வாக்கரூ அறிமுகம் செய்யும் புதிய கலெக்ஷன்!
வீட்டினுள் சௌகரியமாக நடக்கும் திறனை உங்களுக்கு வழங்குகிறது!
சென்னை| ஜூன் 29, 2021 : இந்நாட்டின் முன்னணி காலனி பிராண்டான வாக்கரூ, வீட்டிற்குள் பயன்படுத்துவதற்கான அதன் புதிய காலணிகள் தொகுப்பை அறிமுகம் செய்திருக்கிறது.
இத்தொகுப்பின் ஃபிளிப் பிளாப்புகள், ஹவாய் சாண்டல்கள் மற்றும் ஸ்லைடர்கள் ஆகியவை உள்ளடங்கும். நவீன ஃபேஷனை பிரதிபலிக்கும் இத்தயாரிப்புகள் ஸ்டைல் மற்றும் சௌகரியம் ஆகிய இரு அம்சங்கள் மீது சிறப்பு கவனம் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளன. குஷன் கொண்ட EVA அல்லது சின்தடிக் லெதர் இன்லோல் மற்றும் மென்மையான ஸ்டிராப் லைனிங் போன்ற உயர்தர மூலப்பொருட்களைக் கொண்டு நிகரற்ற சௌகரியத்தை வழங்கும் வகையில் வீட்டிற்குள் பயன்படுத்துவதற்கான காலணிகளின் இத்தொகுப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.
மிகச்சிறந்த நெகிழ்வுத்திறன் மற்றும் சௌகரியத்தை வழங்கி,
பாதங்களுக்கு அழுத்தம் இல்லாதவாறு பாதுகாப்பிற்காக உறுதியான ஃபுட்பெட் மற்றும் குதிகால்
வளைவு ஆதரவு ஆகிய அம்சங்களை கொண்டதாக ஃபிளிப் பிளாப்புகள், ஹவாய் சாண்டல்கள் மற்றும்
ஸ்லைடர்கள் ஆகியவை இருக்கின்றன.
ஸ்லைடர்கள்
- இந்த திடகாத்திரமான ஸ்லைடர்கள் எளிதில்
காலில் மாட்டிக்கொள்ளும் வடிவமைப்புடன் பாதங்களில் சௌகரியமாகப் பொருந்துகின்றன. நாள்
முழுவதும் இதனை வீட்டில் அணிந்திருந்தாலும் கூட பாதத்தை நிலையானதாக வைத்திருப்பதன்
மூலம் நிகரற்ற சௌகரியத்தை இதன் குதிகால் வளைவு ஆதரவு வழங்குகிறது. நெகிழ்வுத்திறனுள்ள ஃபிளாப்பை நேர்த்தியாகப்
பொருந்துவதற்கு பாதத்தின் அகலத்திற்கு ஏற்றபடி மாற்றி அமைத்துக்கொள்ள முடிவும் என்பது
இதன் தனிச்சிறப்பாகும்.
ஹவாய்
- தினசரி பயன்பாட்டிற்கு மிகவும் உகந்ததான
இந்த ஹவாய் ஸ்லிப்பர்கள், நல்ல பிடிமானத்தை தருகின்ற பல அடுக்குகள் கொண்ட ரப்பர் சோல் மூலம் சௌகரியத்தையும், சிறப்பான
பிடிமானத்திறனையும் வழங்குகிறது. உயிரோட்டமான வண்ணங்களில் கிடைக்கும் இந்த ஸ்லிப்பர்கள் நீடித்து
உழைக்கின்ற ரப்பர் ஸ்டிராப்புடன் வருகின்றன.
ஃபிளிப் – ஃபிளாப்ஸ் : இந்த ஃபிளிப் – ஃபிளாப்புகள், மெல்லிய எடையுள்ள பல அடுக்குகள் கொண்ட EVA சோல் உடன் உருவாக்கப்பட்டிருப்பதால் உட்புற (வீட்டிற்குள்) பயன்பாட்டிற்கு மிகச்சிறந்த காலணியாக இவைகள் இருக்கின்றன. இதன் டிரெண்டியான மூன்று வண்ண இன்சோல் இதற்கு ஸ்டைல் அம்சத்தை சேர்த்து வழங்குகிறது. மென்மையான லைனிங் ஸ்டிராப் உடன் குஷன் கொண்ட இன்சோல், அற்புதமான சௌகரியத்தை நாள் முழுவதும் தருகிறது.
இந்த தயாரிப்புகளின் அணிவரிசை, உட்புற பயன்பாட்டிற்குப் பொருத்தமானவையாக,
சௌகரியமானவையாக மற்றும் நவீன ஃபேஷனை பிரதிபலிப்பவையாக இருக்கின்றன. ரூ.219 என்ற விலையில் தொடங்கும் இந்த
காலணிகள் பல்வேறு வகையான ஸ்டைல், நிறம் மற்றும் மூலப்பொருட்களின் சிறப்பான கலவையாக
இத்தொகுப்பு அமைந்திருக்கிறது. இத்தொகுப்பைச் சேர்ந்த வாக்கரூ கேர்+, கூடுதல் சௌகரியத்திற்காக
நல்ல குஷனுள்ள சோல் மற்றும் ஆதரவிற்கான ஸ்டிராப்களுடன் மெல்லிய எடையுள்ள காலணியாக தயாரிக்கப்பட்டுள்ளது.
வாக்கரூ இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் இயக்குனர் திரு. ராஜேஷ் குரியன், இந்த புதிய காலணிகளின் அணிவரிசை அறிமுகம் குறித்து பேசியபோது, “வீடுகளுக்குள்ளும், உட்புற பகுதிகளுக்குள்ளும் பயன்படுத்துவதற்கான எமது புதிய காலணிகளின் தொகுப்பை அறிமுகம் செய்வதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். பெருந்தொற்றுப் பரவல் இருந்து வரும் இக்காலகட்டத்தில் மக்கள் பெரும்பாலும் வீடுகளுக்குள்ளேயே நேரத்தை செலவிட வேண்டியிருக்கிறது. இந்த நிலையில், வாக்கரூவின் இந்த தயாரிப்பு அணிவரிசை மிக கவர்ச்சிகரமான விலைகளில் கேப்ஷன் மற்றும் சௌகரியம் ஆகிய இரண்டையும் சேர்த்து வழங்குகிறது,” என்று கூறினார். ஆண்கள், பெண்கள் மற்றும் சிறார்களுக்காக புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள காலணிகளின் இத்தொகுப்பு, அனைத்து முன்னணி ரீடெய்ல் விற்பனையகங்களிலும் வாங்கி பயனடைவதற்காக கிடைக்கிறது.
இந்நிறுவனத்தின் சொந்த வலைதளமான www.walkaroo.in என்பதிலும் மற்றும் அமேசான், ஃபிளிப்கார்ட் ஆகிய தளங்களிலும் இந்த புதிய கலெக்ஷனை வாங்கும் விருப்பத்தேர்வும் வாடிக்கையாளர்களுக்கு இருக்கிறது. வாக்கரூ குறித்து: உள்நாட்டிலேயே உருவாகி வளர்ந்த பிராண்டான வாக்கரூ, அனைவருக்கும் காலணிகளில் மிக சமீபத்திய ஃபேஷனை வழங்க வேண்டும் என்ற குறிக்கோளோடு 2013ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. ரூ. 499 என்ற விலையில் ஸ்போர்ட்ஸ் சாண்டல்களை அறிமுகம் செய்தது; காலணிகள் பிரிவில் கட்டுபடியாகக்கூடிய மிதமான விலை வரம்புகளில் பெரிதும் விரும்பக்கூடிய தயாரிப்புகளை வழங்கும் போக்கினை நிறுவுவதில் ஒரு முன்னோடி என்ற பெருமையினை வாக்கரூ பெற்றிருக்கிறது.
ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு பாலருக்கும் ஃபிலிப் பிளாப்ஸ், ஸ்போர்ட்ஸ் ஷுக்கள், ஹாஃப் ஷுக்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய புதிய அறிமுகங்களின் மூலம் தனது தயாரிப்பு அணிவரிசையை இந்த பிராண்ட் மிகப்பெரியதாக விரிவுபடுத்தியிருக்கிறது. குழந்தைகளுக்கு வாக்கரூ ஒன்டர்ஸ், கூடுதல் குஷனிங்குடன் வாக்கரூ கேர்+, ஃபார்மல் காலணிகளுக்கு வாக்கரூ டோஸ் & டோகிடோஸ் போன்ற துணை பிராண்டுகளையும் இது கொண்டிருக்கிறது.
முழு நேர்த்திக்கான நற்பெயரை தனக்கென உருவாக்கியிருக்கும் பிரபல நடிகர் அமீர்கான், இந்த பிராண்டின் தூதராக தற்போது இருந்து வருகிறார்.20-21 நிதியாண்டின்போது, வாக்கரூ-ன் விற்றுமுதல் ரூ. 1000 கோடிக்கும் அதிகமாக இருந்தது. 500க்கும் அதிகமான டீலர்கள் வழியாக இந்தியா முழுவதிலும் செயலிருப்பைக் கொண்டிருக்கும் இந்த பிராண்ட், 1 லட்சத்துக்கும் கூடுதலான ரீடெய்ல் அவுட்லெட்கள் வழியாக வாடிக்கையாளர்களைச் சென்றடைகிறது.
தனது உற்பத்தி தொழிலகங்கள்
அமைந்துள்ள இடங்களில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல், நீரின் மறுசுழற்சி, மரம் வளர்த்தல்
போன்ற நிலைப்புதன்மைக்குரிய முனைப்புதிட்டங்களிலும் இந்த பிராண்ட் மிகவும் ஆர்வத்தோடு
தீவிரமாக செயலாற்றி வருகிறது.