இந்தியாவின் புத்தாக்க தொழில்முனைவு சாதனையாளர்களை அடையாளம் காணும்
விருதுகள் : கவின்கேர்
10th CavinKare-MMA ChinniKrishnan Innovation Awards 2021
இந்தியாவின் புத்தாக்க தொழில்முனைவு சாதனையாளர்களை அடையாளம் காணும்
விருதுகள் நிகழ்வை தேசிய அளவில் விரிவாக்கும் கவின்கேர்
· சிறு, குறு, நடுத்தர தொழில்துறை பிரிவில் துடிப்பான புத்தாக்குனர்களை கண்டறிவதற்கான
தேடலில் தனது வருடாந்திர சிஎஸ்ஆர் செயல்திட்டமான 10வது சின்னிகிருஷ்ணன் இனோவேஷன் விருதுகள் 2021 நிகழ்வை மாநிலத்தையும் கடந்து நாடுமுழுவதும் எடுத்துச் செல்கிறது
· விருதுக்காக தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு
புத்தாக்குனருக்கும் ரூ.1,00,000 ரொக்கப்பரிசையும் அறிவித்திருக்கிறது
புதிய பாதை படைக்கும்
புத்தாக்கங்களின் வெற்றிக்கு சான்றாக நுகர்வோர் (FMCG) துறையில் பெருநிறுவனமாகத் திகழும்
கவின்கேர், மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷனின் (MMA) கூட்டுவகிப்போடு தொழில்முனைவில்
சாதித்திருக்கின்ற ஆனால், இதுவரை நன்கு அறியப்படாமல் இருக்கின்ற சாதனையாளர்களை அடையாளம்
காண்பதற்கான அதன் வருடாந்திர தேடல் நிகழ்வை இன்னும் பெரிதாக விரிவாக்கம் செய்யவிருக்கிறது. தனது வருடாந்திர கார்ப்பரேட் சமூக பொறுப்புறுதி
திட்டமான சின்னிகிருஷ்ணன் இனோவேஷன் விருதுகள் என்பதனை தேசிய அளவில் விரிவுபடுத்தியிருக்கும்
கவின்கேர், இந்நாடெங்கிலும் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில்துறை பிரிவில் (MSME) சிறப்பான
புத்தாக்குனர்களை கண்டறிய விழைகிறது. இந்த ஆண்டு விருதுக்காக தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு புத்தாக்குனருக்கும்
ரூ.1,00,000 ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியையும் கவின்கேர் மற்றும்
எம்.எம்.ஏ இணைந்து அறிவித்திருக்கின்றன. 2021 ஜுலை, 17 ஆம் தேதி வரை இவ்விருதுக்காக
விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் / பரிந்துரைப்பை அனுப்புவதற்கான செய்முறை முற்றிலும்
ஆன்லைன் வழிமுறையில் நடைபெறும்: https://mmachennai.wixsite.com/innovation2021
தேர்வு செய்யப்படும்
வெற்றியாளர்களுக்கு தேவைப்படுகிறபோது வழிகாட்டுனர்களாக சி.கே.பி.எல் (CKPL) மற்றும்
எம்.எம்.ஏ ஆதரவினை வழங்கும். சந்தையாக்கல், நிதி செயல்பாடு, பேக்கேஜிங், ஆராய்ச்சி மற்றும்
மேம்பாடு மற்றும் மனிதவளம் ஆகிய துறைகளில் தேவையான ஆலோசனையையும், உதவியையும் கண்காணிப்பு
ஆதரவோடு சேர்த்து இவை வழங்கும். விருதுக்காக தேர்வு செய்யப்படும் வெற்றியாளர்கள், ஒரு ஆண்டு காலஅளவிற்கு
தொழில்துறையில் முதன்மையான நிபுணராக திகழ்பவரிடம் ஆலோசனை பெறுவதற்கான நேரடி வசதியையும்
பெறுவார்கள்; தங்களது தயாரிப்பிற்கு காப்புரிமை பெறுவதற்கான ஆதரவு (தேவைப்படுகிறபோது
மற்றும் சாத்தியமுள்ளபோது); டிரேட்மார்க், பேக்கேஜிங் மற்றும் வடிவமைப்பு பதிவு ஆகியவற்றை
மேற்கொள்வதற்கான உதவி; மற்றும் வங்கிகள் மற்றும் நிதிசார் நிறுவனங்களோடு கலந்துரையாடி
நிதி ஆதரவைப் பெறுவதற்கான உதவி
ஆகியவையும் இவர்களுக்கு வழங்கப்படும்.
