மொத்தப் பக்கக்காட்சிகள்

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி: தொடர்ந்து 99 வருடமாக லாபம், இடைக்கால டிவிடெண்ட் ..!

 

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி: இடைக்கால  டிவிடெண்ட் ரூ.5

தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு, 1921ம் ஆண்டு துவங்கப்பட்டு தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி சிறப்பாக செயல்பட்டு வரும் பாரம்பரியம் மிக்க பழமையான தனியார் வங்கி.. வங்கியானது தனது வரலாற்றில் தொடர்ந்து 99 வருட காலமாக லாபம் ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

வங்கியானது 509 கிளைகள், 1,132 ஏடிஎம் மையங்கள், 47 e-lobby மையங்கள், 260 Cash Recycler Machines மற்றும் 12 மண்டல அலுவலகங்கள் ஆகியவற்றை கொண்டுள்ளது. இந்தியாவில் 16 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களில் சுமார் 49 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றி வருகிறது.

27.04.2021 அன்று தூத்துக்குடியில் நடைபெற்ற இயக்குநர் குழு கூட்டத்தில் 2020-2021 நிதி ஆண்டின் தணிக்கை முடிவுகள் இறுதி செய்யப்பட்டன.

வங்கியின் இயக்குனர்கள் முன்னிலையில் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி திரு.கே.வி.ராமமூர்த்தி தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையினை வெளியிட்டார். வங்கியின் பொதுமேலாளர்கள் உடனிருந்தனர்.



2020-21 ஆண்டில் வங்கியின் செயல்பாட்டினை விளக்கும் சிறப்பம்சங்கள்:

2020-21 ஆம் நிதியாண்டில் வங்கியானது பல்வேறு குறிப்பிடத்தக்க சாதனைகளை புரிந்துள்ளது. இதற்கு வங்கியின் திட்டமிட்ட நேர்த்தியான கொள்கைகளும், இயக்குனர் குழு தரும் உற்சாகம், உயர் நிர்வாகக் குழுவின் சீரிய திட்டம் மற்றும் அதனை செயல்படுத்தும் அணுகுமுறை, வங்கி ஊழியர்களின் அயராத உழைப்பு மற்றும் இவற்றிற்கு எல்லாம் மேலாக வாடிக்கையாளர்கள் தொடர்ந்து தரும் பொன்னான ஆதரவு ஆகியவைதான் இந்தச் சாதனைகளை எட்டிட உதவியது என்றால் மிகையாகாது.

விவரங்கள்

2020-21

2019-20

வளர்ச்சி (%)

Total Deposits (₹)

40,970.42

36,825.03

11.26

Total Advances (₹)

31,541.03

28,236.18

11.70

Total Business (₹)

72,511.45

65,061.21

11.45

CASA (₹)

11,685.27

9,518.05

22.77

Operating Profit (₹)

1,202.04

995.05

20.80

Net Profit (₹)

603.33

407.69

47.99

Gross NPA (₹)

1,084.78

1,020.98

6.25

Gross NPA (%)

3.44

3.62

-  4.97

Net NPA (₹)

613.82

497.47

23.39

Net NPA (%)

1.98

1.80

10.00

Capital Adequacy Ratio - Basel III (%)

18.94

16.74

13.14

Capital Adequacy Ratio – Basel II (%)

18.96

16.76

13.13

Provision Coverage Ratio (%)

79.53

80.75

-1.51

 

வங்கி நிர்வாக குழு இடைக்கால பங்கு ஈவு (Dividend) ஒவ்வொரு பங்கிற்கும் ரூ.5  என அறிவித்திருக்கிறார்கள்

2020-21 ஆம் நிதியாண்டில் வங்கியானது தனது மொத்த வணிகத்தில் 11.45% வளர்ச்சியடைந்து ரூ.72,511.45 கோடியை எட்டியுள்ளது.

வைப்புத்தொகை ரூ.40,970.42 கோடி ஆக உயர்ந்துள்ளது. கடன்களைப் பொறுத்தமட்டில் ரூ.31,541.03 கோடி என்ற நிலையில் உள்ளது.

முன்னுரிமை மற்றும் MSME துறைகளுக்கு கடன் வழங்கல்

வங்கியானது விவசாயம், குறு, சிறு தொழில் கடன், வியாபாரக்கடன், வீட்டுக்கடன் மற்றும் கல்விக்கடன் துறைகளுக்கு தொடர்ந்து அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. முன்னுரிமைத் துறைகளுக்கான கடன்கள் பாரத ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள இலக்கான 40% என்ற இலக்கைவிட அதிகமாக 79.06% என்ற விகிதத்தில் உள்ளது.

முன்னுரிமைத் துறைகளுக்கு (விவசாயம், குறு, சிறு தொழில் கடன், வியாபாரக்கடன், வீட்டுக்கடன் மற்றும் கல்விக்கடன் துறைகளுக்கு தொடர்ந்து அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. முன்னுரிமைத் துறைகளுக்கான கடன்கள் பாரத ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள இலக்கான 40% என்ற இலக்கைவிட அதிகமாக 79.06% என்ற விகிதத்தில் உள்ளது.

