மொத்தப் பக்கக்காட்சிகள்

பேங்க் ஆஃப் இந்தியா :2020-21 நிதி ஆண்டு இரண்டாம் காலாண்டு நிதி நிலை முடிவுகள்

 

பேங்க் ஆஃப் இந்தியா,

2020-21 நிதி ஆண்டு இரண்டாம் காலாண்டு நிதி நிலை முடிவுகள் அறிவிப்பு


·         இந்த வங்கியின் நிகர லாபம் (Net Profit), 2020-21 ஆம் நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் (Q2FY21), முந்தைய 2019-20 ஆம் நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டை (Q2FY20) விட 97.74% அதிகரித்து ரூ.526 கோடிகளாக உயர்ந்து இருக்கிறது.

·         செயல்பாட்டு லாபம் (Operating Profit) 2019-20 ஆம் நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் ரூ. 2,460 கோடிகளாக இருந்தது. இது 2020-21 ஆம் நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் ரூ. Rs.3,098 கோடிகளாக அதிகரித்துள்ளது.  இது 25.93% அதிகரிப்பாகும்.

·         வட்டி சாரா வருமானம் (Non-Interest Income), 2019-20 ஆம் நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டு உடன் ஒப்பிடும் போது 21.55% அதிகரித்து ரூ. 1,613 கோடிகளாக உள்ளது.

·         வங்கியின் நிகர வட்டி வருமானம் (Net Interest Income)  2020-21 ஆம் நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் ரூ. 4,113 கோடிகளாக இருக்கிறது. இது 2019-20 ஆம் நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் ரூ. 3,860 கோடிகளாக இருந்தது.

·         பன்னாட்டு நிகர வட்டி வருமானம் (Global Net Interest Margin -NIM) 2020-21 ஆம் நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 2.66% மற்றும் உள்நாட்டு நிகர வட்டி வருமானம் 2.88% ஆக உள்ளது. இது, 2019-20 ஆம் நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் முறையே 2.99% மற்றும் 3.36% ஆக இருந்தது..

·         செலவுக்கும் வருமானத்துக்குமான விகிதம் (Cost-to-income Ratio - global) 2019-20 ஆம் நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 52.58% ஆக இருந்தது. இது 2020-21 ஆம் நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 45.91% ஆக மேம்பட்டுள்ளது.

·         டெபாசிட் திரட்டுவதற்கான செலவு (Cost of Deposits  - global)  முந்தைய ஆண்டை விட மேம்பட்டுள்ளது.  இந்த விகிதம், 2019-20 ஆம் நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில்  4.62% ஆக இருந்தது. 2020-21, முதல் காலாண்டில்   4.32% ஆக மேம்பட்டுள்ளது. 2020-21 ஆம் நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் மேலும் மேம்பட்டு 4.17%  ஆக உள்ளது.

·         பன்னாட்டு வணிகம் (Global Business) 13.45% அதிகரித்து ரூ.10,15,400 கோடிகளாக உள்ளது. இதில், பன்னாட்டு டெபாசிட்கள் (Global Deposits)  17.28% அதிகரித்துள்ளது. மற்றும் வழங்கப்பட்ட பன்னாட்டு கடன்கள் (Global Advances) 8.19%  அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பு, 2020-21 ஆம் நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டுடன், 2019-20 ஆம் நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டுடன் ஆன ஒப்பீடாகும்.

·         வங்கியின் உள்நாட்டு சில்லறைக் கடனில் (domestic retail credit) வீட்டுக் கடனின் (Home loan) பங்களிப்பு 2020-21 ஆம் நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 59.15%  ஆக உள்ளது. இது 12.23%  அதிகரிப்பாகும்.

·         உள்நாட்டு காசா டெபாசிட்கள் (Domestic CASA deposits)  சாதனை அளவாக 13.02%  வளர்ச்சி கண்டு, காசாவின் பங்களிப்பு  2020-21 ஆம் நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 39.49%  ஆக உள்ளது. 

·         சரிசெய்யப்பட்ட நிகர வங்கி கடனில் (ANBC - Adjusted Net Bank Credit) முன்னுரிமை துறை கடன்களின் (Priority Sector advances)  பங்களிப்பு 2020-21 ஆம் நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 43.96%  ஆக உள்ளது. இது ஒழுங்குமுறை தேவையை  (regulatory requirement) விட அதிகமாகும்..

·         ரிஸ்க் வெயிடட் சொத்துகள் (Risk Weighted Assets), காலாண்டுகளில் 2.67% மற்றும் 1.93% குறைந்துள்ளது.

