Multi cap Fund SEBI New Norm
மல்டி கேப் ஃபண்ட்: செபி புது விதிமுறை என்ன சொல்கிறது?
இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையை நெறிப்படுத்தும் செபி அமைப்பு, மல்டி கேப் ஃபண்ட்களில் திரட்டப்படும் நிதியை எப்படி முதலீடு செய்ய வேண்டும் என்பது குறித்த விதிமுறையை மீண்டும் 2020 செப்டம்பர் 11 ஆம் தேதி மாற்றி அமைத்திருக்கிறது.
இதற்கு முன் மல்டி கேப் ஃபண்டில் லார்ஜ் கேப், மிட் கேப், மிட் கேப், ஸ்மால் கேப் பங்குளில் 65% தொகையை பிரித்து முதலீடு செய்யப்பட வேண்டும் என்று இருந்தது.
எந்தப் பங்கு பிரிவில் எவ்வளவு என தனியே குறிப்பிடவில்லை என்பதால், பெரும்பாலும் லார்ஜ் கேப் பங்குகளில் அதிக முதலீடு செய்யப்பட்டது
செபியின் புது விதிமுறை
இப்போது செபியின் புதிய விதிமுறைப்படி குறைந்தபட்சம் தலா 25%
லார்ஜ் கேப், மிட் கேப், மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் நிறுவனப் பங்குகளில்
முதலீடு செய்ய வேண்டும்.
அதாவது, இந்த மூன்று பிரிவுகள் மொத்தம் 75% முதலீடு செய்ய வேண்டும். புதிய விதிமுறையை 2021 ஜனவரி 31-ம் தேதிக்குள் பின்பற்ற வேண்டும்.
2020 ஆகஸ்ட் நிலவரப்படி இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் மல்டி ஃபண்ட்கள் மூலம் நிர்வகிக்கப்படும் தொகை சுமார் ரூ. 1.36 லட்சம் கோடியாக இருக்கிறது. பெரும்பாலான மல்டி கேப் ஃபண்ட்களில் லார்ஜ் கேப் பங்குகளில்தான் அதிகமாக முதலீடு செய்யப்பட்டிருந்தது.
அதாவது, 2020 ஆகஸ்ட் நிலவரப்படி, மல்டி கேப்
ஃபண்ட்களில் ஒட்டு மொத்தமாக 68.13% லார்ஜ் கேப் பங்குகளில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. மிட்
கேப் பங்குகளில் 16.1%, ஸ்மால் கேப் பங்குகளில் 9% முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.
சுமார் 6.73% தொகை ரொக்கமாக வைக்கப்பட்டிருந்தது.