மொத்தப் பக்கக்காட்சிகள்

தென்னிந்தியர் டேர்ம் பிளான் எடுத்திருப்பது மிகக் குறைவு

 

தென்னிந்தியர் டேர்ம் பிளான் எடுத்திருப்பது மிகக் குறைவு Max Life Insurance Company

 

டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்தும், தென்னிந்தியர்களின் காப்பீடு பாதுகாப்பு அளவு கோவிட் - 19  காலத்தில் 46 ஆக உள்ளது.  மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும்போது டேர்ம் பிளான் எடுத்திருப்பது மிகக் குறைவு, மேக்ஸ் லைஃப் நிறுவனத்தின் ஐ.பி.கியூ எக்ஸ்பிரஸ்-ன் ஆய்வில் வெளிப்பாடு

·         தென்னிந்தியர்களின் காப்பீடு பாதுகாப்பு அளவு 46 ஆக உள்ளது. இது தேசிய சராசரியான 45 –ஐ ஒட்டி உள்ளது.

·         டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்தும், தென்னிந்தியர்களில் 86 சதவிகிதத்தினரை கோவிட் -19 பாதிப்பு செயல்திறன் மிக்க நிதித் திட்டமிடலை நோக்கி நகர்த்தி உள்ளது.

·         மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும்போது டேர்ம் பிளான் எடுத்திருப்பது மிகக் குறைவு

·         கோவிட் 19 இன் போது வேலை பாதுகாப்பு மற்றும் அதிகரிக்கும் தொற்று பரவலின் அதிக எண்ணிக்கை கவலைக்கு முக்கிய காரணம்

·         கோவிட்-19 சிகிச்சை மற்றும் மருத்துவ அவசரநிலைகளுக்கு தென்னிந்தியர்கள் சேமிக்கிறார்கள்.

 கோவிட்-19 க்கு மத்தியில் நாட்டு மக்களிடையே அதிக நிதி பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அதன் உறுதிப்பாட்டை  மேகஸ் லைஃப் இன்ஷுரன்ஸ் கம்பெனி லிமிடெட் (Max Life Insurance Company Ltd. - “Max Life”/ “Company”) வலுப்படுத்தி இருக்கிறது. இதனை ஒட்டி அது கன்டார் (KANTAR) நிறுவனத்துடன் இணைந்து அதன் முதன்மை கணக்கெடுப்பான ‘மேக்ஸ் லைஃப் இந்தியா காப்பீடு பாதுகாப்பு அளவு- எக்ஸ்பிரஸ் (“IPQ / IPQ எக்ஸ்பிரஸ்) இன் கோவிட்-19 பதிப்பின் கண்டுபிடிப்புகளை வெளியிட்டிருக்கிறது.

ஐ.பி.கியூ எக்ஸ்பிரஸ் (IPQ Express) என்ற தலைப்பில்,  இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இது, கோவிட்-19 காலங்களில் ஆதிக்கம் செலுத்தும் நுகர்வோர் உணர்வை வெளிப்படுத்தியது. மேலும், நிதிச் சார்ந்த பாதுகாப்பு, சேமிப்பு மற்றும் முதலீடுகள், மருத்துவச் செலவுக்குத் தயார்நிலை, முக்கிய கவலைகள் மற்றும் புதிய ஏற்றுக்கொள்ளும் நிலைகள் தொடர்பாக டிஜிட்டல் ஆர்வமுள்ள நகர்ப்புற இந்தியர்கள் எவ்வாறு பாதுகாப்பு பாலிசிகளை எடுக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடித்திருக்கிறது.

டிஜிட்டல் ஆர்வமுள்ள, தென்னிந்தியாவின் நகர்ப்புறத்தை சேர்ந்தவர்கள் கோவிட்-19 காலங்களில் காப்பீடு பாதுகாப்பு அளவு 46 –ஐ வெளிப்படுத்தினர். இது தேசிய சராசரியான 45-க்கு மிக நெருக்கமாக உள்ளது. தென்னிந்தியர்கள், மிக  அதிகமாக ஆயுள் காப்பீட்டு  பாலிசிகளை அதாவது 78% (வட நாட்டுக்கு இணையாக) கொண்டிருக்கிறார்கள். கிழக்கு பிராந்தியத்தில் 77%, மேற்கு  இந்தியாவில் 73% பேர் ஆயுள் பாலிசிகளை எடுத்திருக்கிறார்கள்.

தென்னிந்திய பிராந்தியத்தின் ஆயுள் காப்பீட்டு அறிவு குறியீடு (life insurance knowledge index) 68 ஆக  அதிகமாக உள்ளது. அடுத்த இடங்களில் கிழக்கு (67), வடக்கு (66) மற்றும் மேற்கு (63) உள்ளன. அதேநேரத்தில், தென் பிராந்தியத்தில் நிதிப் பாதுகாப்பு நிலைகள் (financial security levels) மிகக் குறைவாக இருந்தன. இந்த சர்வேயில் பதிலளித்தவர்களில் 48% மட்டுமே பாதுகாப்பான மனப்பான்மையை உணர்கிறார்கள். வடக்கு மற்றும் மேற்கில் 53% பதிலளித்தவர்களுக்கும், கிழக்கு பிராந்தியத்தில் 52% பேரும் பாதுகாப்பான மனப்பான்மையுடன் இருப்பதாக உணர்கிறார்கள்.

ஐ.பி.கியூ எக்ஸ்பிரஸ் கண்டுபிடிப்புகள் குறித்து கருத்து தெரிவிக்கையில், மேக்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் இயக்குநரும் முதன்மை சந்தைப்படுத்தல் அதிகாரியுமான ஆலோக் பன் (Aalok Bhan, Director and Chief Marketing Officer, Max Life Insurance) கூறும் போது கோவிட்-19 நம் அனைவருக்கும் தனித்துவமான சூழ்நிலைகளை உருவாக்கியுள்ளது. நிலைமை நம்மை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதித்தது மட்டுமல்லாமல்,  நிதிச் சவால்களையும் உருவாக்கி உள்ளது. கோவிட்-`19 சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மைகளைக் கருத்தில் கொண்டு, குடும்பத்தில் அன்புக்குரியவர்களின் நிதி எதிர்காலத்தைப் பாதுகாப்பதில் ஆயுள் காப்பீட்டின் முக்கியத்துவத்தைத் தனிநபர்கள் அங்கீகரிப்பது முக்கியம். தென் பிராந்தியத்தை சேர்ந்தவர்கள் அதிக  எண்ணிக்கையில் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளை பெற்றிருப்பதோடு, ஆயுள் காப்பீடு அறிவையும்  பெற்றிருக்கிறார்கள். அதேநேரத்தில், பிற பிராந்தியங்களுடன் ஒப்பிடும் போது, மோசமான பாதுகாப்பு மனப்பான்மை நிலைகளைக் கொண்டிருக்கிறார்கள். மற்றும் குறைந்த பிரீமியத்தில் அதிக கவரேஜ் அளிக்கும் முதிர்வு தொகை கிடைக்காத முழுமையான பாதுகாப்பு பாலிசியான டேர்ம் பிளான்களை குறைந்த எண்ணிக்கையில் எடுத்திருக்கிறார்கள்.என்றார்

*      முக்கிய கண்டுபிடிப்புகள் (Key Findings)

®     கோவிட்-19, டிஜிட்டல் ஆர்வமுள்ள 86% தென்னிந்தியர்களைச் செயல்திறன் மிக்க நிதி திட்டமிடல் நோக்கிச் செலுத்தியுள்ளது

ஐ.பி.கியூ எக்ஸ்பிரஸ் சர்வேயில் தென் பிராந்தியம், நிதி பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தி இருக்கிறது. கிழக்கு இந்தியாவில் 81% பதிலளித்தவர்களும், மேற்கில் 79% பதிலளித்தவர்களும், வட இந்தியாவில் 84% பதிலளித்தவர்களும் நிதித் திட்டமிடல் குறித்து அதிக அக்கறையுடன் இருக்க வேண்டும் என்று தற்போதைய சூழ்நிலை சொல்கிறது என  கருத்து தெரிவித்திருக்கிறார்கள். இந்த மாற்றம் தென் இந்தியாவில் மிக அதிகமாக உள்ளது. அங்கு 86% பதிலளித்தவர்கள்  செயல்திறன் மிக்க நிதி திட்டமிடலுக்கு தயாராக வேண்டும் எனச் சொல்லி இருக்கிறார்கள்.

®     ஆனால், தென்னிந்தியாவில் டேர்ம் பிளான் எடுத்திருப்பது மிகவும் குறைவாக உள்ளது. குறிப்பாக, நாட்டின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடுகையில் இது குறைவாக உள்ளது

ஐ.பி.கியூ எக்ஸ்பிரஸ் கணக்கெடுப்பு, பிராந்தியங்களில் அதிக ஆயுள் காப்பீட்டு பாலிசிகளை கொண்டிருந்தாலும், தென்னிந்தியாவில் டேர்ம் பிளான் எடுத்திருப்பது மிகக் குறைவு என்று தெரிய வந்துள்ளது. பல்வேறு வகையான ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களில், 38% டிஜிட்டல் ஆர்வமுள்ளவர்கள், தென்னிந்திய பதிலளித்தவர்கள் எண்டோமென்ட்  திட்டங்களை வைத்திருக்கிறார்கள், 34% மட்டுமே டேர்ம் பிளான் காப்பீடு வைத்திருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து 19%  பங்குச் சந்தையுடன் இணைக்கப்பட்ட திட்டங்களை (யூலிப்கள்) வைத்திருக்கிறார்கள்.

மற்ற பிராந்தியங்களுடன் ஒப்பிடும் போது, தென்னிந்தியாவில் டேர்ம் பாலிசி எடுத்திருப்பது 34% ஆக உள்ளது. இது கிழக்கு, மேற்கு மற்றும் வடக்கை விட குறைவாக உள்ளது, அங்கு முறையே 40%, 37% மற்றும் 35% பதிலளித்தவர்கள் முறையே டேர்ம் காப்பீட்டு திட்டங்களை வைத்திருக்கிறார்கள்.

®     தென்னிந்தியாவைப் பொறுத்தவரை, கோவிட்-19 இன் போது வேலை பாதுகாப்பு மற்றும் அதிகரித்த தொற்று பரவலின் எண்ணிக்கை கவலைக்கு முக்கிய காரணம்

டிஜிட்டல் ஆர்வலர்கள், தென்னிந்தியாவின் நகர்ப்புற பதிலளிப்பவர்கள் கோவிட்-19 பரவல் எண்ணிக்கை அதிகரிப்பது மற்றும் தற்போதைய சூழ்நிலைகளின் அடிப்படையில் வேலை பாதுகாப்பு குறித்து அதிக அக்கறை கொண்டுள்ளனர் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

கோவிட்-19 இன் பரவல் மற்றும் பாதிப்பு அதிகரித்து வருவதால், குடும்பத்தில் யாரோ ஒருவர் இரையாகிவிடுவதைப் பற்றிய கவலைகள் தென்னிந்தியாவில் 69% பேரின் கவலைக்கு மிகப்பெரிய காரணமாக இருந்தது. வேலை பாதுகாப்பு மற்றும் வருமான ஸ்திரத்தன்மை ஆகியவை கோவிட்-19 சிகிச்சையின் செலவைத் தக்கவைத்துக் கொள்வதைப் பற்றி 66 சதவிகிதம் இரண்டாவது பெரிய கவலையாக இருந்தது. ஒரு குடும்பத்தில் சம்பாதிப்பவர் (breadwinner) இல்லாத நிலையில் குடும்பத்தின் நிதிப் பாதுகாப்பு 64 சதவிகித கவலைக்கு மூன்றாவது பெரிய காரணமாகும்.

®     கோவிட்-19 சிகிச்சை மற்றும் மருத்துவ செலவு அவசர நிலைகள் ஆகியவை தென்னிந்தியாவில் சேமிப்புக்கு முன்னுரிமை கொடுத்திருக்கிறது

அதேநேரத்தில், இந்தக் கணக்கெடுப்பு தென்னிந்தியாவின் ஒட்டுமொத்த சேமிப்பு நோக்கங்களில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கண்டறிந்துள்ளது. குடும்பத்தில் யாராவது ஒருவர் பாதிக்கப்பட்டால் கோவிட்-19 சிகிச்சைக்காக சேமிப்பது, 57% பதிலளித்தவர்களின் மிக உயர்ந்த சேமிப்பு நோக்கமாக இருக்கிறது. இதற்கு அடுத்த நிலையில், தீவிர மருத்துவ அவசர செலவுகளுக்காக (critical medical emergencies) சேமிப்பது, மற்ற பிராந்தியங்களுடன் ஒப்பிடும் போது, தென்னிந்தியாவில் மிக அதிகமாக 56% பேர் சேமித்திருக்கிறார்கள். தீவிர மருத்துவ அவசர செலவுகளுக்கு சேமிப்பது என்பது வடக்கு மற்றும் மேற்கில் 52% பதிலளித்தவர்களுக்கும், கிழக்கு இந்தியாவில் 51% பதிலளித்தவர்களுக்கும் முன்னுரிமையாக இருந்தது.

 

About Max Life Insurance (www.maxlifeinsurance.com)

Max Life Insurance Co. Ltd. (“Max Life”) is a joint venture between Max Financial Services Ltd. and Mitsui Sumitomo Insurance Co. Ltd. Max Financial Services Ltd. is a part of the Max group, an Indian multi business corporation, while Mitsui Sumitomo Insurance is a member of MS&AD Insurance group.

Max Life offers comprehensive protection and long-term savings solutions, through its multichannel distribution including agency and third distribution partners. Max Life has built its operations over almost two decades through need-based sales process, a customer-centric approach to engagement and service delivery and trained human capital.  

As per public disclosures, during the financial year 2019-20, Max Life achieved gross written premium of Rs. 16,184 crore. As on 31st March 2020, the Company had Rs. 68,471 crore of assets under management (AUM) and a Sum Assured in Force of Rs. 913,660 crore.

For more information, please visit the company's website at www.maxlifeinsurance.com

About Kantar

About Kantar: Kantar is the world’s leading evidence-based insights and consulting company. We have a complete, unique and rounded understanding of how people think, feel and act; globally and locally in over 90 markets. By combining the deep expertise of our people, our data resources and benchmarks, our innovative analytics and technology, we help our clients understand people and inspire growth.

Disclaimer

        The study is conducted in top 25 urban metro, Tier 1 & Tier 2 cities

        The study was administered to a total sample size of 1864 respondents across 6 metros, 9 Tier 1 and 10 Tier 2 cities

        Metro – Delhi, Kolkata, Chennai, Bangalore, Hyderabad, Mumbai o Tier 1 – Ludhiana, Jaipur, Lucknow, Patna, Bhubaneshwar, Vishakhapatnam, Ahmedabad, Bhopal, Pune

        The minimum sample to conclude any findings of the study is 270 with an error margin of +- 5.964%.

        ^^IPQ Express - 47|Representative of Metro + Tier 1

        Overall number reported in the document is representative of Metro + Tier 1 cities

        Data quoted for Gender cut and Millennials and Non-Millennials is representative of Metro + Tier 1 + Tier 2 cities

 

 

 

 

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund   மதுரை பெண்களே ஜெயி...