Covid 19 கட்டுமானப் பணியாளர்களுக்கு இலவசமாக தடுப்பூசி
அனைத்து ஊழியர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கட்டுமானப் பணியாளர்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்க காசாகிராண்ட் முடிவு
கோவிட் தொற்றால் உயிரிழந்த பணியாளர்களின் குடும்பங்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில் அவர்களது பிள்ளைகளின் கல்விச் செலவை ஏற்றுக் கொள்வதாகவும், குடும்பத்தாருக்கு வேலைவாய்ப்பு மற்றும் நிதி ஆதரவை வழங்கவிருப்பதாகவும் அறிவித்திருக்கிறது
: பணியாளர்களின் பாதுகாப்பையும், நல்வாழ்வையும் முதன்மையாக கருதும் தென்னிந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான காசாகிராண்ட், சென்னை, பெங்களுரு மற்றும் கோயம்புத்தூர் நகரங்களில் உள்ள தனது நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களுக்கும், அவர்களைச் சார்ந்து வாழும் குடும்பத்தினருக்கும், மற்றும் கட்டுமானத் தளங்களிள் பணியாற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவித்துள்ளது. இதுமட்டுமின்றி கோவிட் பெரும்தோற்று காரணத்தினால் துரதிருஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படும் நிகழ்வில் அப்பணியாளரின் குடும்பத்தினரது தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் காசாகிராண்ட் எடுக்கும் என்று அறிவித்திருக்கிறது.
பெரும் துயரில் வாடும் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு ஆதரவளிக்கும் வகையில் காசாகிராண்ட், உயிரிழந்த பணியாளரின் பிள்ளைகள் இந்தியாவில் அவர்களின் பட்டப்படிப்பை முடிக்கும் வரை அவர்களது கல்வி செலவு முழுவதையும் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது. மேலும் வேலைவாய்ப்பு மற்றும் நிதிசார் தேவைகள் போன்ற அனைத்து உதவிகளும் அக்குடும்பத்தினருக்கு வழங்கப்படும் என்றும் அந்நிறுவனம் வாக்குறுதி அளித்திருக்கிறது.
காசாகிராண்டின் நிறுவனரும், நிர்வாக இயக்குனருமான திரு. அருண் இது தொடர்பாக பேசுகையில், “பணியாளர்களும் மற்றும் தொழிலாளர்களும் தான் எமது நிறுவனத்தின் வலுவான மையத் தூண்களாக இருக்கின்றனர். எனவே, சிரமம்மிக்க இந்த நேரத்தின்போது சாத்தியமுள்ள அனைத்து வழிமுறைகளிலும் அவர்களுக்கும் மற்றும் அவர்களது அன்புக்குரியவர்களுக்கும் (எமது பணியாளர்களை சார்ந்து வாழும் குடும்ப உறுப்பினர்கள்) ஆதரவளிப்பது எமது அடிப்படை பொறுப்பு என்று நான் நம்புகிறேன். இவர்களுக்கு கோவிட் தடுப்பூசி மருந்து செலுத்தும் திட்டம் இந்த ஆதரவை வெளிப்படுத்தும் குறிப்பிடத்தக்க நடவடிக்கை என்றும் நான் கருதுகிறேன். தடுப்பூசி போடும் செயல்பாட்டை ஏற்கனவே நாங்கள் தொடங்கிவிட்டோம்; இரண்டு மாதங்களுக்குள் எமது நிறுவனத்தைச் சேர்ந்த அனைத்து பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி வெற்றிகரமாக செலுத்தப்படும் என்றும் நாங்கள் நம்புகிறோம். அத்துடன், எமது பணியாளர்களுக்கு மிகச்சிறந்த மருத்துவ கவனிப்பை வழங்குவதற்காக பிரபல மருத்துவமனைகளுடன் இணைந்து, எமது பணியாளர்களுக்கான உடல்நல காப்பீடு பாலிசியையும் நாங்கள் புதுப்பித்திருக்கிறோம். துரதிருஷ்டவசமாக ஏதாவது எதிர்பாரா நிகழ்வு நேரிடுமானால், அப்பணியாளரின் குடும்பத்திற்கு ஆதரவு வழங்குவது என்ற முடிவையும் நாங்கள் எடுத்திருக்கிறோம்,” என்று கூறினார்.
தனது பணியாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் கோவிட் தடுப்பூசி மருந்து செலுத்தி கொள்ளும் நல்ல வாய்ப்பை வழங்கியிருக்கும் காசாகிராண்ட் இதற்காக இது இயங்கி வரும் நகரங்களில் அமைந்துள்ள SRM Institutes For Medical Science மற்றும் பிற பிரபல மருத்துவமனைகள் உடன் இணைந்து, சிரமமில்லாமல் பாதுகாப்பாக தடுப்பூசி செலுத்தப்படுவதற்கான நடவடிக்கையை எடுத்திருக்கிறது. தனது பணியாளர்களுக்கும் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் ரூ.9 இலட்சத்திற்கும் அதிகமான தொகைக்கு உடல்நல காப்பீடு வசதி, அவசரநிலை உதவிக்கான ஆதரவு, வீட்டிலேயே பரிசோதனை மற்றும் மாதிரிகள் சேமிப்பு போன்ற பல்வேறு ஆதரவு சேவைகளை வழங்க முன் வந்திருப்பதன் மூலம் தனது பணியாளர்கள் மீதான அக்கறையும், பொறுப்புறுதியையும் இந்நிறுவனம் நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறது. காசாகிராண்ட் தன்முனைப்புடன் எடுத்திருக்கும் இம்முயற்சிகள், இந்த சிரமமான காலகட்டத்தின் போது பல்வேறு அவசரநிலைகளை நிர்வகிப்பதில் சிறப்பான பலன்களைத் தந்திருக்கிறது.
காசாகிராண்ட் குறித்து:
2004-ம் ஆண்டில் ஒரு நிறுவனமாக பதிவுசெய்யப்பட்ட காசாகிராண்ட், மக்களின் விருப்பங்களுக்கு வடிவம் தந்து மதிப்பினை வழங்குவது மீது வலுவான பொறுப்புறுதி கொண்டிருக்கும், ISO சான்றிதழ் பெற்ற ஒரு ரியல் எஸ்டேட் பெருநிறுவனமாகும். சென்னை, பெங்களூரு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் 22 மில்லியன் சதுர அடிக்கும் கூடுதலாக முதன்மையான குடியிருப்புத்திட்டங்களை இந்நிறுவனம் உருவாக்கி வழங்கியிருக்கிறது. இந்நகரங்களில் 112-க்கும் அதிகமான சிறப்பான குடியிருப்பு வளாகங்களில் ஆனந்தமாக வாழ்க்கையை நடத்திவரும் 18250-க்கும் அதிகமான குடும்பங்கள், காசாகிராண்டின் அர்ப்பணிப்பு உணர்வுக்கும் தரம் வாய்ந்த செயல்பாட்டுக்கும் சாட்சியமாக திகழ்கின்றன. எமது நம்பிக்கையை பிரதிபலிக்கிற உயர்தரமான வாழ்க்கை அமைவிடங்களை உருவாக்குவது என்ற கோட்பாட்டின் அடிப்படையில் தனது தொழில்முறை பயணத்தில் 16-வது ஆண்டில் வெற்றிநடை போடும் காசாகிராண்ட், நிலைத்து நிற்கும் மதிப்பு, நேர்மை மற்றும் தரம் ஆகியவற்றோடு ரூ. 8000 கோடி மதிப்பில் புதிய செயல்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக