள் ஒதுக்கப்படவில்லை என்றால் மீதமுள்ள பங்குகள் நிகர தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கான பகுதிக்கு ஒதுக்கப்படும். மேலும், நிகர கியூ..பி (Net QIB)  ஒதுக்கீட்டில் 5% பங்குகள் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் ஒதுக்கப்படும். மீதமுள்ள கியூ..பி ஒதுக்கீட்டில் உள்ள பங்குகள் விகிதாச்சார அடிப்படையில், செல்லத்தக்க ஏலங்கள் வெளியீட்டு விலையில் அல்லது அதற்கு மேலாக கேட்கப்பட்டிருக்கும்பட்சத்தில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் உள்ளிட்ட கியூ..பி நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படும்.

அதேநேரத்தில், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின்  மொத்த தேவை கியூ..பி பகுதியின் 5% க்கும் குறைவாக இருந்தால், மியூச்சுவல் ஃபண்ட் பகுதியில் ஒதுக்கீடு செய்ய இருக்கும் பங்குகள் கியூ..பிகளுக்கு விகிதாசார ஒதுக்கீட்டிற்காக மீதமுள்ள கியூ..பி பகுதியில் சேர்க்கப்படும். மேலும், மொத்தப் பங்கு வெளியீட்டில் 15 சதவிகிதத்துக்கு குறையாமல் விகிதாச்சார அடிப்படையில் நிறுவனம் சாராத (Non-Institutional) முதலீட்டாளர்களுக்கும், 35 சதவிகிதத்துக்கு குறையாமல் விகிதாச்சார அடிப்படையில் சிறு தனிநபர் முதலீட்டாளர்களுக்கும் (Retail Individual Investors) செபி அமைப்பின் .சி.டி.ஆர் விதிமுறைகளின்படி பங்குகள் ஒதுக்கப்படும். பங்கு வெளியீட்டு விலை (Offer Price) அல்லது அதற்கு அதிகமான விலையில் கேட்கப்பட்டால் செபி விதிமுறைகள் படி இப்படி பங்குகள் ஒதுக்கப்படும்.

மேலும், சமப் பங்குகள் தகுதி வாய்ந்த பணியாளர்களுக்கு பணியாளர் ஒதுக்கீடு பகுதி அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படும். செல்லத்தக்க ஏலங்கள் வெளியீட்டு விலை அல்லது அதனை விட அதிக விலைக்கு கேட்டிருந்தால் ஒதுக்கப்படும். 

அனைத்து தகுதியுள்ள முதலீட்டாளர்களும் (ஆங்கர் முதலீட்டாளர்கள் தவிர) அனைவரும் அஸ்பா  (ASBA - Applications Supported by Blocked Amount)  முறையில் மற்றும் யூ.பி.ஐ ஐடி (ஆர்.ஐ.பிகளுக்கு) பங்குகளுக்கு  விண்ணப்பிக்க வேண்டும். இந்த முறையில் பங்குகள், ஒதுக்கீடு செய்யப்பட்டால் மட்டுமே முதலீட்டாளர் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்படும். அதேநேரத்தில், விண்ணப்பத்துக்கான தொகை வங்கி கணக்கில், சுய சான்றளிக்கப்பட்ட சிண்டிகேட் வங்கிகள் (Self Certified Syndicate Banks (“SCSBs”) அல்லது யூ.பி.ஐ சிஸ்டத்தில் முடக்கி  (Blocked) வைக்கப்பட்டிருக்கும். ஆங்கர் முதலீட்டாளர்கள் இந்த அஸ்பா முறையில் விண்ணப்பிக்க அனுமதி இல்லை.

புதிய பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதி கீழ்க்கண்ட தேவைக்கு பயன்படுத்தப்படுத்த இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

 (i) நீண்ட கால மூலதனத் தேவைகளைப் பூர்த்தி செய்வது  மற்றும்

(ii) பொது  நிறுவன  நோக்கங்கள்.

ஈக்ய்ரிஸ் (Equirus) கேப்பிட்டல்  பிரைவேட் லிமிடெட், ஐ.டி.பி.ஐ கேப்பிட்டல் மார்க்கெட்ஸ் அண்ட்  செக்யூரிட்டீஸ் லிமிடெட் மற்றும் ஜே.எம். ஃபைனான்ஸியல் லிமிடெட்  ஆகியவை  இந்தப் பங்கு விற்பனைக்கு முன்னணி மேலாளர்களாக (Book Running Lead Managers) செயல்படுகிறார்கள்.

ரெட் ஹெர்ரிங்  ப்ராஸ்பெக்டஸ் (Red Herring Prospectus)  மூலம் விற்பனை செய்யப்படும் இந்தச் சம பங்குகள் பி.எஸ்.  மற்றும் என்.எஸ்.இ ஆகிய  இரண்டு பங்குச் சந்தைகளிலும்  பட்டியலிட உத்தேசிக்கப்பட்டுள்ளன.

 

 


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

குறைவான வருமான வரி..! ஃப்ராங்க்ளின் இந்தியா லாங் டியூரேஷன் ஃப்ண்ட் Franklin India Long Duration Fund

குறைவான வருமான வரி..! ஃப்ராங்க்ளின் இந்தியா லாங் டியூரேஷன் ஃப்ண்ட் (Franklin India Long Duration Fund)   ஃப்ராங்க்ளின் இந்தியா மிய...