என்.டி.இ.சி.எல், 2020-21 நிதியாண்டிற்கான இடைக்கால லாப ஈவுத்தொகை (டிவிடெண்ட்) ரூ. 47,55,59,335 –ஐ என்.டி.பி.சி நிறுவனத்துக்கு வழங்குகிறது
என்.டி.பி.சி லிமிடெட் (NTPC Limited) மற்றும் டாங்கெட்கோ (TANGEDCO) நிறுவனங்களின் 50:50 கூட்டு நிறுவனம், என்.டி.பி.சி தமிழ்நாடு எனர்ஜி கம்பெனி லிமிடெட் (NTPC Tamil Nadu Energy Company Limited - NTECL - என்.டி.இ.சி.எல்).
இந்த நிறுவனம், இடைக்கால லாப ஈவுத்தொகை (interim
dividend)
ரூ.
47,55,59,335 (நாற்பத்தி ஏழு
கோடியை
ஐம்பத்தைந்து லட்சத்து ஐம்பத்தி ஒன்பதாயிரத்து முந்நூற்று முப்பத்தைந்து ரூபாய்) என்.டி.பி.சி நிறுவனத்தின் 2020-21 ஆம் ஆண்டிற்கான 50% பங்கை
வழங்கி உள்ளது.
என்.டி.இ.சி.எல் நிறுவனம் தொடங்கப்பட்டதிலிருந்து முதல் முறையாக இப்போதுதான் லாப ஈவுத்தொகை வழங்கி உள்ளது. இடைக்கால லாப ஈவுத்தொகை மற்ற கூட்டு நிறுவன பங்குதாரர்களுக்கும் வழங்கப்படுகிறது. என்.டி.இ.சி.எல் நிறுவனத்தில் 50% பங்கு மூலதனத்தை வைத்திருக்கும் டாங்கெட்கோ நிறுவனத்துக்கும் வழங்கப்படுகிறது. .
இந்த
லாப ஈவுத் தொகையை, என்.டி.பி.சி.எல் நிறுவனத்தின் சேர்மன் மற்றும் இயக்குநர் (செயல்பாடுகள்) திரு.ரமேஷ் பாபு வி அவர்கள், என்.டி.பி.சி லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு. குர்தீப் சிங் அவர்களிடம் வழங்கினார்.
இந்த
நிகழ்ச்சியின் போது, திரு.ஏ. கே. கௌதம், இயக்குநர் (நிதி), என்டிபிசி, திரு.திலிப் குமார் படேல், இயக்குநர் (மனிதவளம்), என்.டி.பி.சி, திரு.சி வி ஆனந்த், RED (தெற்கு), என்.டி.பி.சி & இயக்குனர், என்.டி.இ.சி.எல்., திரு.பாசுராஜ் கோஸ்வாமி, முதன்மை செயல் அதிகாரி என்.டி.இ.சி.எல்., திரு. ராஜீவ் ஸ்ரீவஸ்தவா, முதன்மை நிதி அதிகாரி, என்.டி.இ.சி.எல்., கம்பெனி செயலாளர் திருமதி நந்தினி சர்க்கார், என்.டி.பி.சி மற்றும் திரு.அமித் கார்க் , கம்பெனி செயலாளர், என்.டி.இ.சி.எல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக