CAMS கேம்ஸ் பங்கு விலை முதல் நாளில் 23% அதிகரிப்பு..!
மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் பிற நிதிச் சேவை நிறுவனங்களுக்கு நிதி சார்ந்த உட்கட்டமைப்பு மற்றும் சேவைகளை வழங்கும் தொழில்நுட்ப நிறுவனம் கேம்ஸ் (CAMS)ஆகும்..
2020, செப்டம்பர் 21 முதல் 23 வரை இந்நிறுவனம் புதிய
பங்கு வெளியீட்டில் (ஐ.பி.ஓ) களம் இறங்கியது. மொத்தம் ரூ. 2,245 கோடி திரட்டுகிறது.
இந்த நிறுவனத்தின் பங்குகள் கேட்டு 47 மடங்கு அதிக விண்ணப்பங்கள் வந்தன.
பங்கு ஒன்று ரூ. 1,230-க்கு முதலீட்டாளர்களுக்கு
ஒதுக்கி வழங்கப்பட்டது.
பட்டியலிடப்பட்ட அன்று பங்கின் விலை வெளியீட்டு விலையை விட 23% அதிகரித்து ரூ.1,518 என்கிற விலையில் வர்த்தகத்தை ஆரம்பித்தது.