மொத்தப் பக்கக்காட்சிகள்

ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க், புதிய பங்கு வெளியீடு 20 அக்டோபர் 2020 ஆரம்பம்

 

ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் லிமிடெட், புதிய பங்கு வெளியீடு 20 அக்டோபர் 2020 அன்று ஆரம்பம்

 

·      சம பங்கு ஒன்றின் விலைப்பட்டை ரூ. 32 முதல் ரூ.  33

·      பங்கு வெளியீட்டு காலம்,  20 அக்டோபர் 2020 முதல்  22 அக்டோபர் 2020  

 

மும்பை, அக்டோபர் 15, 2020: ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ்  பேங்க் லிமிடெட் (Equitas Small Finance Bank Limited), 2019  நிதி ஆண்டு நிலவரப்படி, கிளைகளின் எண்ணிக்கை, நிர்வகிக்கும் சொத்து மற்றும் மொத்த டெபாசிட்கள்  அடிப்படையில் இந்தியாவின்  இரண்டாவது மிகப் பெரிய ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் (Small Finance Bank - SFB)) ஆகும். (ஆதாரம்; கிரிசில் அறிக்கை). இது, ரூ.10 முகமதிப்பு (Face Value) கொண்ட சமபங்குகளின் (Equity Shares) புதிய பங்கு வெளியீட்டை (Initial Public Offer - IPO) 2020 அக்டோபர் 20-ம் தேதி ஆரம்பிக்கிறது. இந்தப் பங்கு வெளியீடு 2020 அக்டோபர் 22 ஆம் தேதி நிறைவு பெறுகிறது.

 பங்கின் விலைப்பட்டை, சமபங்கு ஒன்றுக்கு ரூ. 32 முதல் ரூ.33 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. பொது மக்களுக்கான புதிய பங்கு விற்பனையில் இந்த நிறுவனத்தின் புதிய  பங்குகள் (the “Fresh Issue”) ரூ.2,800 மில்லியனுக்கு விற்பனை செய்யப்படுகிறது. மற்றும் பங்குச் சந்தை மூலமான விற்பனையில், நிறுவனர் விற்கும் பங்குகள்,  ஈக்விட்டாஸ் ஹோல்டிங்ஸ் லிமிடெட் (Equitas Holdings Limited) –ன் (Offer for Sale) 72,000,000  பங்குகள் விற்பனை செய்யப்படுகிறது.  

இந்தப் பங்கு விற்பனையில் மொத்தம் ரூ.510 மில்லியன் மதிப்புள்ள பங்குகள், தகுதியான .ஹெச்.எல் (EHL) பங்குதாரர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. மற்றும் ரூ. 10 மில்லியன் மதிப்புள்ள பங்குகள், தகுதியான ஊழியர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. ஈ.ஹெச்.எல் பங்குதாரர் ஒதுக்கீடு பகுதி மற்றும் பணியாளர் ஒதுக்கீடு இனி நிகரச் சலுகை (Net Offer) என்று குறிப்பிடப்படுகிறது. குறைந்தபட்சம் 450  சம பங்குகளுக்கு ஏலம் கேட்க வேண்டும். அதன் பின்னர் 450  பங்குகளின் மடங்குகளில் ஏலம் எடுக்கலாம்.

 

 

இந்தச் சமபங்குகள் பி.எஸ்.இ லிமிடெட் மற்றும் நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ஆஃப் இந்தியா லிமிடெட் (என்.எஸ்.இ) இரண்டிலும் பட்டியலிட உத்தேசிக்கப்பட்டுள்ளன. பங்கு வெளியீட்டுக்கு, என்.எஸ்.இ நியமிக்கப்பட்ட சிறப்பு பங்குச் சந்தை ஆகும்.  ஜே.எம் ஃபைனான்ஸியல் லிமிடெட், எடெல்வைஸ் ஃபைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் மற்றும் ஐ.ஐ.எஃப்.எல் செக்யூரிட்டீஸ் லிமிடெட் ஆகியவை  இந்தப் பங்கு விற்பனைக்கு (BRLMs-பிஆர்எல்எம்) முன்னணி மேலாளர்களாக செயல்படுகிறார்கள்.


1957 ஆம் ஆண்டின், பத்திரங்கள்
 ஒப்பந்தங்கள் (ஒழுங்குமுறை) விதிமுறைகள்  (Securities Contracts (Regulation)  19(2)(b)-ன் படி செபி அமைப்பின் விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்தப் பங்கு வெளியீடு நடக்கிறது. இந்த விதிமுறைபடி, ஏலமுறையில் (Book Building Process) பங்கு விற்பனை நடக்கிறது. நிகர பங்கு விற்பனையில் குறைந்தபட்சம் 50%, தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களுக்கு (Qualified Institutional Buyers- QIBs)  ஒதுக்க வேண்டும். இதில், 60% விருப்பத்தின் அடிப்படையில் பெரிய முதலீட்டாளர்களுக்கு (Anchor Investors) செபியின் விதிமுறைப்படி ஒதுக்கப்படும். இதில் மூன்றில் ஒரு பங்கு, பங்குகள் ஆங்கர் முதலீட்டாளர்கள் ஏலம் கேட்டுள்ள விலை அல்லது அதை  விட அதிகமாக இருக்கும்பட்சத்தில்  அவை உள்நாட்டு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படும்.

 

பங்குகள் கேட்டு குறைவாக விண்ணப்பிக்கப்பட்டிருக்கும்பட்சத்தில் அல்லது ஆங்கர் முதலீட்டாளர்களுக்கு பங்குகள் ஒதுக்கப்படவில்லை என்றால் மீதமுள்ள பங்குகள் தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படும். மேலும், நிகர கியூ.ஐ.பி ஒதுக்கீட்டில் 5% பங்குகள் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் ஒதுக்கப்படும். மீதமுள்ள கியூ.ஐ.பி ஒதுக்கீட்டில் உள்ள பங்குகள் விகிதாச்சார அடிப்படையில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் உள்ளிட்ட கியூ.ஐ.பி நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படும்.

 

அதேநேரத்தில், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின்  மொத்த தேவை கியூ.ஐ.பி பகுதியின் 5% க்கும் குறைவாக இருந்தால், மியூச்சுவல் ஃபண்ட் பகுதியில் ஒதுக்கீடு செய்ய இருக்கும் பங்குகள் கியூ.ஐ.பிகளுக்கு விகிதாசார ஒதுக்கீட்டிற்காக மீதமுள்ள கியூ.ஐ.பி பகுதியில் சேர்க்கப்படும்.

 

மேலும், மொத்தப் பங்கு வெளியீட்டில் 15 சதவிகிதத்துக்கு குறையாமல் விகிதாச்சார அடிப்படையில் நிறுவனம் சாராத (Non-Institutional) முதலீட்டாளர்களுக்கும், 35 சதவிகிதத்துக்கு குறையாமல் விகிதாச்சார அடிப்படையில் சிறு தனிநபர் முதலீட்டாளர்களுக்கும் (Retail Individual Investors) பங்குகள் ஒதுக்கப்படும். பங்கு வெளியீட்டு விலை (Offer Price) அல்லது அதற்கு அதிகமான விலையில் கேட்கப்பட்டால் செபி விதிமுறைகள் படி இப்படி பங்குகள் ஒதுக்கப்படும். அனைத்து சாத்தியமான ஏலதாரர்களும் (ஆங்கர் முதலீட்டாளர்களைத் தவிர) விண்ணப்பத்தை கட்டாயமாக பயன்படுத்துவது தேவையாக உள்ளது.


அனைத்து முதலீட்டாளர்களும் (ஆங்கர் முதலீட்டாளர்கள் தவிர) அனைவரும்
 அஸ்பா  (ASBA - Applications Supported by Blocked Amount) முறை. யூ.பி.ஐ ஐ.டி முறையில் (UPI ID) பங்குகளுக்கு  விண்ணப்பிக்க வேண்டும். இந்த முறையில் பங்குகள், ஒதுக்கீடு செய்யப்பட்டால் மட்டுமே முதலீட்டாளர் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்படும். அதேநேரத்தில், விண்ணப்பத்துக்கான தொகை வங்கி கணக்கில், யூ.பி.ஐ கணக்கில் முடக்கி  (Blocked) வைக்கப்பட்டிருக்கும்.  ஈ.ஹெச்.எல் பங்கு முதலீட்டாளர் ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் ஈ.ஹெச்.எல் பங்கு முதலீட்டாளர்களும் இந்த முறையிலேயே விண்ணப்பிக்க வேண்டும்.

ஆங்கர் முதலீட்டாளர்கள் இந்த அஸ்பா முறையில் விண்ணப்பிக்க அனுமதி இல்லை.

 

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

சந்தை இறக்கத்தை சமாளிப்பது எப்படி? 2024 டிசம்பர் 28, சென்னை BAJAJ FINSERV

ப்ரகலா வெல்த் பி.லிட் மற்றும் BAJAJ FINSERV வழங்கும் சந்தை இறக்கத்தை சமாளிப்பது எப்படி?  சென்னையில்  மியூச்சுவல் ஃபண்ட் (Mutual Fund) முதலீட...