சின்னிசிருஷ்ணன்
இனோவேஷன் (புத்தாக்க) விருதுகள் என்பது, கவின்கேர் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக
இயக்குனர் திரு. சி.கே. ரங்கநாதன் அவர்களது சிந்தனையில் உருவானதாகும். கடந்த பல ஆண்டுகளாக, வளர்ந்து வரும்
தொழில்முனைவோர்களை ஆதரித்து வளர்ப்பதற்கும், சரியான சூழலமைப்பிற்கான அணுகுவசதியை அவர்களுக்கு
வழங்குவதிலும் இவ்விருது மிக முக்கிய பங்கு வகித்திருக்கிறது. சமூகத்தாக்கம் மீது தீவிர கூர்நோக்கத்துடன்
அவர்களது பிசினஸ் செயல்பாடுகளை மேலும் வளர்ப்பதற்கு இது பெரும் உத்வேகமாக இருந்திருக்கிறது. 2011 ஆம் ஆண்டில் இது நிறுவப்பட்டதிலிருந்து
இவ்விருது, மெட்ராஸ் மேனேஜ்மெண்ட் அசோசியேஷனின் (MMA) கூட்டுவகிப்போடு கவின்கேர் குழுமத்தால்
வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு மாநிலம்
மற்றும் புதுச்சேரியில் 30-க்கும் அதிகமான மிகச்சிறந்த புத்தாக்குனர்களை அங்கீகரித்து,
கௌரவித்திருக்கும் சின்னிகிருஷ்ணன் இனோவேஷன் விருதுகள், வளர்ந்து வரும் தொழில்முனைவோர்கள்
மத்தியில் பெரிதும் விரும்பித் தேடப்படும் அதிக கௌரவமிக்க விருதுகளுள் ஒன்றாக இருந்து
வருகிறது. சாஷே
புத்தாக்கப் புரட்சிக்காக புகழ் பெற்றவரான காலம் சென்ற திரு. ஆர். சின்னிகிருஷ்ணன்
அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் நிறுவப்பட்ட இவ்விருது, மறைந்த திரு. ஆர். சின்னிருஷ்ணன்
அவர்களின் “கனவு காண்பவர்”, “புத்தாக்குனர்” மற்றும் “சிந்தனை உருவாக்குனர்” என்ற பண்பியல்புகளை
கொண்டிருக்கின்ற தொழில்முனைவோர்களை அங்கீகரித்து பலரும் அறியுமாறு செய்வதை இவ்விருது
நோக்கமாகக் கொண்டிருக்கிறது.
இவ்விருதுக்கான
விண்ணப்பங்களை / பரிந்துரைப்புகளை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஆகிய இருமுறைகளிலும் அனுப்பலாம்.
கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலின் காரணமாக ஒரு பிரத்யேக வலைதளத்தின் வழியாக சமர்ப்பிக்கப்படும்
விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதன் வழியாக நேரடி தொடர்பில்லாத விண்ணப்ப / பரிந்துரைப்பு
செய்முறையை கவின்கேர் மற்றும் எம்எம்ஏ இணைந்து செயல்படுத்தியிருக்கின்றன.
10வது சின்னிகிருஷணன்
இனோவேஷன் விருதுகள், 2021 – க்கான விண்ணப்பங்களை பெறும் செய்முறை இப்போது நடைபெறுகிறது. இதற்கான விண்ணப்பதாரர்கள் நேரடியாக ஆன்லைன்
முறையில் விண்ணப்பிக்கலாம்:
https://mmachennai.wixsite.com/innovation2021
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக