மொத்தப் பக்கக்காட்சிகள்

டி.எஸ்.எம் நிறுவனத்திடமிருந்து, அதன் முன்னணி பூச்சு பிசின் வணிகத்தை கோவெஸ்ட்ரோ கையகப்படுத்துகிறது.

 

 

டி.எஸ்.எம் நிறுவனத்திடமிருந்து, அதன் முன்னணி பூச்சு பிசின் வணிகத்தை  கோவெஸ்ட்ரோ கையகப்படுத்துகிறது.   

·         நிலையான பூச்சு பிசின்களுக்கான கவர்ச்சிகரமான வளர்ச்சி சந்தையில் உலகளாவிய முன்னணி நிறுவனங்களில் ஒன்று கோவெஸ்ட்ரோ

·         சுழற்சி பொருளாதாரத்தில் மாற்றத்தை துரிதப்படுத்த புதுமையான கண்டுபிடிப்பு திறன்களை இணைக்கிறது

·           சிறப்பு தயாரிப்பு பொருள்களின் தொகுப்புகள் மற்றும் பயன்பாட்டுத் தொழில்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய சிறந்த நிலையில் உள்ளன

·         இந்தக் கையகப்படுத்தல் 1 பில்லியன் யூரோ வருவாயையும், 141 மில்லியன் யூரோ எபிட்டா - ஐயும் சேர்க்கிறது 

·         கையக்கப்படுத்தலுக்கு கைமாறும் 1.61 பில்லியன் யூரோ  தொகை, நிறுவனத்தின் எதிர்கால மதிப்பீட்டை 5.7x EV / EBITDA 2021 என கவர்ச்சிகரமாக பிரதிபலிக்கிறது. இந்தக் கூட்டு மூலம் இந்த நிறுவனம் எதிர்காலத்தை முன்னை விட சிறப்பாக செயல்படும்.

·         நிறுவனத்தின் மதிப்பை ஆண்டுக்கு நிலையாக சுமார் 120 மில்லியன் யூரோ என அதிகரிக்கிறது.

 கோவெஸ்ட்ரோ (Covestro) நிறுவனம், ராயல்ஸ் டி.எஸ்.எம் (Royal DSM) நிறுவனத்திடமிருந்து அதன், பிசின்கள் மற்றும் செயல்பாட்டுப் பொருட்கள் வணிகத்தை (Resins & Functional Materials business – RFM - ஆர்.எஃப்.எம்) வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டுள்ளது. நிலையான பூச்சு பிசின்களுக்கான (coating resins) கவர்ச்சிகரமான வளர்ச்சி சந்தையில் அதன் தயாரிப்பு பொருள்களை விரிவாக்குவதன் மூலம், கோவெஸ்ட்ரோ அதன் நிலையான மற்றும் புதுமை சார்ந்த வணிகங்களை வலுப்படுத்த அதன் நீண்ட கால நிறுவன வணிக உத்தியில் ஒரு குறிப்பிடத்தக்க நிலையை எடுத்து வருகிறது.  1 பில்லியன் யூரோ வருவாய் மற்றும் 141 மில்லியன் யூரோ (2019) எபிட்டா (EBITDA) என்கிற வட்டி, வரி, தேய்மானம் மற்றும் கட ன் ஆகியவற்றுக்கு முந்தைய வருவாய் ஆகியவற்றைச் சேர்த்து, ஆர்.எஃப்.எம் ஒருங்கிணைப்பு என்பது கோவெஸ்ட்ரோவின் பூச்சுகள், பசைகள், சிறப்பு தயாரிப்புகள் (சி.ஏ.எஸ்) பிரிவின் வருவாயை 40%- க்கும் அதிகமாக விரிவுபடுத்துவதற்கான கணிசமான வளர்ச்சி வாய்ப்பாகும். இது சுமார் 3.4 பில்லியன் யூரோக்கள் (2019) ஆக இருக்கும்.

இந்தக் கையகப்படுத்தல் நிலையான பூச்சு பிசின்கள் துறையில் முன்னணி விநியோக நிறுவனம் (supplier) ஒன்றை உருவாக்குகிறது. இது மிகவும் விரிவான மற்றும் புதுமையான தயாரிப்பு பொருள்களின் தொகுப்பாகும். இது வாடிக்கையாளர் மதிப்பை செயல்படுத்துகிறது. கோவெஸ்ட்ரோ, 1.61 பில்லியன் யூரோ–க்கு வாங்க ஒப்புக் கொண்டிருக்கிறது. இது பங்கு மூலம் மற்றும் கடன்  ஆவணங்களின் கலவை மூலம்  அளிக்கப்படும்.


கோவெஸ்ட்ரோ நிறுவனத்தின்  முதன்மை செயல்  அதிகாரி ( டாக்டர். மார்கஸ் ஸ்டீல்மேண் (Dr. Markus Steilemann)  (Dr.Markus Steilemann, CEO of Covestro): இந்தக் கையகப்படுத்தல் எங்கள் நிறுவன வணிக உத்தியில் ஒரு முக்கியமான படியாகும். ஆர்.எஃப்.எம் எங்கள் வணிகத்தின் வளர்ச்சிப் பாதையை மேம்படுத்துகிறது. எங்கள் வலுவான கண்டுபிடிப்பு திறன்கள், நிலையான தயாரிப்பு பொருள்களின் தொகுப்பு மற்றும் இணைய தொழில்நுட்பங்கள் மற்றும் வாடிக்கையாளர் தொழில்களை இணைப்பதன் மூலம், குறிப்பிடத்தக்க மதிப்பை உருவாக்குவோம். அதே நேரத்தில், ஒரு சுழற்சி பொருளாதாரத்தை (circular economy) நோக்கி மாறுவதற்கான புதுமைகளை இயக்குவதற்கான முக்கிய படியாகும்.”

இணையத் தொழில்நுட்பங்கள் மற்றும் வாடிக்கையாளர் தொழில்கள் (Complementary technologies and customer industries)

ஆர்.எஃப்.எம் -ன் ஒருங்கிணைப்பு என்பது மேம்பட்ட அளவு மற்றும் தொழில்நுட்ப திறன் கொண்ட ஒரு வணிகத்தை உருவாக்கும். இது ஏற்கனவே இருக்கும் மற்றும் எதிர்கால வாடிக்கையாளர்களுக்கும் அதன் ஊழியர்களுக்கும் வலுவான வளர்ச்சி தளத்தின் மூலம் பலன் அளிக்கும். கோவெஸ்ட்ரோ, ஏற்கனவே தண்ணீர் சார்ந்த பாலியூரிதீன் சிதறல்களை (water-based polyurethane dispersions) வழங்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகும். ஆர்.எஃப்.எம் வணிகத்தைக் கையகப்படுத்துவது மூலம், இந்த நிறுவனம் ஒரு முழுமையான தண்ணீர் அடிப்படையிலான பாலிஅக்ரிலேட் (polyacrylate) பிசின்களை அதன் தயாரிப்பு பொருள்களின் பட்டியலில் சேர்க்கும். மேலும் அதன் தொழில்நுட்ப பிரிவைத்  தண்ணீர்  சார்ந்த கலப்பின தொழில்நுட்பங்கள், தூள் பூச்சு பிசின்கள் (water-based hybrid technologies, powder coating resins) மற்றும் கதிர்வீச்சு குணப்படுத்தும் பிசின்கள்  ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். நயாகா® (Niaga®) போன்ற வலிமையான பிராண்டுகளை உள்ளடக்கியது. மேலும், ஒட்டுப் பசை உற்பத்தி (additive manufacturing) மற்றும் மேம்பட்ட சூரிய பூச்சு (solar coatings) வணிகம் ஆகியவற்றையும் ஆர்.எஃப்.எம் வணிகம் கொண்டிருக்கிறது.  

இந்தக் கையகப்படுத்தல் கோவெஸ்ட்ரோவின் தொழிலை பன்முகப்படுத்துகிறது மற்றும் கவர்ச்சிகரமான அதிக வளர்ச்சி சந்தைகளில் நிறுவனத்தின் நிலையைக் கணிசமாகப் பலப்படுத்துகிறது.

கோவெஸ்ட்ரோ ஆப்டிகல் ஃபைபர் பூச்சுகள் துறையில் (optical fiber coatings) முன்னணி விநியோக நிறுவனங்களில் ஒன்றாக மாறும். 5ஜி  (5G) -இன் எதிர்கால தொழில்நுட்பம் உட்பட மகத்தான எதிர்கால ஆற்றல்களைக் கொண்ட சந்தைப் பிரிவு - மற்றும் 3டி (3D) அச்சிடும் பொருட்களின் கவர்ச்சிகரமான அதிக வளர்ச்சி பிரிவில், ஆண்டு சராசரி வளர்ச்சி விகிதம் 20% க்கும் அதிகமாக இருக்கும். 

மேலும், ஒருங்கிணைந்த புவியியல் தடத்தில் அனைத்து முக்கிய சந்தைகளிலும் வாடிக்கையாளர்களுடன் கோவெஸ்ட்ரோவின் நெருக்கம் வலுவாகிறது. அதன் உலகளாவிய உற்பத்தி 20க்கும் மேற்பட்ட தளங்களால் விரிவுபடுத்தப்படுகிறது.

இரு வணிகங்களிலும், இந்த நிறுவனம் லட்சிய .எஸ்.ஜி (Environment, Social, Governance சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூக அக்கறை, நல்ல நிர்வாகம்) குறிக்கோள்களுக்கு உறுதியளித்துள்ளது. மேலும் ஒரு சிறந்த மற்றும் நவீன ஆராய்ச்சி முறையைக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, பூச்சு தொழிலுக்கு நிலையான உயர் செயல்திறன் கொண்ட மூலப்பொருட்களின் பகுதியில் இந்த ஆராய்ச்சியைக் கொண்டிருக்கிறது. அவற்றை இணைப்பது கோவெஸ்ட்ரோ பூச்சு பிசின்கள் துறையில் இன்னும் புதுமையானதாக மாற அனுமதிக்கும். அதன் வாடிக்கையாளர்களுக்கு இன்னும் கவர்ச்சிகரமான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) கூட்டாளராக மாறும்.

இதன் மூலம், கோவெஸ்ட்ரோ புதுமைகளைச் செயல்படுத்தவும், வாடிக்கையாளர் ஒருங்கிணைந்த தொழில்களில் நிலைத்தன்மையை மேம்படுத்தவும், சுழற்சி பொருளாதாரத்தில் மாற்றத்தை இன்னும் வேகமாகத் தொடரவும் முடியும்.

மதிப்பு உருவாக்கத்திற்கான குறிப்பிடத்தக்க சக்தி ஆற்றல் (Significant potential for value creation)

கோவெஸ்ட்ரோவின் சி.ஏ.எஸ் (CAS) பிரிவுடன் ஆர்.எஃப்.எம் (RFM) வணிகத்தை ஒருங்கிணைப்பது மதிப்பை  அதிகரிக்கும். மேலும் குறிப்பிடத்தக்க வாய்ப்புகளை உருவாக்குகிறது.

வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் முழு ஒருங்கிணைப்பு நடைபெறும் போது, ஆண்டுக்கு சுமார் 120 மில்லியன் யூரோ வரை உருவாகும் என நிறுவனம் எதிர்பார்க்கிறது.

இவை சுமாராக மூன்றில் இரண்டு பங்கு செலவு மற்றும் வருவாய்  ஒருங்கிணைப்பில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டிருக்கின்றன. மேலும் ஒருங்கிணைந்த வணிகத்தில் கொள்முதல், விற்பனை மற்றும் நிர்வாகக் கட்டமைப்புகள் (purchasing, sales and administrative  structures) மற்றும்  மொத்த விற்பனை (cross-selling) மற்றும் புதிய உயர் செயல்திறனின் கூட்டு வளர்ச்சி ஆகியவற்றின் மூலம்  புதிய தயாரிப்பு பொருள்கள் உருவாக்கப்படுகின்றன.

கவர்ச்சிகரமான மதிப்பீடு மற்றும் நிதி அமைப்பு (Attractive valuation and financing structure)

ஆர்.எஃப்.எம் - ல் பணத்திற்குச் சமமானவற்றைக் கருத்தில் கொண்டால், மொத்த கொள்முதல் விலையான 1.61 பில்லியன் யூரோ என்பது நிகர நிறுவன மதிப்பு, ஏறக்குறைய 1.55 பில்லியன் யூரோக்கு ஒத்திருக்கிறது. இது ஆர்.எஃப்.எம் மதிப்பீட்டை சுமார் 5.7x EV/EBITDA 2021 -ல்  ஆகக் குறிக்கிறது. இது ரன்-ரேட் சினெர்ஜிகள் (run-rate synergies) சேர்ந்ததாகும். ரன்-ரேட் சினெர்ஜிகளைத் தவிர்த்து EV / EBITDA 10.3x மடங்காக இருக்கும். உறுதியான முதலீட்டுத் தர மதிப்பீட்டைப் பராமரிப்பதில் நிறுவனத்தின் உறுதிப்பாட்டுக்கு இணங்க, பங்கு மூலதனம், கடன் சார்ந்த ஆவணங்கள் மற்றும் சொந்த பணம் ஆகியவற்றின் கலவையுடன் மறுநிதியளிப்பு மேற்கொள்ள கோவெஸ்ட்ரோ விரும்புகிறது. இது நிதி ஒப்பந்தத்தின் (financing agreement) மூலம் நிதி பாதுகாக்கப்படுகிறது.

இந்த நோக்கத்திற்காக, கோவெஸ்ட்ரோ அதன் தற்போதைய அங்கீகரிக்கப்பட்ட பங்கு மூலதனம் (authorized share capital) அடிப்படையில் பங்கு வெளியீடு மூலம் சுமார் 450 மில்லியன் யூரோ திரட்ட திட்டமிட்டுள்ளது.

" இந்தக் கையகப்படுத்தல் வணிக உத்தி, நிதி ரீதியாகவும் எங்கள் நீண்ட கால வளர்ச்சி உத்தியை மிகவும் கவர்ச்சிகரமான சூழ்நிலைகளிலும் உறுதியான நிலையில் தொடர எங்களுக்கு ஒரு சரியான வாய்ப்பை அளித்திருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட நிதி கட்டமைப்பால், பங்கு மூலதனம் மற்றும் கடன் பத்திர வெளியீட்டுக்கும் இடையில் சரியான சமநிலையை நாங்கள் செயல்படுத்துகிறோம், ”என்கிறார் கோவெஸ்ட்ரோ சி.எஃப். மற்றும் தொழிலாளர் பிரிவு இயக்குநர் டாக்டர் தாமஸ் டோஃபர் (Dr. Thomas Toepfer, Covestro CFO and Labor Director)

"எங்கள் புதிய சக பணியாளர்களை விரைவில் கோவெஸ்ட்ரோ கூரையின் கீழ் வரவேற்க நாங்கள்  தயாராக இருக்கிறோம். ஒன்றாக, எங்கள் கூட்டுத் திறனை மேற்கொள்ள நாங்கள் செயல்படுவோம். "

இந்தக் கையகப்படுத்தலுக்கான பரிவர்த்தனைகள் 2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில்  நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இது ஒழுங்குமுறை அனுமதி ஒப்புதல்களுக்கு உட்பட்டது.

கோவெஸ்ட்ரோ பற்றி (About Covestro): 2019 ஆம் ஆண்டில் யூரோ 12.4 பில்லியன் (EUR 12.4 billion) விற்பனையுடன், கோவெஸ்ட்ரோ உலகின் மிகப்பெரிய பாலிமர்  உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாகும். உயர் தொழில்நுட்ப பாலிமர் பொருட்களின் உற்பத்தி மற்றும் அன்றாட வாழ்க்கையின் பல பகுதிகளில் பயன்படுத்தப்படும் தயாரிப்புகளுக்கான புதுமையான தீர்வுகளை மேம்படுத்தும் வணிக நடவடிக்கைகளில் இந்த நிறுவனம் கவனம் செலுத்துகிறது. முக்கிய பிரிவுகளாக வாகனம், கட்டுமானம், மர பதப்படுத்துதல் மற்றும் ஃபர்னிச்சர் மற்றும் மின் மற்றும் மின்னணு தொழில்கள் ஆகியவை உள்ளன. இதர துறைகளில் விளையாட்டு மற்றும் ஓய்வு, அழகுசாதன பொருட்கள், சுகாதாரம் மற்றும் ரசாயனத் தொழில் ஆகியவை அடங்கும். கோவெஸ்ட்ரோ சர்வதேச அளவில் 30 உற்பத்தி தளங்களைக் கொண்டுள்ளது. 2019 ஆம் ஆண்டின் இறுதியில் சுமார் 17,200 பேர் (முழுநேர பணியாளர்களுக்கு இணையானவர்கள் கணக்கிடப்படுகிறது) பணிபுரிகிறார்கள்.

மேலும் கூடுதல் தகவல்களுக்குப் பார்வையிடவும் www.covestro.com. 

Forward-looking statements

This news release may contain forward-looking statements based on current assumptions and forecasts made by Covestro AG. Various known and unknown risks, uncertainties and other factors could lead to material differences between the actual future results, financial situation, development or performance of the company and the estimates given here. These factors include those discussed in Covestro’s public reports which are available at www.covestro.com. The company assumes no liability whatsoever to update these forward-looking statements or to conform them to future events or developments.

 

 

For media queries please connect:

Kavita Pandey (+91 8691991746)

Senior PR Executive,

Blue Lotus Communications.

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

சந்தை இறக்கத்தை சமாளிப்பது எப்படி? 2024 டிசம்பர் 28, சென்னை BAJAJ FINSERV

ப்ரகலா வெல்த் பி.லிட் மற்றும் BAJAJ FINSERV வழங்கும் சந்தை இறக்கத்தை சமாளிப்பது எப்படி?  சென்னையில்  மியூச்சுவல் ஃபண்ட் (Mutual Fund) முதலீட...