இந்தியாவின் முதல் மிட் கேப் ஃபண்ட்: ஆண்டுக்கு சராசரியாக 24% வருமானம்..!
சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட்: வெள்ளி விழா கொண்டாட்டம்!
நம் ஊரைச் சேர்ந்த சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் கால்நூற்றாண்டைக் கடந்து வெள்ளி விழா கொண்டாடுகிறது.
இந்த நீண்ட பயணத்தில் இந்த நிறுவனம் 35 லட்சத்துக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களுக்கு சேவை அளித்திருக்கிறது.
இந்தியா முழுக்க சுமார் 90 கிளைகளுடன் இயங்கிவரும் சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், இந்தியாவில் முதல் மிட் கேப் ஃபண்டை 2002-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.
இந்த ஃபண்ட் ஆரம்பம் முதல் ஆண்டுக்கு சராசரியாக 24% அளித்துள்ளது. இதன் பெஞ்ச்மார்க் வருமானம் சுமார் 20% மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது!