மொத்தப் பக்கக்காட்சிகள்

இந்திய ஜவுளித்துறையில் நிரம்பியிருக்கும் ஏராளமான தொழில் வாய்ப்புகள்; TAITRA

இந்திய ஜவுளித்துறையில் நிரம்பியிருக்கும் ஏராளமான தொழில் வாய்ப்புகள்; TAITRA  நடத்திய இணையவழிக் கருத்தரங்கில் தைவான் வல்லுனர்கள் தகவல்

 

சென்னை:அயல்நாட்டு வர்த்தக பணியகம் - BOFT, தைவான் (ROC), (Bureau of Foreign Trade – BOFT), தைவான் வெளிவர்த்தக மேம்பாடு கழகத்துடன்  (Taiwan External Trade Development Council - TAITRA) இணைந்து “ஜவுளி உற்பத்திக்கான தீர்வு” என்ற தலைப்பிலான  இணையவழி கருத்தரங்கை (Webinar)29.04.2021, வியாழக்கிழமை  அன்று  நடத்தியது .

தைவான் நாட்டு ஜவுளித்துறை இயந்திரங்கள் அதனுடைய தரத்திற்காக உலகளவில் அங்கீகாரம் பெற்றவை. இந்த இயந்திரங்களின்உயர்தரம் மற்றும் நம்பகமான சேவையை மேம்படுத்தும் நோக்கில் தைவான் ஜவுளித்துறை, பல்வேறு சிறப்புமிக்க தொழில்நுட்பங்களுடன் கூடிய  ஜவுளித்துறையுடன் ஒருங்கிணைந்த தீர்வுகளை வழங்குகிறது.   

உலக அளவில் ஜவுளித்துறை  ஏற்றுமதியில்   தைவான் ஆறாவது இடம் பெறுகிறது.   ஒட்டுமொத்தமாக   உலகில் உற்பத்தி செய்யப்படும் துணிகளில் 70 சதவீதம் தைவானில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுபவை. கடந்த 2020-ம் ஆண்டு  தைவானில்  இருந்து ஏற்றுமதி  செய்யப்பட்ட ஜவுளித்துறை  இயந்திரங்களின்  மதிப்பு 450 மில்லியன் டாலருக்கும் (US $450 million) அதிகம். 


தைவான் நாட்டின்நான்கு முன்னணி ஜவுளித்துறைவல்லுனர்கள் (கீழ்க்கண்ட அட்டவணையில் விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன)  இந்நிகழ்ச்சியில்  ஜவுளித்துறையில்  ஏற்பட்டிருக்கும் நவீன தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் தீர்வுகளைப் பற்றி எடுத்துரைத்தனர்.     மேலும் அவர்கள் இந்திய ஜவுளித்துறையில் நிரம்பியிருக்கும் ஏராளமான தொழில் வாய்ப்புகள் குறித்தும், இந்திய மற்றும்  தைவான் நிறுவனங்கள் இணைந்து செயல்படக்கூடிய வாய்ப்புகள் குறித்தும் பேசினார்கள். 275-க்கும் அதிகமானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 

இக்கருத்தரங்கு ஜவுளி உற்பத்தித்துறையின் பலவேறு நவீன தீர்வுகள் பற்றியும், இதன் மூலம் ஜவுளித்துறை உற்பத்தியில் ஏற்படும் முன்னேற்றங்கள்,    ஜவுளித்துறை சார்ந்த கூட்டு தொழில் வாய்ப்புகள் பற்றியும் பல தகவல்களை வழங்கியது. மேலும் விருந்தினர்கள்நெசவு, நூற்பு, சாயமிடுதல், பினிஷிங் (Weaving, Spinning, Dyeing, Finishing) போன்ற துறைகளில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் தீர்வுகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.

தைவான் நாட்டைச் சார்ந்த கீழ்க்கண்ட விருந்தினர்கள் இக்கருத்தரங்கில் கலந்துகொண்டனர்:

 

விருந்தினர்

தலைப்பு

திரு. பிரட் லியாங்க் - லாஜிக் ஆர்ட் ஆட்டோமேசன் (Mr. Fred Liang - Logic Art Automation Co. Ltd)

சாயத்துறையின் முழுமையான தீர்வு (Dye-House Total Solution)

திரு. மேசன் சாவோ - பயிலுங் மெசினரி மில் (Mr. Mason Chao - Pailung Machinery Mill Co. Ltd)

நவீன பின்னலின் தேவை (Need of Smart Knitting)

திரு. C.L. சாங்க் - ACME மெசினரி இண்டஸ்ட்ரி  (Mr. C.L. Chang, ACME Machinery Industry Co. Ltd)

புதிய தலைமுறைக்கான சுற்றுச்சூழலுக்கு உகந்த நவீன கன்வேயர் டிரைவ் டையிங் மெஷின் (New Generation Eco-Friendly Intelligent Conveyer Drive Dyeing Machine)

திரு அல்பி லின் - ஹிசிங் செங்க் Machinery (Mr. Alfie Lin - Hsing Cheng Machinery Ind. Co. Ltd.,)

கயிறு வடிவிலான தொடர் சலவை வீச்சு (Continuous Washing Range in Rope Form)

 

இன்றைய காலகட்டத்தில் தைவான் ஜவுளித்துறை,  சர்வதேச அளவிலான முக்கிய பிராண்டுகளால் மிகவும் விரும்பப்படுகிற கூட்டாளராக(Preferred Partner) உள்ளது.

About Taiwan Excellence:

The Taiwan Excellence Award, jointly created by The Bureau of Foreign Trade (BOFT) and the Taiwan External Trade Development Council (TAITRA) in 1992, aims to cultivate Taiwanese companies. Today, the Taiwan Excellence Award is the highest accolade Taiwanese products can receive. The symbol of Taiwan Excellence embodies Taiwan’s rise to the global ranks of quality manufacturers in terms of innovation, design and manufacturing, and represents the gold standard for Taiwanese products to compete on the global stage.

About the Bureau of Foreign Trade (BOFT), MOEA:

The Bureau of Foreign Trade (BOFT) within the Ministry of Economic Affairs (MOEA), R.O.C. is responsible for implementing policies and regulations governing foreign trade and economic cooperation. Established in January 1969, the BOFT's role and position have continuously evolved to meet the needs of the ever-changing international economic and trade environments. The BOFT has been guiding and working with the Taiwan External Trade Development Council (TAITRA) in numerous promotional trade projects and activities both domestically and internationally. Having worked closely with the TAITRA for many decades, the BOFT continues to commission the TAITRA for various critical government projects related to business, trade, and investment, while promoting Taiwan internationally.

 

About the Taiwan External Trade Development Council (TAITRA):

Founded in 1970 to promote foreign trade, the Taiwan External Trade Development Council (TAITRA) is the foremost non-profit, semi-governmental trade promotion organization in Taiwan. Jointly sponsored by the government, industry associations, and several commercial organizations, the TAITRA assists Taiwanese businesses and manufacturers in reinforcing their international competitiveness and addressing the challenges they face in foreign markets. The TAITRA boasts a well-coordinated trade promotion and information network of over 1,200 international marketing specialists stationed in its Taipei headquarters and 50 overseas offices worldwide. Together with its sister organizations, the Taiwan Trade Center (TTC) and the Taipei World Trade Center (TWTC), the TAITRA has created a wealth of trade opportunities through effective promotion strategies.

 

Media Contact:

Christopher Charles | Predict PR | 98424 75706 | charles@predictpr.com

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

தொழில் பழகுவோம் புத்தகம் RxT - A Financial Health Clinic

RxT - A Financial Health Clinic நிறுவனத்தின் முதல் ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்வின் ஒரு பகுதியாக, "தொழில் பழகுவோம்" ...