ஆப் மூலமாக கடன்:
பாரத ரிசர்வ் வங்கி எச்சரிக்கை…!
பாரத ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ) வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
ஆப் மூலமாக கடன்
ஆப் மூலமாக கடன் வழங்கும் நிறுவனங்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!
குறுகிய காலத்தில் கடன் கிடைப்பதாக கருதி அங்கீகாரம் இல்லாத மொபைல் ஆப்கள் மூலம் கடன் பெற வேண்டாம்.
ஆப் மூலமாக சில நிறுவனங்கள் அதிக வட்டி, மறைமுக கட்டணம் என கடன் வழங்குவதில் முறைகேடு செய்வதாக தகவல் வந்துள்ளது.
கடனை வசூலிக்கவும் ஆப் நிறுவனங்கள் மோசமான நடைமுறைகளை பயன்படுத்துவதும் தெரிய வந்துள்ளது.
அதிக வட்டி, மறைமுக கட்டணம்
அதிக வட்டி, மறைமுக கட்டணத்துடன் கடன் வழங்கும் ஆப்கள் குறித்து உடனடியாக காவல்துறையில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.
கடன் வழங்க அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் தொடர்பான விவரங்களை ரிசர்வ் வங்கி இணையதளத்தில் பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக