மொத்தப் பக்கக்காட்சிகள்

அனைவருக்கும் எக்காலத்திலும் லாபம் ஈட்டி தரும் ஃப்ளெக்ஸி கேப் மியூச்சுவல் ஃபண்ட்!


மஹிந்திரா  மேனுலைஃப் மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தைகளில்  நீண்டகால  மூலதன அதிகரிப்பை எதிர்பார்க்கும் முதலீட்டாளர்களுக்காகமஹிந்திரா மேனுலைஃப் ஃப்ளெக்ஸி  கேப் யோஜனாதிட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது

 

·         ஆய்வாளர்கள் குழு ஆய்வு செய்த, உள்நாட்டு பங்குச் சந்தைகளிலிருந்து சுமார் 500+ நிறுவனப் பங்குகளைத் தேர்ந்தெடுப்பது

·         பெரு பொருளாதார குறிகாட்டிகள், கொள்கை சூழல், மதிப்பீடுகள், சந்தை நிலைமைகள் ஆகியவற்றின் அடிப்படையில்  அனைத்து பங்குச் சந்தை மூலதனம்  கொண்ட  நிறுவனப் பங்குகள்  ஒதுக்கீடு.

·         கீழிலிருந்து மேல் முறையில் அனைத்து பங்குச் சந்தை மதிப்ப்புகளிலும்  பங்குகள் தேர்வு.. பொருத்தமான  விகிதாச்சாரங்கள் மற்றும் பொருத்தமான நுழைவு / வெளியேறும் நிலைகளில் முதலீட்டுக் கலவை ( போர்ட்ஃபோலியோ)  நிர்வாகம் இருக்கும்.

 

மும்பை, ஜூலை  28, 2021: மஹிந்திரா மேனுலைஃப் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட் (Mahindra Manulife Investment Management Private Limited-), இது 51:49 மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ஃபைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் (Mahindra & Mahindra Financial Services Limited - MMFSL - எம்.எம்.எஃப்.எஸ்.எல்) மற்றும் மேனுலைஃப் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜ்மென்ட் (சிங்கப்பூர்) பிரைவேட். லிமிடெட் (Manulife Investment Management (Singapore) Pte. Ltd. -‘Manulife Singapore’ ‘மேனுலைஃப் சிங்கப்பூர்’) இணைந்ததாகும்.

இந்த நிறுவனம் , மஹிந்திரா மேனுலைஃப்  ஃப்ளக்ஸி கேப்  யோஜனா (Mahindra Manulife Flexi cap Yojana) என்கிற புதிய மியூச்சுவல்  ஃபண்ட் திட்டத்தை  அறிமுகம் செய்துள்ளது. இது எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யும் மற்றும் முதலீட்டை பணமாக்கும் வசதி கொண்ட ஓப்பன் எண்டெட் (Open - ended)  டைனமிக் ஈக்விட்டி ஃபண்ட் ஆகும்.  இந்தத் திட்டத்தில் முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டப்படும் நிதி அனைத்து பங்குச் சந்தை மதிப்பு கொண்ட நிறுவனப் பங்குகளிலும் அதாவது லார்ஜ் கேப்; மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் நிறுவனப் பங்குகளில் பிரித்து முதலீடு செய்யப்பட இருக்கிறது. 

இந்தத் திட்டம், நீண்ட கால மூலதன  ஆதாயத்தை எதிர்பார்க்கும் முதலீட்டாளர்களுக்கு ஏற்றதாக உள்ளது. அதாவது, அனைத்து பங்குச் சந்தை மதிப்புகளிலும், (market capitalization)  பங்கு மற்றும் பங்கு தொடர்பான பத்திரங்களின் பன்முகப்படுத்தப்பட்ட முதலீட்டுக் கலவையை ( போர்ட்ஃபோலியோ – portfolio) எதிர்பார்க்கும் முதலீட்டாளர்களுக்கு  பொருத்தமானது.

 

மஹிந்திரா மேனுலைஃப்  ஃப்ளக்ஸி கேப்  யோஜனா (Mahindra Manulife Flexi cap Yojana - (‘Scheme’)) திட்டத்தில் முதலீட்டுக்கான நிறுவனப் பங்குகள், மேலிருந்து கீழ் அணுகுமுறை மற்றும் கீழிலிருந்து மேல் அணுகுமுறையில் (Top-down Approach and Bottom-up Approach) தேர்வு செய்யப்படுகின்றன. இந்த ஃபண்டில் நெகிழ்வு தன்மையுடன் அனைத்து பங்குச் சந்தை மதிப்பு கொண்ட நிறுவனப் பங்குகளில் முதலீடு பிரித்து செய்யப்படுகிறது.