முன்னுரிமைத் துறைகளுக்கு (Priority Sector) வழங்கப்பட்டுள்ள மொத்த கடன்கள் ரூ.22,540.97 கோடிகள் (கடந்த ஆண்டு ரூ.18,711.73 கோடிகள்). இதன் வளர்ச்சி விகிதம் 20.46% ஆகும்.

விவசாயத்துறைகளுக்கு வழங்கப்பட்டுள்ள மொத்த கடன்கள் ரூ.8,645.66 கோடியாக உள்ளது. இத்துறைக்கு ரிசர்வ் வங்கி நிர்ணயித்த அளவு 18% மட்டுமே ஆகும். இத்துறைக்கு வங்கி மொத்த கடன்களில் 30.33% கடன் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.



MSME துறைக்கு வழங்கப்பட்டுள்ள மொத்த கடன்கள் ரூ. 10,169.86 கோடியிலிருந்து ரூ.12,036.34 கோடியாக உயர்ந்துள்ளது.  இதன் வளர்ச்சி விகிதம் 18.35% ஆக உள்ளது.

வங்கியின் வருடாந்திர செயல்பாடு

வங்கியின் வைப்புத்தொகை ரூ.40,970.42 கோடிகள் என்ற நிலையை அடைந்துள்ளது (கடந்த ஆண்டு ரூ.36,825.03 கோடிகள்) இதன் வளர்ச்சி விகிதம் 11.27% ஆக உள்ளது.

நடப்பு மற்றும் சேமிப்புக் கணக்கு தொகை (CASA) கடந்த நிதியாண்டோடு ஒப்பிடுகையில் 22.77% வளர்ச்சி அடைந்து ரூ.11,685.27 கோடியாக உள்ளது.

கடன்களைப் பொறுத்தமட்டில் 11.71% வளர்ச்சியடைந்து ரூ.31,541.81 கோடி என்ற நிலையில் உள்ளது.

சில்லறை கடன்கள் (Retail advances) கடந்த ஆண்டினை விட 19.38% வளர்ச்சியடைந்து ரூ.6,496.11 கோடிகள் என்ற நிலையில் உள்ளது.

வட்டி இல்லா வருமானம் (Non Interest Income) ரூ.644.17 கோடியாக உயர்ந்துள்ளது (கடந்த ஆண்டு ரூ.526.45 கோடிகள்) இதன் வளர்ச்சி விகிதம் 22.36% ஆகும்.

வங்கியின் இயக்க செலவுகள் (வங்கியின் இயக்க செலவுகள் (Operating Expenses) ரூ.979.66 கோடிகளாக உயர்ந்துள்ளது. (கடந்த ஆண்டு ரூ.850.91 கோடிகள்) இது கடந்த ஆண்டை விட 15.13% உயர்ந்துள்ளது.

வங்கியின் செயல்பாட்டு இலாபம் (Operating Profit) ரூ.995.05 கோடியிலிருந்து ரூ.1,202.04 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் வளர்ச்சி விகிதம் 20.80% ஆக உள்ளது.

நிகர லாபம் (Net Profit) ரூ.407.69 கோடியிலிருந்து ரூ.603.33 கோடியாக உயர்ந்துள்ளது.

நிகர வட்டி வருமானம் (Net Interest Income) ரூ.1,319.51 கோடியிலிருந்து ரூ.1,537.53 கோடியாக உயர்ந்துள்ளது.

வங்கியின் நிகர மதிப்பானது (Net Worth) ரூ. 3,980 கோடியிலிருந்து ரூ.4580 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் வளர்ச்சி விகிதம் 15.08% ஆகும்.

வட்டி வருமானம் (Interest Income) ரூ.3,466.11 கோடியிலிருந்து ரூ.3,609.05 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டினை காட்டிலும் 4.12% வளர்ச்சியடைந்துள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய வட்டியானது ரூ. 2,146.60 கோடியிலிருந்து ரூ.2,071.52 கோடியாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டினை விட 3.50% குறைந்துள்ளது.

மொத்த கடன்களில் மொத்த வருவாய் ஈட்டா கடன்கள் (Gross NPA) 3.44% ஆகும். (கடந்த ஆண்டு 3.62%) நிகர வருவாய் ஈட்டா கடன்கள் (Ner NPA) 1.98% ஆகும் (கடந்த ஆண்டு 1.80% ஆகும்)

வங்கியின் வருவாய் ஈட்டா கடன்கள் மற்றும் மறுசீரமைக்கப்பட்ட கடன்கள் சேர்த்து (NPA plus Restructured advances) 3.93% சதவிகிதமாக உள்ளது.


Capital Adequacy Ratio (Basel III) 16.74% என்ற விகிதத்தில் இருந்து 18.94% ஆக உயர்ந்துள்ளது.

Capital Adequacy Ratio (Basel II) 16.76% என்ற நிலையிலிருந்து 18.96% ஆக உயர்ந்துள்ளது.