·         நிகர வாராக் கடன் (Net NPA ratio) 2020-21 ஆம் நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 2.89% ஆக குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டை விட  2.98% குறைவாகவும், முந்தைய காலாண்டை விட 0.69% குறைந்துள்ளது. மொத்த வாராக் கடன் (Gross NPA) 2020-21 ஆம் நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 13.79%  ஆக குறைந்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டை விட 2.52% குறைவாகவும், முந்தைய காலாண்டை விட 0.12% குறைந்துள்ளது.

·         வாராக் கடன் ஒதுக்கீடு விகிதம் (Provision Coverage Ratio - PCR)  87.91% ஆக மேம்பட்டுள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டை விட 10.79%  அதிகமாகவும், முந்தைய காலாண்டை விட 3.04% அதிகமாகவும் உள்ளது.

·         மூலதன தன்னிறைவு விகிதம் (Capital Adequacy Ratio - CAR), பேசல் III விதிமுறைகளின்படி 2020-21 ஆம் நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 12.80% ஆக உள்ளது.

·         பன்னாட்டு சொத்துகள் மீதான வருமானம் (Global Return on Assets -RoA) 0.12%  அதிகரித்து  2020-21 ஆம் நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில்   0.28% ஆக இருந்தது. இது,  2019-20 ஆம் நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 0.16%  ஆக இருந்தது.

 

Q2FY21 நிதி நிலை முடிவுகள் முக்கிய அம்சங்கள்

   ( ரூ. கோடியில்)

விவரங்கள்

Q2FY20

Q1FY21

Q2FY21

 YoY %

QoQ %

H1FY20

H1FY21

 YoY %

 வட்டி வருமானம்

10,658

10,234

10,796

1.29

5.49

20,990

21,030

0.19

வட்டி செலவுகள்

6,798

6,753

6,682

-1.71

-1.05

13,644

13,435

-1.53

 

நிகர வட்டி வருமானம் (NII)

3,860

3,481

4,113

6.55

18.16

7,346

7,594

3.38

 வட்டி சாரா வருமானம்

1,327

1,707

1,613

21.55

-5.51

2,522

3,320

31.64

செயல்பாட்டு வருமானம் (NII+Other Income)

5,187

5,188

5,726

10.39

10.37

9,868

10,914

10.60

செயல்பாட்டு செலவுகள்

2,728

2,344

2,629

-3.63

12.16

5,137

4,973

-3.19

செயல்பாட்டு லாபம்

2,460

2,845

3,098

25.93

8.89

4,731

5,942

25.60

 வரிக்கு முந்தைய லாபம்

407

1,333

785

92.87

-41.06

767

2,118

176.14

வாராக் கடன் ஒதுக்கீடு

1,452

767

2,134

46.97

178.23

3,325

2,900

-12.78

நிகர லாபம்

266

844

526

97.74

-37.68

509

1,369

168.96

நிகர வட்டி வரம்பு%(உள்நாடு)

3.36

2.73

2.88

 

 

3.19

2.81

 

 

 

விவரங்கள்

செப்-19

ஜூன்-20

செப்-20

 YoY %

QoQ %

பன்னாட்டு டெபாசிட்கள்

5,18,037

5,95,235

6,07,529

17.28

2.07

உள்நாட்டு காசா

1,83,397

2,07,370

2,07,280

13.02

-0.04

உள்நாட்டு டெபாசிட்கள்

4,36,530

5,17,577

5,32,095

21.89

2.80

வழங்கப்பட்ட பன்நாட்டு கடன்கள்

3,76,993

4,15,440

4,07,871

8.19

-1.82

வழங்கப்பட்ட உள்நாட்டு கடன்கள்

3,21,642

3,59,715

3,62,666

12.75

0.82

மொத்த வாராக் கடன்

61,476

57,788

56,232

-8.53

-2.69

நிகர வாராக் கடன்

19,646

13,275

10,444

-46.84

-21.33

 

விவரங்கள் (விகிதங்கள், %)

செப்-19

ஜூன்-20

செப்-20

YoY bps

QoQ bps

                                Asset Quality

 

மொத்த வாராக் கடன்

16.31

13.91

13.79

-252

-12

நிகர வாராக் கடன்

5.87

3.58

2.89

-298

-69

வாராக் கடன் ஒதுக்கீட்டு விகிதம் (PCR)

77.12

84.87

87.91

1079

304

                                மூலதன விகிதங்கள் (Capital Ratios)

 

Tier-1

11.06

9.48

9.67

-139

19

CET-1

11.00

9.46

9.67

-133

21

CRAR

14.09

12.76

12.80

-129

4

 

 


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

தொழில் பழகுவோம் புத்தகம் RxT - A Financial Health Clinic

RxT - A Financial Health Clinic நிறுவனத்தின் முதல் ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்வின் ஒரு பகுதியாக, "தொழில் பழகுவோம்" ...