 

மேலும். முக்கிய முதலீட்டு வாய்ப்புகளை கொண்ட முதலீட்டுக் கலவையை, நடுத்தரம் முதல் நீண்ட காலத்தில் உருவாக்க உள்ளது. மேலும், சூழ்நிலைக்கு ஏற்ற முதலீட்டு (Tactical Investment) வாய்ப்புகளை உருவாக்குவதாகும்.  எடுத்துக்காட்டு, சுழற்சி துறை, பொருட்களின் சுழற்சி (Commodities Cycle) போன்றவை குறிப்பிடலாம்.

இந்த ஃப்ளக்ஸி கேப் ஃபண்டில், முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டும் நிதி குறைந்தப்பட்சம் பங்குச் சந்தை மற்றும் பங்குச் சந்தை சார்ந்த நிதி ஆவணங்களில் முதலீடு செய்யப்பட உள்ளது.

அசுதோஷ் பிஷ்னோய், 

மஹிந்திரா  மேனுலைஃப்  இன்வெஸ்ட்மென்ட் மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட்- ன் நிர்வாக இயக்குநர் மற்றும்  முதன்மை செயல் அதிகாரி  


மஹிந்திரா  மேனுலைஃப்  இன்வெஸ்ட்மென்ட் மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட்- ன் நிர்வாக இயக்குநர் மற்றும்  முதன்மை செயல் அதிகாரி  திருஅசுதோஷ் பிஷ்னோய் ( Mr.Ashutosh Bishnoi, MD and CEO, Mahindra Manulife Investment Management Private Limited)  கூறும் போது, “ கோவிட் -19 தொற்றுநோயின் கடுமையான இரண்டாவது அலையைத் தாண்டியும் இந்திய பங்குச் சந்தைகள்  தங்கள்  ஏற்றத்தை  தக்கவைத்துள்ளன. 2020 மார்ச் மாதம்  இறுதியில் நாடு தழுவிய  ஊரடங்கு  அறிவிக்கப்பட்டதிலிருந்து  முக்கியப் பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் குறியீடுகள் கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளன. இருந்தாலும், உலகளாவிய பொருளாதாரங்களில் நிலவும் பல்வேறு நிச்சயமற்ற தன்மைகளால் பங்குச் சந்தைகள்  நிலையற்றதாக ஏற்ற இறக்கத்துடன் இருக்கக்கூடும். ஃப்ளக்ஸி கேப் மியூச்சுவல் ஃபண்ட்கள், பங்குச் சந்தை சுழற்சிகளில் நிலையான வருமானத்தை வழங்க வல்லவை, மேலும்  இடர்ப்பாடு மற்றும் வருவாய்க்கு (Risk and Return.) இடையில் சமநிலையை உறுதி செய்யும் பல்வகைப்படுத்தப்பட்ட அணுகுமுறையால் லாபத்தை பெருக்கின்றன. எதிர்பார்க்கப்படும் பொருளாதார மீட்சியின் மூலம் ஏதேனும் சாத்தியமான  ஏற்றம்  மிட் கேப் மற்றும் ஸ்மால் நிறுவனப் பங்குகளில்  காணப்பட்டால், மாறுவதற்கான நெகிழ்வுத்தன்மையை  இந்த ஃபண்ட்கள் நன்கு  கொண்டிருக்கின்றன.என்று குறிப்பிட்டார்.

 கூடுதல் தகவல்களுக்கு


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மாத சம்பளக்காரர்கள் மற்றும் முதல் முறை முதலீட்டாளர்களுக்கு ஏற்ற . - பஜாஜ் ஃபின்சர்வ் ELSS வரி சேமிப்பு ஃபண்ட் .!

திரு .  எஸ் .  கார்த்திகேயன் ,  நிறுவனர் ,  https://winworthwealth.com/ மாத சம்பளக்காரர்கள் மற்றும் முதல் முறை முதலீட்டாளர்களுக்கு   ஏற்ற . ...