Provision Coverage Ratio இந்த ஆண்டில் 79.53% ஆக உள்ளது (கடந்த ஆண்டு 80.75% ஆகும்)

வங்கி கூடுதலாக நிலையான கடன்களுக்காக (Additional Provision on Standard Asset (Covid II wave) Rs.50 கோடிகள் ஒதுக்கீடு செய்துள்ளது.

பங்கிற்கான புத்தக மதிப்பு

ஒரு பங்கின் தற்போதைய புத்தக மதிப்பு ரூ.321.38 ஆக உயர்ந்துள்ளது. இதன் முகமதிப்பு ரூ.10 ஆகும். பங்கு ஆதாயத்தின் மதிப்பு ரூ.42.34 ஆகும்.

விரிவாக்கம்

·         புதிதாக 91 கேஷ் ரீசைக்ளர் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. தற்போது இதன் மொத்த எண்ணிக்கை 260 ஆகும்.

·         வாடிக்கையாளர்களின் வசதிக்காக புதிதாக 16 e-lobby மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. தற்போது இதன் மொத்த எண்ணிக்கை 47 ஆகும்.

2020-21 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய திட்டங்கள்

பணத்தை வரிசைப்படுத்தவும், பிரிக்கவும் தொகுக்கவும் வங்கியின் இரண்டாவது தானியங்கி – Robotic செயல்பாடுகள் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் துவங்கப்பட்டது.

வங்கி புதிய பரிந்துணர்வு ஒப்பந்த (With IDBI) அடிப்படையில் FASTag அனைவருக்கும் அதன் கிளைகளின் மூலம் வழங்கி வருகிறது.

வங்கி பொது காப்பீட்டு சேவைக்காக நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் லி. நிறுவனத்துடன் பரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருக்கின்றது.

வங்கி இந்த கொரானா பரவல் காலத்தில் மத்திய அரசு அறிவித்த Emergency Credit Line Guarantee Scheme (ECLGS) திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு 13601 புதிய கடன் கணக்குகள் மூலம் ரூ.1,559.65 கோடிகள் வழங்கியுள்ளது.

2020-21 ஆண்டில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள IT திட்டங்கள்

·         TMB DigiLobby எனும் புதிய app மூலம் வங்கியின் பல்வேறு சேவைகளை வாடிக்கையாளர்கள் ஒருங்கிணைந்து பெற்றுக்கொள்ளும் வசதி

·         TMB WhatsApp banking அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

·         “TMB – RUPAY Select International Debit Card” எனும் புதிய டெபிட் கார்டு பல்வேறு தேர்ந்தெடுக்கப்பட்ட வசதிகளுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

·         அரசுத் துறை நடவடிக்கைகள் செயலாக்கத்திற்காக Public Fund Management System (PFMS) நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

2021-2022 ஆண்டிற்கான வணிக வளர்ச்சி அணுகுமுறைகள்

·         நடப்பு மற்றும் சேமிப்பு கணக்கு (CASA) வளர்ச்சியினை தொடர்ந்து முன்னெடுத்து செல்லுதல்

·         Retail Lending மீது அதிக முக்கியத்துவம் அளித்தல்

·         புதிய தொழில்நுட்பம் மற்றும் மனித வள மேலான்மையின் கொள்கைகள் மூலம் வணிக வளர்ச்சியினை அதிகப்படுத்துதல் மற்றும் சேவையில் புதிய தொழில்நுட்ப அணுகு முறைகள் மேம்படுத்துதல்

2021-2022 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்த உள்ள புதிய திட்டங்கள்

·         புதிதாக 50 e-lobby நிறுவுவதன் மூலம் வங்கியின் நூற்றாண்டில் மொத்த e-lobby எண்ணிக்கையினை 100 ஆக உயர்த்திடல்

·         நடமாடும் e-lobby தொடங்குதல்

·         Finacle 10.x migration

·         மேம்படுத்தப்பட்ட புதிய மொபைல் வங்கி சேவையினை அறிமுகப்படுத்துதல் (CAPEX Model)

·         ஒருங்கிணைந்த கணக்கு துவங்கும் வசதி

·         வாடிக்கையாளர்கள் வசதிக்காக video KYC மூலம் கணக்கு துவங்கும் வசதி

·         வாடிக்கையாளர்கள் நலன் மேலாண்மை – Customer Relationship Management solution (CRM) மற்றும் வாடிக்கையாளர் சேவை மையம் (Call Centre Operations) அறிமுகப்படுத்துதல் 

******

 

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மொரிஷியஸ் நாட்டிலிருந்து கிஃப்ட் சிட்டிக்கு  மாறிய அர்தா குளோபல் ஆபர்சூனிட்டிஸ் ஃபண்ட் Artha Global Opportunities Fund

மொரிஷியஸ் நாட்டிலிருந்து கிஃப்ட் சிட்டிக்கு   மாறிய அர்தா குளோபல் ஆபர்சூனிட்டிஸ் ஃபண்ட், நிதி நெருக்கடி நிறுவனங்களில் முதலீடு செய்ய ...