மஹிந்திரா மேனுலைஃப் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் முதன்மை முதலீட்டு அதிகாரி திரு. கிருஷ்ணா சங்கவி (Mr. Krishna Sanghavi, Chief Investment Officer – Equity, Mahindra
Manulife Investment Management Private Limited) கூறும்போது “தற்போதைய பங்குச் சந்தை சூழல் முதலீட்டாளர்களுக்கு நடுத்தர காலம் முதல் நீண்ட காலத்தில் வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. மஹிந்திரா மேனுலைஃப் ஃபோகஸ்ட் ஈக்விட்டி யோஜனா வலுவான வளர்ச்சி திறன் கொண்ட குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. வலிமையான இடர்ப்பாட்டு மேலாண்மை செயல்முறைகளை கொண்ட தரமான பங்கு சார்ந்த முதலீட்டுக் கலவையை (equity portfolio) உருவாக்குவதே எங்கள் முயற்சி. எங்கள் ஜி.சி.எம்.வி செயல்முறை மூலம் சாத்தியமான லாபம்
தரக்கூடிய நிறுவனப் பங்குகளைத் தேர்ந்தெடுத்து முதலீட்டாளர்களுக்கு நியாயமான சந்தை வருமானத்தை வழங்கும் என எதிர்பார்க்கிறோம்.” என்றார்.
முதலீட்டாளர்கள் தங்கள் மூலதனம் நடுத்தர அளவு அதிக இடர்ப்பாட்டில் (moderately high risk) இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
இந்தத்
திட்டம் தங்களுக்கு ஏற்றதா என்று சந்தேகம் இருந்தால் முதலீட்டாளர்கள் தங்கள் நிதி ஆலோசகர்களை ஆலோசிக்க வேண்டும்.
மஹிந்திரா மேனுலைஃப் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட் மற்றும் மஹிந்திரா மேனுலைஃப் டிரஸ்டி பிரைவேட் லிமிடெட் பற்றி (About Mahindra Manulife Investment
Management Private Limited and Mahindra Manulife Trustee Private Limited)
மஹிந்திரா மேனுலைஃப் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட் (முந்தைய பெயர் மஹிந்திரா அசெட்
மேனேஜ்மென்ட் கம்பெனி பிரைவேட் லிமிடெட்) (MMIMPL
- எம்.எம்.ஐ.எம்.பி.எல்) மஹிந்திரா மேனுலைஃப் மியூச்சுவல் ஃபண்டின் முதலீட்டு மேலாளராக செயல்படுகிறது (முந்தைய பெயர் மஹிந்திரா மியூச்சுவல் ஃபண்ட்). 2020 ஏப்ரல் 29
ஆம் தேதி நிலவரப்படி, எம்.எம்.எம்.பி.எஸ்.எல் நிறுவனம், எம்.எம்.ஐ.எம்.பி.எல்
இல் தான் கொண்டிருந்த 49% பங்கு
மூலதனத்தை மேனுலைஃப் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜ்மென்ட் (சிங்கப்பூர்) பி.டி.
லிமிடெட்-க்கு
51:49 கூட்டு நிறுவனத்தை உருவாக்க
விலக்கி கொண்டது.
எம்.எம்.எம்.பி.எஸ்.எல்
பற்றி கூடுதலாக தெரிந்துகொள்ள www.mahindramanulife.com, ட்விட்டர்: @MahindraMMF
முகநூல்:@MahindraManulifeMutualFund