மொத்தப் பக்கக்காட்சிகள்

தைவான் எக்சலன்ஸ் ஜவுளி உற்பத்திக்கான தீர்வு இணையவழி கருத்தரங்கு..! ·

 தைவான் எக்சலன்ஸ் (Taiwan Excellence) “ஜவுளி உற்பத்திக்கான தீர்வு” என்ற தலைப்பில் இணையவழி கருத்தரங்கை (Webinar) நடத்துகிறது

·     இந்த நிகழ்வு ஜவுளித்துறையின்  நுட்பமான தொழில்நுட்ப தகவல்களை வழங்கும்

·     தைவான் ஜவுளித்துறை,  முக்கிய சர்வதேச பிராண்டுகளால் மிகவும் விரும்பப்படுகிற கூட்டாளராக உள்ளது

·     இந்தியா முழுவதுமிருந்து ஜவுளித்துறை சார்ந்தவர்கள்  இந்நிகழ்வில் பங்கேற்பர்

அயல்நாட்டு வர்த்தக பணியகம் - BOFT, தைவான் (ROC){Bureau of Foreign Trade - BOFT}, தைவான் வெளிவர்த்தக மேம்பாடு கழகத்துடன்  {Taiwan External Trade Development Council - TAITRA (TAITRA, தைவான் எக்சலன்ஸ்-ன் இந்த கருத்தரங்கை நடத்துகிறது 



இணைந்து “ஜவுளி உற்பத்திக்கான தீர்வு” என்ற தலைப்பிலான  இணையவழி கருத்தரங்கை (Webinar) 29.04.2021, வியாழக்கிழமை  அன்று  நடத்துகிறது.

இந்தியா முழுவதுமிருந்து ஜவுளித்துறை சார்ந்தவர்கள்  பங்கேற்கும் இக்கருத்தரங்கில், இந்தியா  மற்றும் தைவான்  நாடுகளின் நிறுவனங்கள் இணைந்து செயல்படுவதற்கான வழிவகைகள் குறித்து விவாதிக்கப்படும்.

இந்த இணையவழி கருத்தரங்கம் 29.04.2021, வியாழக்கிழமை அன்று இந்திய நேரப்படி காலை 10 மணிக்கு நடைபெறும். ஜவுளித்துறையின்  நுட்பமான தொழில்நுட்ப தகவல்களையும், தற்போதைய சூழலுக்கு ஏற்ற சிறந்த நடைமுறைகளின் மூலமான வணிக உத்திகளையும் இக்கருத்தரங்கம் வழங்கும்.மேலும் இந்த நிகழ்ச்சி https://www.youtube.com/watch?v=3zmW4OC2HoI என்ற தளத்தின் மூலம் நேரலை செய்யப்படும்.



இன்றைய காலகட்டத்தில் தைவான் ஜவுளித்துறை,  சர்வதேச அளவிலான முக்கிய பிராண்டுகளால் மிகவும் விரும்பப்படுகிற கூட்டாளராக (Preferred Partner) உள்ளது. இக்கருத்தரங்கில் தைவான் நாட்டைச் சேர்ந்த தொழில்துறை வல்லுனர்கள், ஜவுளித்துறையில்                  ஏற்ப்பட்டிருக்கும் நவீன உற்பத்தி தொழில்நுட்பங்களின் சாதகங்களையும் அதனால் இந்திய ஜவுளித்துறையில் ஏற்படும் நேர்மறை தாக்கங்களையும் பற்றி எடுத்துரைப்பார்கள்.   கட்டணம் எதுவும் இல்லாத இந்த கருத்தரங்கில் கலந்து கொள்ள  https://rb.gy/xkdyuk என்ற தளத்தில்      பதிவு செய்யலாம். 

இக்கருத்தரங்கில் பின்வருகிற துறை சார்ந்த அமர்வுகள் நடைபெறும்; (i)சாயத்துறையின் முழுமையான தீர்வு (Dye-House Total Solution)(ii) நவீன பின்னலின் தேவை (Need of Smart Knitting) (iii)புதிய தலைமுறைக்கான சுற்றுச்சூழலுக்கு உகந்த நவீன கன்வேயர் டிரைவ் டையிங் மெஷின் (Intelligent Conveyer Drive Dyeing Machine)   (iv) கயிறு வடிவிலான தொடர் சலவை வீச்சு (Continuous Washing Range in Rope Form).

தைவான் நாட்டைச் சார்ந்த கீழ்க்கண்ட சிறப்பு விருந்தினர்கள் இக்கருத்தரங்கில் கலந்துகொள்வார்கள்: 

(i)திரு. பிரட் லியாங்க் - லாஜிக் ஆர்ட் ஆட்டோமேசன் (Mr. Fred Liang - Logic Art Automation Co. Ltd), 

(ii)திரு. மேசன் சாவோ - பயிலுங் மெசினரி மில் (Mr. Mason Chao - Pailung Machinery Mill Co. Ltd), (iii)திரு.C.L. சாங்க் - ACME மெசினரி இண்டஸ்ட்ரி    (Mr. C.L. Chang, ACME Machinery Industry Co. Ltd) மற்றும் (iv)  திரு அல்பி லின் - ஹிசிங் செங்க் Machinery (Mr. Alfie Lin - Hsing Cheng Machinery Ind. Co. Ltd.,)

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

குறைவான வருமான வரி..! ஃப்ராங்க்ளின் இந்தியா லாங் டியூரேஷன் ஃப்ண்ட் Franklin India Long Duration Fund

குறைவான வருமான வரி..! ஃப்ராங்க்ளின் இந்தியா லாங் டியூரேஷன் ஃப்ண்ட் (Franklin India Long Duration Fund)   ஃப்ராங்க்ளின் இந்தியா மிய...