மொத்தப் பக்கக்காட்சிகள்

TallyPrime’ -ன் ‘Go To’ - எளிதாகக் கண்டுபிடித்து மேலும் பலவற்றைச் செய்வதற்கான ஆற்றல் மிக்க திறன்

 

TallyPrime’ -ன் ‘Go To’ - எளிதாகக் கண்டுபிடித்து மேலும் பலவற்றைச் செய்வதற்கான  ஆற்றல் மிக்க திறன்

எந்தவொரு வணிகத்திற்கும், தொழில்துறைக்கும் அதன் அளவையும் தாண்டி,  வணிக அறிக்கைகள் இன்றியமையாதவை (Business reports) ஆகும். டாலி (Tally) உடன், தகவலறிந்த முடிவுகளை எடுக்க உதவும் ஆற்றல் மிக்க நுண்ணறிவுகளை (insights) வழங்கும் பல கருத்துகளுடன் பலவிதமான அறிக்கைகள் உங்களுக்கு எப்போதும் கிடைக்கும். நிதி, இருப்பு அல்லது வரிகள் (finance, stock, or taxes)  எதுவாக இருந்தாலும், டாலியில் கிடைக்கும் அறிக்கைகள் இந்த அம்சங்களை சிறப்பாக நிர்வகிக்க உங்களுக்கு உதவும்.


புதிய ஆற்றல் மிகுந்த வணிக மேலாண்மை மென்பொருளான TallyPrime மூலம்,நுண்ணறிவுகளைக் கண்டுபிடிப்பது எளிதாக உள்ளது. ஆச்சரியப்பட வேண்டாம்! அறிக்கையை அடைய வழிசெல்லும் பாதை (navigation path) தெரியாமலும் அல்லது பாதையை நினைவில் வைத்துக் கொள்ளாமலும் ஒருவர் நுண்ணறிவைப் பெறலாம்.

ஆம்! இது மிகவும் எளிது.

TallyPrime -ன் புதிய மற்றும் ஆற்றல் மிகுந்த தேடுதல் பட்டி (search bar) ஆன “Go To” மூலம் இது சாத்தியமானது. Go To - பயன்படுத்தி, உங்களுக்குத் தெரியாத விஷயங்களைத் தேடலாம் மற்றும் கண்டுபிடிக்கலாம். டேலி உங்களுக்காக இதைச்  செய்யும் மற்றும் உங்கள் வணிகத்தை சிறப்பாக நடத்த புதிய நுண்ணறிவுகளைக் கண்டறியலாம்.

 “Go To” மூலம், எல்லா வணிக நுண்ணறிவுகளையும் ஒரே இடத்தில் காணலாம். மேலும், அவற்றை வசதியாக ஆராயலாம். அது மட்டுமல்லாமல், ஒரே நேரத்தில் பல குறுக்கீட்டு பணிகளை இயல்பாக  செய்யவும், அன்றாட செயல்களை கையாளவும் உதவும்.

TallyPrime ல் Go To - பயன்படுத்தி நீங்கள் என்ன செய்ய முடியும் என்பதைப் பார்ப்போம்.

எளிதாக கண்டறியலாம் (Discover easily)

TallyPrime  மூலம், அறிக்கைகளை அணுக வழிசெலுத்தல் பாதையைப்  (navigation path to access) பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை அல்லது வழிசெலுத்தல்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் செய்ய வேண்டியது, செல்ல வேண்டிய குறுக்குவழி விசையான “Alt + G” - அழுத்தவும் அல்லது Go To ஐக் கிளிக் செய்து, நீங்கள் பார்க்க விரும்பும் அறிக்கையைத் தட்டச்சு (type) செய்து தேர்ந்தெடுக்கவும். அவ்வளவுதான்! உங்களுக்கு தேவையான நுண்ணறிவுகளைக் கண்டறிய நீங்கள் ஒரு கிளிக் (click) செய்தால் போதும்.

 

உங்களுக்குத் தெரிந்த பெயர்களுடன் அறிக்கைகளைக் கண்டறியலாம் (Discover the reports with the names you are familiar with)

ஒரே அறிக்கையை வெவ்வேறு பெயர்களுடன் குறிப்பிடுவது மிகவும் பொதுவானது. எடுத்துக்காட்டாக, செலுத்த வேண்டிய பில்கள் (bills payable) மற்றும் செலுத்த வேண்டிய கணக்குகள் (accounts payable)  ஒன்றுக்கொன்று  மாற்றத்தக்க வகையில் பயன்படுத்தப்படுகின்றன, ஆனால் அவை ஒன்றையே குறிக்கிறது.

நீங்கள் Godown summary என்று அழைப்பதை இன்னொருவர் warehouse summary என்று  அழைக்கலாம். மற்றொரு பயனர்  location summary  எனக் குறிப்பிடலாம். பெயர்கள் வேறுபட்டாலும், இவை அனைத்தும் ஒரே அறிக்கையைத்தான் குறிக்கின்றன.

TallyPrime  தேவையைப் புரிந்துகொண்டு, வெவ்வேறு சொற்களுடன்  (different terms) தேடும்போது கூட சரியான அறிக்கையைக் கண்டறிய உங்களை அனுமதிக்கிறது. Godown summary, location summary, or daybook தினசரி உள்ளீடுகளாக நீங்கள் தேடலாம்,  எப்படி தேடினாலும் பார்க்க விரும்பிய அறிக்கையை நீங்கள்  கண்டுபிடிக்க முடியும்.

 பல பணி திறனுடன்   அதிகமாக செய்யுங்கள் (Do more with multi-task capability)

GoTo இயல்பாகவே  ஒரே நேரத்தில் பல பணிகளை  (multi-tasking) செய்ய உதவுகிறது மற்றும் அன்றாட குறுக்கீடுகளை (day-to-day interruptions) கையாள உதவுகிறது. நீங்கள் விற்பனை விலைப் பட்டியலின்  (sales invoice) நடுவில் இருக்கிறீர்கள். ஆனால், மற்றொரு புதிய விற்பனை அல்லது வேறு எந்தப் பற்றுச்சீட்டையும் (voucher) பதிவு செய்ய விரும்புகிறீர்களா?  அல்லது பணம் செலுத்தும் பணியின் இடையில் இருக்கிறீர்கள். ஆனால், தொடரும் முன் நிலுவையில் உள்ள அறிக்கையை  (outstanding report) குறிப்பிட விரும்புகிறீர்களா? அல்லது  பற்றுச்சீட்டு பதிவின் இடையில் மற்றொரு அறிக்கையை அச்சிட விரும்புகிறீர்களா?

அதேபோல், நீங்கள் ஐந்தொகை அறிக்கையை (balance sheet) பார்க்கிறீர்கள், ஆனால் ஒரு நிலையான சொத்து பதிவேட்டை (fixed asset ledger) உருவாக்க விரும்புகிறீர்களா? 

GoTo மூலம், டாலியின் பல நிகழ்வுகளுக்கு இடையில் மாறுவதற்கு இடையூறு இல்லாமல் அல்லது உங்கள் செயல்பாட்டை இழக்கும் கவலை இல்லாமல் இதுபோன்ற பல சூழ்நிலைகளை நீங்கள் ஒரே நேரத்தில் கையாள முடியும். நீங்கள் ஒரு புதிய பற்றுச்சீட்டை பதிவுசெய்யலாம், master - உருவாக்கலாம், பார்வையிடலாம் மற்றும் அறிக்கைகளை அச்சிடலாம், மேலும் நீங்கள் பரிவர்த்தனை அல்லது அறிக்கைகளை  எங்கு விட்டு விட்டு வந்தீர்களோ அந்த இடத்திற்குச் செல்லலாம்.

எங்கிருந்தும் எல்லா இடங்களுக்கும் செல்ல முடியும் (Navigate from anywhere to everywhere)

Go To - பயன்படுத்தி, எந்தவொரு அறிக்கையையும் பெற அல்லது குறுக்குவழி விசைகளைக் கற்றுக்கொள்வதற்கான வழிசெலுத்தல் பாதையை அறிய வேண்டிய அவசியமின்றி நீங்கள் இப்போது எங்கிருந்தும் எல்லா  எந்த அறிக்கைக்கும் செல்லலாம். விஷயங்களை எளிதாக கண்டுபிடித்து செய்ய, இது சிறந்த நெகிழ்வுத்தன்மையை (flexibility) சேர்க்கிறது. 

நீங்கள் விற்பனை பதிவேட்டில் இருக்கிறீர்கள்,  கையிருப்பு பகுப்பாய்வைக் காண விரும்புகிறீர்கள் என்று சொல்லலாம். Go To - ஐ பயன்படுத்தி நீங்கள் செல்லவும். அறிக்கையின் பெயரைத் தட்டச்சு செய்து, தேர்ந்தெடுத்துப் பார்க்கலாம். இங்கிருந்து, நீங்கள் செலுத்த வேண்டிய பில்களைக் காண விரும்பினால், மீண்டும் செல்ல Alt + G - அழுத்தி, “bills receivables” எனத் தட்டச்சு செய்து அறிக்கையைத் தேர்ந்தெடுக்கவும்.

அது மட்டுமல்ல, GO To  - ஐ பயன்படுத்தி நீங்கள் திறந்து வைத்திருக்கும் அறிக்கைகளின் பட்டியலைக் காணலாம். மேலே உள்ள எடுத்துக்காட்டில், நீங்கள் விற்பனைப் பதிவேடு, இருப்பு பகுப்பாய்வு மற்றும் பில்கள் பெறத்தக்கவைகள் (bills receivables) அறிக்கை ஆகியவற்றைத் திறந்துவிட்டீர்கள். Go To - பயன்படுத்தி திறந்த அனைத்து அறிக்கைகளையும் விரைவாக  பார்க்கலாம். புதிய Go-To  திறன், கண்டுபிடிக்க உதவுகிறது. TallyPrime –லிருந்து அதிகமானதை பெற உதவுகிறது. உங்கள் வணிகத்தை சிறப்பாக நடத்துவதற்கான புதிய நுண்ணறிவுகளைக் கண்டறிய இது உதவும்.

மேலும், பலதரப்பட்ட பணிகளைச் (multitask) சிறப்பாகச் செய்ய உதவுகிறது.  நீங்கள் செய்து கொண்டிருக்கும் பணியை விட்டு வெளியேற வேண்டும் என்ற கவலையும் இல்லாமல் ஒரு அறிக்கையிலிருந்து இன்னொரு அறிக்கைக்கு செல்லலாம்.

TallyPrime - நிறுவவும், எளிதாக கண்டுபிடித்து மேலும் பலவற்றைச் செய்யவும்.

 

 

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

இந்திய ஷேர் மார்க்கெட் டிரேடிங் விடுமுறைகள் முழு பட்டியல் 2025 India Share Market Trading Holidays Full List 2025

இந்திய ஷேர் மார்க்கெட் டிரேடிங் விடுமுறைகள் முழு பட்டியல் 2025 India Share Market Trading Holidays Full List 2025 நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சே...