மஹிந்திரா மேனுலைஃப் மியூச்சுவல் ஃபண்ட் , ‘மஹிந்திரா மேனுலைஃப் ஃபோகஸ்ட் ஈக்விட்டி யோஜனா’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.
இது, பங்குச் சந்தையில் பல்வேறு சந்தை
மதிப்பில் 30 நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்கிறது.
மஹிந்திரா மேனுலைஃப் இன்வெஸ்ட்மென்ட்
மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட்-ன் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி திரு. அசுதோஷ் பிஷ்னோய் (Mr.Ashutosh Bishnoi, MD and CEO,
Mahindra Manulife Investment Management Private Limited) கூறும் போது, “ இந்தியப் பொருளாதாரம் மற்றும் பங்குச் சந்தைகள் வலுவான மீட்சிக்கு தயாராக உள்ளன.
காரணம், தொழில்
துறை வளர்ச்சிக்கு திரும்பி இருப்பதோடு, பெருநிறுவனங்களின் (corporate) செயல்திறனில் முன்னேற்றத்தையும் காண்கிறோம்.
மஹிந்திரா மேனுலைஃப் ஃபோகஸ்ட் ஈக்விட்டி யோஜனா திட்டம், நடுத்தரம் முதல் நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு சிறந்த இடர்ப்பாடு
ஈடுகட்டப்பட்ட, பங்குச் சந்தை வருமானத்தை வழங்க
கூடியதாக பொருத்தமானதாக இருக்கிறது. 30 நிறுவனப் பங்குகளில் மட்டும்
முதலீடு செய்யும் ஃபோகஸ்ட் ஃபண்ட்கள் (focused funds) எந்தப் பங்குச் சந்தை மதிப்பையும் (market cap)
கொண்ட நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யும் நன்மையைக் கொண்டுள்ளன. எனவே, பங்குச் சந்தையில் எங்கும் வாய்ப்புகளைக் கண்டறியும் நெகிழ்வுத்தன்மை
இந்தத் திட்டத்தில் உள்ளது.
அதாவது, இந்த ஃபண்டில் லார்ஜ் கேப்,
மிட் கேப், ஸ்மால் கேப் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்ய முடியும். இது ஒரு
மல்டி கேப் போன்று செயல்படும்.
இந்த புதிய ஃபண்ட் வெளியீடு (New Fund
Offer - NFO),
அக்டோபர் 26, 2020 அன்று தொடங்கி, நவம்பர் 9, 2020 அன்று நிறைவு பெறுகிறது.
முதலீட்டாளர்களுக்கு யூனிட்கள் ஒதுக்கப்பட்ட நாளிலிருந்து 5 வணிக
நாட்களுக்குள் தொடர்ச்சியான விற்பனை மற்றும் மறுமுதலீட்டுக்கு இந்தத் திட்டம் மீண்டும் திறக்கப்படும். மஹிந்திரா மேனுலைஃப் ஃபோகஸ்ட் ஈக்விட்டி யோஜனா திட்டத்தில், பொதுவாக 65%-100% பங்குச் சந்தை மற்றும் பங்குச் சந்தை தொடர்பான நிதி ஆவணங்களில் முதலீடு செய்யப்படும். கடன் சந்தை மற்றும் பணச்
சந்தை ஆவணங்களில்
(ரெப்போ, ரிவர்ஸ் ரெப்போ சார்ந்த திட்டங்களையும் சேர்த்து) 35% வரை
மற்றும் ரியல்
எஸ்டேட் உள்கட்டமைப்பு சார்ந்த REITs &
InvITs யூனிட்களில் 10% வரை
முதலீடு செய்யப்படும்.
மியூச்சுவல்
ஃபண்ட் நிதி
முதலீடுகள்
சந்தை
அபாயங்களுக்கு
உட்பட்டவை,
திட்டம் சார்ந்த
அனைத்து
ஆவணங்களையும்
கவனமாகப்
படிக்கவும் (Mutual
Fund investments are subject to market risks, read all scheme related documents
carefully)